பக்கம் எண் :

1494திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

புகைவிடும்....கொண்டுபோவார் - வேள்விச் செந்தீ - இஃது அம்மறையவர் வளர்க்கும் நித்தியாக்கினி; மறையவருள் இல்வாழ்வார் நித்தியமும் தீவளர்த்து வேட்கக் கடவர் என்பது வேதவிதிஆதலின் அத்தீயினைத் தாம் மனைவியருடன் செல்லுமிடங்களிலும் தவிராது வளர்த்தற்பொருட்டுக் கொண்டுசெல்லக் கடவர்; இல்லுடன் - இவ்வேள்வி மனையாளோடன்றிச் செய்யப்படாமை குறிப்பு. புகைவிடும் - மண வேள்வியிற் றொடங்கிய நித்தியாக்கினி சாங்காறும் அவியாது காக்கப்படுவது என்பது குறிப்பு; தீயின் அவியாதநிலை என்பது பொருள்.
தகைவிலா விருப்பின் - தடுக்கலாகாத பெருவிருப்பினாலே; பதிகங்கள் - பிள்ளையாரது திருப்பதிகங்கள்;அவற்றின் பெருமையும், இறைவரருளிய மறையேபோன்று "மெய்த்திருவாக்" காகும் வாய்மையும் நேரிற் கண்டுணர்ந்தோர்க ளாதலின் வேதம் பயிலும் இம்மறையவர்கள் தடுக்கமுடியாத பெருவிருப்புக் கொண்டு ஓதினர்; தகைதல் - தடுத்தல்; விலக்குதல். மிக்க - மிகுந்த அருட்பெருமையுடைய.
வகை அறு பகை - பகை ஆறாவன - காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் என்பன; இவை வெளித்தோற்றாது உண்ணின்றே மக்களை வீழ்த்தலின் பகை என்றார்; வகை என்றது உட்பகை, புறப்பகைஎன்ற இரண்டனுள் வலிமையுடையது உட்பகை என்றதும் குறிப்பு; உம்மை முற்றும்மை. செற்றமையால் மாதவர் என்று காரணக் குறிப்புப்பட வந்த அடைமொழி; மாதவர் - மேம்பட்ட அந்தணர்களைக் குறித்தது; இயல்பின் - தத்தமக் கியல்பாகிய சிறப்பினாலே.

1202

3101. (வி-ரை.) அறுவகை விளங்கும் சைவம் - இவை நால்வகைச் சமயப் பாகுபாட்டில் சைவத்துள் அகச்சமயம் என வகுக்கப்பட்ட பாடாணவாதம், பேதவாதம், சிவ சமயவாதம், சிவசங்கிராந்த வாதம், ஈசுவரவவிகாரவாதம், சிவாத்துவிதம் என்பன.
நால்வகைச் சமயத்தவருள், ஏனை மூவருள் உலகாயதமும் நால்வகைப் பௌத்தமும் ஆருகதமும் என்ற அறுவகை புறப்புறச் சமயத்தவரும்; தருக்கம், மீமாஞ்சை, ஏகான்மவாதம், சாங்கியம், யோகம், பாஞ்சராத்திரம் என்ற அறுவகைப்என்ற அறுவகைப் புறச்சமயத் தவரும் ஈண்டுப் பிள்ளையார் திருமணங் காண வருதற்கியைபில்லை; இனிப், பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், வயிரவம், ஐக்கியவாதம் என்ற சமயத்தினர் சிற்சில வகைகாளற் சைவரோடொப்பினும், தத்தம் நெறிகளானும் முடிபுகளானும் மாறுபாடுடையார்.
அவரெல்லாம் சித்தாந்த சைவரோடொப்ப "ஏக னனேக னிருள்கரும மாயையிரண்டு" (திருவருட்பயன் - 6 - 2) என்ற ஆறு பதார்த்தங்களுங் கொள்ளாமையானும், அவ்வறுவகைப் பதார்த்தங்களின் இயல்பைக் கொளளுத்தினுங் கொள்ளமாட்டாராகலானும் "புறச்சமயத் தவர்க்கிருளாய்" (சிவப் - பாயிர - 7) என்றபடி அவரையும் நீக்கி அறுவகை அகச்சமயத்தவரே ஈண்டுக் கருதப்பட்டனர்.
இனி இவ் வகச்சமயத்தோராகிய பாடாணவாத சைவர் முதலியோர் சித்தாந்த சைவத்தோடொப்ப ஏகன் முதலிய ஆறுபதார்த்தங் கொண்டமையின் அவ்வாறுக்கும் பொதுவியல்பு சிறப்பியல்பு கூறும் ஆகமங்களின் தாத்பரியம் இதுவேயென்று எடுத்துக்காட்டிச் சித்தாந்த சைவப் பொருளுண்மையக் கொளுத்தினாற் கொள்ளவல்லுவராதலின் அவர் ஈண்டு வருதற்கியைபுடையார்; "அகச்சமயத் தவர்க்கொளியாய்" (சிவப் - பாயிர - 7) என்பது காண்க. அதனால் இனி, இவர்

சிவஞான மாபாடியம் - 2 - 1 பார்க்க.