|
பொன்னிவளந் தருநாடு வொலிவெய்தவிலவியதாற் |
கன்னிமதில் மருங்குமுகி னெருங்குகழு மலமூதூர். |
2 |
(இ-ள்.) சென்னி....குடி - வளருந்தன்மை பெறவுள்ள பிறையினைத் தலையிற் சூடிய, சிலம்பணிந்த திருவடியினை யுடையாராகிய சிவபெருமானது நிலைபெற்ற சைவத்துறையில் வழிவழியாக வந்த குடியாகிய; வளவர் - சோழர்களுடைய ; பொன்னி......நிலவியது - காவிரியாறு வளஞ்செய்கின்ற நாடு பொலிவு பெறும்படி நிலைபெற்றுள்ளது; கன்னிமதில்..........கழுமலமூதூர் என்னும் பழம்பதியாகும். |
(வி-ரை.) சரிதந் தொடங்குகின்ற ஆசிரியர் இப்பாட்டால் சரிதமுடைய நாயனாரது ஆற்றுவளம் நாட்டுவளம் நகரவளம் கூறித் தொடங்குகின்றார். |
வளர்மதி சென்னி அணிந்த - என்க. வளர் - வளருந்தன்மை பெற்றுள்ள, சென்னியும் சேவடியும் உடையார் என்று தலைமுதல் அடிவரை கூறியபடி. அடியடைந்தாரை உயர்த்துபவர் என்பது குறிப்பு. |
மன்னிய சைவத்துறை - மன்னுதல் என்றும் அழியாது நிலைபெற்றிருத்தல். புறப்பகை உட்பகைகளால் இடையிடையேவரும் நலிவுகளால் விளக்கம் குன்றுதலன்றி அழிந்துபடுவதில்லை என்பதாம். உண்மை சிலபோது ஓரளவு மறைக்கப்பட லாவதன்றி எஞ்ஞான்றும் அழிக்கப்படா தென்க. இப்புராண வரலாற்றுக் குறிப்புமாம். 1916-வது பாட்டுப் பார்க்க. சைவத்துறை முன்பாட்டிற் கூறியவை பார்க்க. |
வழிவந்த குடிவளவர் - வழிவருதல் - வழிவழியாக அத்துறையில் வழுவாது வருதல். குடி - என்பது அதில் தாங்கள் அரசர் என்றெண்ணாது அடிமை என்ற நினைவு தாங்கி வருதல் குறித்தது. இச்சரிதத்தினுள் வரும் "செய்வகை யிடையே தப்பி"ப் புறச்சமயம் சார்ந்த பாண்டியர் போலன்றி என்ற குறிப்பும் காண்க. வளவர் - வளம் - செவ்விய. வளவர் - செல்வமுடையவர். "வளம்பட வேண்டாதார்" (நாலடி); வளவனாயினு மளவறிந்துண்" - "வளத்தன்" - "மாவளத்தான்" - "கரிகாற் பெருவளத்தான்" முதலியவையும் காண்க. |
பொன்னிவளம் தரும் நாடு - காவிரி பாய்ந்து வளத்தைத் தருதற் கிடமாகிய சோழநாடு. |
நாடு பொலி வெய்தக் - கழுமல மூதூர் நிலவியது - என்க. சோழநாடு பல பெரிய ஊர்களையுடையதாயினும் அதன் பொலிவுக்குப் - பெருங் காரணம் சீகாழியைத் தன்னகத் துடைமைடிையேயாம். பொலிவு - அருட்சிறப்பு. உலகத்தைத் திருத்திச் சிவனருளிற் சிறக்க உதவிய பிள்ளையாரவதரித்த தலமாதல் குறிப்பு. நிலவுதல் - ஊழிகளிலும் அழியாமல் மிதந்திருத்தல். "தேசமெல்லாம் விளக்கிய" (46). |
கன்னி மதில் - பகைவரால் கடியப்படாமல், அமைத்த நாட்போலவே தன்மை நீடியிருத்தல்.மதில் மருங்கு முகில் நெருங்கு என்பது மதிலின் உயர்ச்சி குறித்தது, உயர்வு நவிற்சி. அப்பதியந்தணர் செய்யும் வேள்விப் பயனும் குறிப்பு. |
கழுமலம் - சீகாழியின் பன்னிரண்டாவது பெயர். மூதூர் - பலவூழிகளிலும் அழியாதிருத்தல் குறிப்பு. |
2 |
1901.அப்பதிதா னந்தணர்தங் கிடைகளரு மறைமுறையே |
செப்புமொலி வளர்பூகச் செழுஞ்சோலை புறஞ்சூழ |
ஒப்பினக ரோங்குதலா லுகக்கடைநா ளன்றியே |
எப்பொழுதுங் கடன்மேலே மிதப்பதென விசைந்துளதால். |
3 |