பக்கம் எண் :

784திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

 


சிவமயம்

  28. திருஞானசம்பந்த நாயனார் புராணம்
 

தொடர்ச்சி

 
அணங்கமர் யாழ்முரித் தாண்பனை பெண்பனை யாக்கியமண்
கணங்கழு வேற்றிக் கருவிடந் தீர்த்துக் கதவடைத்துப்
பிணங்கலை நீரெதி ரோடஞ் செலுத்தின வெண்பிறையோ
டிணங்கிய மாடச் சிரபுரத் தான்ற னிருந்தமிழே.
 

-(39)

 
காரங் கணைபொழிற் காழிக் கவுணியர் தீபனல்லூர்ச்
சீரங் கணைகொங்கை மாதொடும் புக்குறும் போதுவந்தார்
ஆரங் கொழிந்தனர் பெற்றதல் லாலவ் வரும்பதமே. .
 

-(60)

 

- ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பி

 
பிறவியெனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத்
துறவியெனுந் தோற்றோனி கண்டீர் - நிறையுலகிற்
போன்மாலை மார்பன் புனற்காழிச் சம்பந்தன்
றன்மாலை ஞானத் தமிழ்.
 

-(11)

 

- ஆளுடைய பிள்ளையார் திருழம்மணிக் கோவை - மேற்படி

 
ஓடஞ் சிவிகை யுலவாக் கிழியடைக்கப்
பாடல் பனைதாளம் பாலைநெய்தல்-ஏடெதிர்வெப்
பென்புக் குயிர்கொடுத்த லீங்கிவைதா மோங்குபுகழ்த்
தென்புகலி வேந்தன் செயல்"
 

-(70)

 

-திருக்களிற்றுப்படியார்

 

புராணம் (தொடர்ச்சி)

 [மங்கையர்க்கரசி யம்மையாரும் குலச்சிறை நாயனாரும் விடுத்த விண்ணப்பத்துக்கிணங்கி, ஆளுடைய பிள்ளையார் சமணசமய நிராகரிப்பும் சைவ ஆக்கமும் கருதித் திருமறைக்காட்டி னின்றும் பாண்டி நாட்டுக்குத் திருவருள் வழியே எழுந்தருளி வருகின்றார். அப்போது சமணர்க்கு மேல் வரும் கெடுதியைக் குறிக்கும் தீக்கனாக்களும் துன்னிமித்தங்களும் நிகழ்ந்தன.]
2531
பீலியுந் தடுக்கும் பாயும் பிடித்தகை வழுவி வீழக்
கால்களுந் தடுமா றாடிக், கண்களு மிடமே யாடி,
மேல்வரு மழிவுக் காக வேறுகா ரணமுங் காணார்
மாலுழந் தறிவு கெட்டு மயங்கின சமண ரெல்லாம்.
 

633

 (இ-ள்) ; பீலியும் ...வீழ - மயிற்பீலிக் கற்றையும், தடுக்கும், பாயும் அவற்றைப் பிடித்த கைப்பிடி முதலியவற்றினின்றும் தாமே நழுவி விழவும்; கால்களும்