|
அங்கங்கே யுழவர்குழா மார்க்கின்ற வொலியெங்கும் |
எங்கெங்கும் மலர்ப்படுக ரிவைகழிய வெழுந்தருளி, |
626 |
2525.தடமெங்கும் புனல்குடையுந் தையலார் தொய்யினிறம் |
இடமெங்கு மந்தணர்க ளோதுகிடை யாகநிலை |
மடமெங்குந் தொண்டர்குழா மனையெங்கும் புனைவதுவை |
நடமெங்கு மொலியோவா நற்பதிக ளவைகடந்து, |
627 |
2526.நீர்நாடு கடந்தருளி நெடும்புறவிற் குறும்புதல்கள் |
கார்நாடு முகைமுல்லைக் கடிநாறு நிலங்கடந்து |
போர்நாடுஞ் சிலைமறவர் புன்புலவைப் பிடைபோகிச் |
சீர்நாடுந் தென்பாண்டி நன்னாடு சென்றணைவார், |
628 |
2527.மன்றன்மலர்ப் பிறங்கன்மருங் கெறிந்துவரு நதிகள்பல |
சென்றணைந்து கடந்தேறித் திரிமருப்பின் கலைபுணர்மான் |
கன்றுதெறித் தனவுகைக்குங் கானவதர் கடந்தணைந்தார் |
கொன்றைநறுஞ் சடைமுடியார் மகிழ்ந்ததிருக் கொடுங்குன்றம். |
629 |
2524. (இ-ள்.) பொழிப்பு. சங்குகள் நிறைந்த வயல்களில் எங்கும் நெல்லும் கழைக்கரும்புகளுமுள்ளன; வாசனை எங்கும் பரவி வீசும் தாமரைகள் நிறைந்த குளிர்ந்த வாசத்தடங்கள் எங்குமுள்ளன; அங்கங்கேயும் உழவர் கூட்டங்கள் கம்பலை செய்யும் ஒலி எங்கும் நிறைந்துள்ளன; மலர்கள் நிறைந்த பள்ள நிலங்கள் எங்கெங்கும் உள்ளனவாம்; இவற்றையெல்லாம் நீங்கி எழுந்தருளி, |
626 |
2525. (இ-ள்.) தடமெங்கும்...தொய்யினிறம் - தடாகங்கள் எங்கும் நீராடும் பெண்களின் தொய்யிற் குாம்பின் நிறம்; இடமெங்கும்...யாகநிலை - நகர்புறத்தின் இடங்களில் எங்கும் மறையவர்களின் ஒதுகிடைகளும் யாகசாலைகளும்; மடமெங்கும் தொண்டர்குழாம் - மடங்கள் எங்கேயும் தொண்டர்கூட்டங்கள்; மனை எங்கும் புனைவதுவை - மனைகளில் எங்கும செய்கின்ற கல்யாணங்கள்; நடமெங்கும் ஒலி - ஆடலின் உடன் எங்கும் பாடலின் ஒலிகள்; ஒவா - நற்பதிகள் அவை கடந்து - இவ்வாறு உள்ள தன்மைகள் எல்லாம் நீங்காது நிறைந்துள்ள நல்ல பதிகளையும் கடந்து; |
627 |
2526. (இ-ள்.) நீர்நாடு கடந்தருளி - இவ்வாறு சென்று நீர்நாட்டினைக் கடந்தருளி (அதன்மேல்) நெடும்புறவில்...நிலங்கடந்து - நெடிய புறவங்களில் சிறுதூறுகளில் கார்காலத்தை நாடுகின்ற முல்லையரும்புகளின் மணங்கமழும் முல்லை நிலங்களைக் கடந்து; போர்நாடும்...போகி - போரினை நாடுகின்ற வில் ஏந்திய மறவர்கள் பயின்று வாழும் புன்புலங்களாகிய பாலை சார்ந்த இடங்களின் இடையே சென்று; சீர் நாடும்...சென்று அணைவார் - சீர்நாடுகின்ற தென்பாண்டி நன்னாட்டினைச் சென்று அணைவாராகி, |
628 |
2527. (இ-ள்.) மன்றல்...கடந்து ஏறி - மணமுடைய மலர்க்குவியல்களை இருபக்கங்களிலும் வீசிவருகின்ற பல நதிகளையும் சென்று அணைந்து கடந்து ஏறிப்போய்; திரிமருப்பின்...கடந்து - முறுக்குடைய கொம்புடைய கலைகளும் அவற்றோடு இணைந்து வரும் மான்களும் அவற்றின் கன்றுகளும் கூட்டமாகத் துள்ளிப் பாய் கின்ற நாடுகளின் இடையேசெல்லும் வழிகளைக் கடந்து; கொன்றை...கொடுங் |