|
சேரும் பொய்கை என்றும் கூட்டி உரைக்க; கூந்தல் கலவை சேர்தரு கண்ணியன் - தமது புரிசடையும் அம்மையாரது கூந்தலும் சேர்ந்து கலக்கும்படி கண்ணி சூடியவர்; நின்று நின்று - அடுக்குப் பல படியாக என்ற பொருள் தந்துநின்றது நின்று ஏத்துவார் மேல்வினை நிற்க கில்லா என்றது சொல்லணி நயம்; - (8) குணம் - நற்குணம்; குணமுடையவராவர்; குணமுடையவர்தாம் ஏத்துவார் என்று கூட்டினுமமையும்; முன் விதியுடையவர் தாமே (5) என்றவிடத்தும் இவ்வாறு கூட்டினும் அமையும்; - (9) துயின்றவன் அயனொடு - துயின்றவனும் அயனும்; - (10) அடியார் பெருமை கூறிற்று; - (11) மாலதாய் - மால் - இங்கு மிக்க அன்புமுதிர்ச்சியின் மெய்ப்பாடு குறித்தது; கனம் - மேகம். |
தலவிசேடம் :- திருக்கடிக்குளம் - காவிரித் தென்கரை 109வது தலம். இது கற்பகநாதர் கோயில், கற்பகனார் கோயில், கற்பகனார் குளம் என்று பலவாறும் இறைவனார் பெயருடன் சேர்த்து வழங்கப்படும். கற்பகவிநாயகர் பூசித்து மாம்பழம் பெற்ற வரலாறுபற்றி இப்பெயரெய்தியதென்பர்; இவ்விநாயகமூர்த்தி கோயிலுக்கு வெளியே தென்மேற்கு மூலையில் எழுந்தருளிவுள்ளார். சுவாமி - கற்பகநாயகர்; அம்மையார் - சௌந்தரநாயகி; தீர்த்தம் - விநாயகதீர்த்தம்; பதிகம் 1. |
இது பாண்டி என்னும் நிலயத்தினின்றும் தெற்கே மட்சாலையில் வேதாரணியம் - முத்துப்பேட்டை மட்சாலை சந்திக்குமிடத்திலிருந்து கிழக்கே அரை நாழிகையளவில் அடையத்தக்கது. |
திருஇடும்பாவனம் |
திருச்சிற்றம்பலம் | பண் - நட்டபாடை - 1-ம் திருமுறை |
|
மனமார்தரு மடவாரொடு மகிழ்மைந்தர்கண் மலர்தூய்த் |
தனமார்தரு சங்கக்கடல் வங்கத்திர ளுந்திச் |
சினமார்தரு திறல்வாளெயிற் றரக்கன்மிகு குன்றில் |
இனமாதவ சிறைவர்க்கிட மிடும்பாவன மிதுவே. |
(1) |
கொடியார்நெடு மாடக்குன்ற ளூரிற்கரைக் கோல |
விடியார்கட லடிவீழ்தரு மிடும்பாவனத் திறையை |
அடியாயுமந் தணர்காழியு ளணிஞானசம் பந்தன் |
படியாற்சொன்ன பாடல்சொலப் பறையும்வினை தானே. |
(11) |
திருச்சிற்றம்பலம் |
பதிகக் குறிப்பு :- இறைவரது இடம் இடும்பாவன மிதுவே. பதிகப் பாட்டுக்களின் மகுடம் பார்க்க. |
பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) மனமார்தரு...மைத்தர்கள் - மனம்பொருந்திய மனைவியாரும் தாமுமாய் வரும் மக்கள் தொழும்; இதனை "எண்ணார்ந்த" (2521) என்று குறிப்பித்தனர் ஆசிரியர்; தனமார்தரு...உந்தி - தனம் - கடல்படு பொருள்களாகிய சங்கங்களையும் முத்துக்களையுமுடைய வங்கங்களின் கூட்டம் வரும் சதுப்பு நிலப்பகுதி; அரக்கன் - இடும்பன் என்ற அசுரன்; மிகுகுன்றில் - இறைவர்க்கிடம் இடும்பாவனம் - இடும்பன் தங்கியிருந்த ஊர் குன்றளூர்; அவன் பூசித்தது இடும்பாவனம். இத்தொடர்பற்றி இவையிரண்டினையும் சேர்த்துப் பதிகத்துப் பாடியருளினர்; 11-வது பாட்டுப் பார்க்க. குன்றில் - குன்றளூரில்; அரக்கன்மிகு - அரக்கன் விருப்புடன் இருந்து ஆட்சிபுரிந்த; இனமாதவரிறைவர் - பெருந்தவர்களுக்குத் |