|
தலைவராகிய இறைவர்; தனமார்தரு சங்கக் கடல் என்றும் 11வது பாட்டில் இடியார் கடலடி வீழ்தரு என்றும் கூறியவாற்றால் இது கடற்கரையில் இருந்ததென்பது கருதப்படும். இதனை அடுத்துக் கடல் உப்பங்கழிகள் நிறைந்த சதுப்பு நிலப்பரப்பு உள்ளது இன்றும் காணலாம்; - (2) கலையார் தருபுலலோரவர் காவல்மிக - கலைவல்ல புலமையோர் இக்குன்றளூரைக் காவல்புரியும்படி இடும்பன் அமர்த்தினன் என்பது கருதப்படும்; புலவோர் - தேவர் என்ற குறிப்பும் பெறநின்றது; மடவார் மிகுகுன்றில் என மேல்வரும் பாட்டுக்களில் கூறியது அரக்கனது நகர்க் குடிவளம்; - (4) தொழில் - சிவனடிமைத்தொழில்; - (6) நெறி நீர்மையர்...குறிநீர்மையர் - முதற்பாட்டில் "இனமாதவர்க்கிடம்" என்றதனை விரித்துரைத்தபடி; நெறி - சிவநெறி; அறிநீர்மை - தியானம்; குறிநீர்மை - போகம்; "எண்ணார்ந்த" (2521) என்ற கருத்து; - (8) குணநாமம் - குணம்பற்றிய நாமம்; குணம் இங்குச் செயல் குறித்தது. அழுத செயல்பற்றி இராவணனென்றும் பெயர் தந்தருளிய வரலாறு; "இராவணனென் றவனைப்பே ரியம்பக் கொண்டார்" (தாண்); - (9) மறையோர் புகழ்விருத்தர் சிந்தையொடு - மலர்தூய் - என்றது இவர்கள் தியானித்து வழிபடுகின்ற என்பதாம்; "எண்ணார்ந்த" (2521) என்ற கருத்து; - (10) சமண்நடப்பர் - சமண சமய நெறியில் ஒழுகுவோர்; - (11) கொடியார்மாடக்குன்றளூர் - இடும்பனது தலைநகரம் என்ற குறிப்பு; அடி ஆயும் - அடிபோற்றும்; படியால் - உலகர் அறியும் வழியால். |
தலவிசேடம் :- திருவிடும்பாவனம் - காவிரித் தென்கரை 108வது தலம்; இடும்பாசுரன் பூசித்துப் பேறுபெற்ற தலம் என்பது தலப்பெயர்க் காரணம்; இடும்பனது தலைநகர் அணிமையில் உள்ள குன்றளூர்; இரண்டையும் சேர்த்து ஒன்றாகப் பதிகத்துட் கூறியது காண்க; இங்கு வெள்ளைநிறமுடைய வெள்ளைவிநாயகர் தேற்றமாய் வழிபடப்பெறுவர்; இறைவரது திருமணவாளக்கோலம் மூலட்டான நாதருக்குப் பின்புறம் காணலாம்; அகத்தியருக்குக் காட்சிகொடுத்த தலம் என்பது கருதப்படும்; சுவாமி - சற்குணநாதர்; அம்மை - மங்களநாயகி; பதிகம் 1. |
இது கடிக்குளத்தினின்றும் மேற்கில் முக்கால் நாழிகையில் உள்ளது. |
திருவுசாத்தானம் |
திருச்சிற்றம்பலம் | பண் - கொல்லி - 3-ம் திருமுறை |
|
நீரிடைத் துயின்றவன் றம்பிநீள் சாம்புவான் |
போருடைச் சுக்கிரீ வன்னனு மன்றொழக் |
காருடை நஞ்சுண்டு காத்தருள் செய்தவெஞ் |
சீருடைச் சேடர்வாழ் திருவுசாத் தானமே. |
(1) |
தாமலார் போலவே தக்கனார் வேள்வியை |
யூமனார் தங்கனா வாக்கினா னொருநொடிக் |
காமனா ருடல்கெடக் காய்ந்தவெங் கண்ணுதல் |
சேமமா வுறைவிடந் திருவுசாத் தானமே. |
(3) |
வரைதிரிந் திழியுநீர் வளவயற் புகலிமன் |
றிரைதெரிந் தெறிகடற் றிருவுசாத் தானரை |
யுரைதெரிந் துணருஞ்சம் பந்தனொண டமிழ்வல்லார் |
நரைதிரை யின்றியே நன்னெறி சேர்வரே. |
(11) |
திருச்சிற்றம்பலம் |