பக்கம் எண் :

[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்785

 கால்களும் தடுமாற்றத்தை யடைந்து தள்ளாடியும்; கண்களும் இடமே யாடி - கண்கள் இடப்பக்கத்தே துடித்தும்; அமணர் எல்லாம் - அமணர்களெல்லாம்; மேல் வரும்...காணார - இவற்றால் அறிவிக்கப்படுமாறு பின்னால் உறுதியாகத் தமக்கு வரும் அழிவுக்கு வேறு காரணம் ஒன்றும் தோன்றாதவர்களாகி; மயங்கினர் - மயங்கினார்கள்.
 (வி-ரை). பீலி - தடுக்கு - பாய் - பீலிக்கற்றைகளைப் பிடித்தலும், தடுக்கினை இடுக்குதலும், பாயினை உடுத்தலும் சமணர் வழக்குக்கள்; பிடித்த கையினின்றும் பீலி வழுவி வீழ்ந்தது; தடுக்கு இடுக்கிய இடத்தினின்றும் வழுவிற்று; உடுத்த இடையினின்றும் பாய் வழுவிற்று.
 பீலி பிடித்த கை - என்றதனால் ஏனையவற்றின் இடங்கள் ஏற்புழிக் கோடல் பற்றிக் கொள்ளப்பட்டன.
 கால்களும் தடுமாறாடிக் கண்களும் இடமேயாடி - கால்கள் பின்னித் தடுமாறுதலும், (ஆண்மக்களுக்கு) க்களுக்கு இடக்கண் துடித்தலும் தன்னிமித்தங்கள் என்பர்;கால் தடுமாறுதல் உடலில் உயிர்ச்சத்தி குறைதலால் வருவரு; இஃது ஆகாது; ஆண்மக்களுக்கு இடக்கண்ணும் பெண்களுக்கு வலக்கண்ணும் துடித்தலும் ஆகா என்பர். ஆண்மக்கள்உடலில் வலப்பாகம் வலுத்து ஆண்பாகமென்றும் இடப்பக்கம்அத்தகைய வலிவின்றிப் பெண்பாகமென்றும் கூறுவர். கண் துடித்தல் உயிர்ச்சத்தியின் குறைவு காட்டுதலால் முன்னரே வலிகுறைந்த பகுதி மேலும் சத்தி குறைய அழிவு காட்டும் என்பதாம்; இவ்வாறே இராமன் கதையினுள் பன்னசாலையில் இராவணன் வருமுன் சீதைக்கு வலந்துடித்ததென்றும், அசோகவனத்தில் இடம் துடித்ததென்றும் வரும் கூற்றுக்களின் கருத்தும் காண்க;
 கால்களும் - உம்மை உடலைத் தாங்கி நிற்கும் வலுத்தன்மை கொண்ட கால்களும் என்று சிறப்பும்மை.
 இடமே யாடி - தீமை அறிவிக்குமாறு தொடர்ந்து மாறின்றி இடதுபக்கமே என்று ஏகாரம் பிரிநிலை, கண் ஆடுதல் - துடித்தல்.
 மேல்வரும் அழிவு - நிமித்தங்கள் அறிவிக்கின்றபடி உறுதியாய் வருமென்றறிந்து கொண்ட அழிவு;
 வேறு காரணமும் காணார் - காரணம் - நிமித்தங்களும் அவற்றாற்றேரியப்படும் அழிவும் வருதற்கு உரிய காரணம்: வேறு - நிமித்தங்களுக்கு, அழிவு காட்டுதலின் பொருட்டு நிகழ்வது ததவிர, வேறு நோய் முதலிய காரணங்கள்; காரணங்காணுதல் - அதற்கு மாற்றுத்தேடுதலின் பொருட்டேயாகலின் காரணம் - மாற்று என்றே பொருள் கொண்டனர் முன் உரைகாரர்:
 மாலுழத்தல் - அறிவு நிலை தடுமாறுதல். உழந்து - மால் உழந்து - உழத்தலால்:
 அறிவுகெட்டு மயங்கினர் - இப்பாட்டிற் கூறியவை உடற்புறக் கருவிகளின் நிகழ்வன. முன்பாட்டிற் கூறியவை வெளியிற் காண்பன. மேல்வரும் பாட்டில் அகக்கரணங்களின் மாறுபாட்டால் நிகழ்வனவற்றைக் கூறும் முறையும் காண்க.
 

633

2532
ந்தியர் தம்மிற் றாமே கனன்றெழு கலாங்கள் கொள்ள
வந்தவா றமணர் தம்மின் மாறுகொண் டூறுசெய்ய
முந்தைய வுரையிற் கொண்ட பொரைமுதலவையும் விட்டுச்
சிந்தையிற் செற்ற முன்னாந் தீக்குணந் தலைநின் றார்கள்.
 

634

 (இ-ள்) கந்தியர்...கொள்ள - சமணத் தவப்பெண்கள் தம்முள் தாங்களே சினந்து எழுகின்ற கலகங்களைச் செய்யவும்; வந்தவாறு...ஊறுசெய்ய - நேர்ந்தபடி