பக்கம் எண் :

778திருஞானசம்பந்தநாயனார் புராணம்

குன்றம் கொன்றை மலர்களினகுன்றம் கொன்றை மலர்களின் மணமுடைய சடை முடியார் மகிழ்ந்தெழுந்தருளியுள்ள திருக்கொடுங்குன்றத்தினை; அணைந்தார் - அணைந்தருளினார்.
2629
     இந் நான்கு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண்டுரைக்க நின்றன.
     2524. (வி-ரை.) எங்கும் - உள்ளனவாகிய இவை கழிய - என்க. 77 முதல் 3 வரை வரும் பாட்டுக்களைப் பார்க்க.
     சங்கங்கள் பொருந்திய வயல்களில் எங்கும் என்க.
     கழைக் கரும்பு - கரும்பின் வகைகளுள் ஒன்று; கழை - ங்கில்போன்று பருத்து உயர்ந்த என்றலுமாம். 67 பார்க்க. கழையும் கரும்பும் தாவரத்துள் ஓரினமென்ப.
     சாலியும் கரும்பும் என உம்மைத்தொகை; "கரும்பல்ல நெல்லென்ன" (65) என்றபடி கரும்பு என்று தோன்றும் சாலி என்றலுமாம்.
     கொங்கு எங்கு நிறைகமலம் - கொங்கு - வாசம்; எங்கும் நிறைதல் - பரவி வீசுதல்; கமலத் தடம் என்று கூட்டுக; வாசத் தடம் என்றது தடத்தின் அளவில் சிறு மணம் கமழும் ஏனைப் பூக்களின் வாசம்; கமலம் பெருமணமுடைத்தாதலும், கொங்கு - புகழ் - பெருமை - என்ற குறிப்புடைமையால் எங்கும் பரவும் புகழுடையதாதலும் காரணமாக வேறுபிரித்துக் கொங்கு எங்குநிறை என்று சிறப்பித்தோதினார்; ஒரு தடத்தே கமலத்துடன் ஏனை ஆம்பல், உற்பலம் முதலியவையும் இருப்பினும், சிறப்பும் முதன்மையும்பற்றித் தாமரைத்தடம் என்றே கூறிவருதலால் அவற்றை எல்லாம் எடுத்துக்கூறாது வாசத்தடம் என்று தடத்தினுள் அடக்கி அளவுபடுத்திக்கூறினார்; "அலர் செங்கமலம்" (1022) என்றவிடத்துரைத்தவை பார்க்க; II - பக்கம் 1324. "துறைமலி யாம்பல்பல் லாயிரத் துத்தமியேயெழினும், நரைமலி தாமரை தன்னதன் றோசொல்லு நற்கயமே" (சேரமான் பெருமான் நாயனார் - திருவாரூர் மும்மணிக்கோவை - 2).
     அங்கங்கே...ஒலி எங்கும் - அங்கங்கே - நெல்வயல்களேயாக, கரும்புச்சோலைகளேயாக, கமலத் தடங்களேயாக அங்கங்கும் உழவர் செய்வினைகளிருத்தல் குறிப்பு; ஆர்க்கின்ற ஒலி - ஆர்ப்பு என்னாது ஒலி என்றார்; சேய்மையில் கேட்பார்க்குப் பொருளற்ற ஆர்ப்புப்போன்றிருப்பினும், அணுகிச்சென்று கேட்போர்க்கு அவை ஒவ்வோர் பொருள்பற்றிய ஒலிகளேயாம் என்பது குறிக்க; பிள்ளையார் வழிச்சென்றருளும் நிலையாதலின் அது குறிக்க இவ்வாறு கூறினார்; இவை கழிய என்ற குறிப்புமிது. இப்பாட்டினும் மேல்வரும் பாட்டுக்களினும் கூறப்படும் பொருள்களின் வைப்புமுறையும் இக்கருத்தேபற்றியது.
     மலர்ப்படுகர் - மருத நிலமாதலின் உழவுகொண்ட வயல்களின் பக்கத்தே வடிகால்கள்கொண்ட படுகர்கள் இன்றியமையாதன; இவை எந்நாளும் செழித்து நீருடையனவாய் நீர்ச்சிறு பூக்களை யுடையன.
     சங்கங்கள்...இவை - இப்பாட்டால் மருதத்துக்குரிய சாலி - கரும்பு என்ற உணர்வும், குளிர்வாசத் தடம் என்ற நீரும், உழவர் என்ற மக்களும், கமலம் மலர் என்ற பூவும் ஆர்க்கின்ற ஒலி என்ற செய்தியும் (செய்வினை) முதலிய கருப்பொருள்களும் தெரியக்கூறிய நயமும் காண்க. உழவின் ஆதரவாகிய நீர்நிலையும்,