பக்கம் எண் :

786திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

 அமண முனிவர்களும் தம்முள் மாறுபட்டுக் கொண்டு ஒருவர்க்கொருவர் ஊறுசெய்யவும்; முந்தைய...விட்டு - தங்கள் முந்தைய நூல்களின் விதித்தபடி தாம் தாம் மேற்கொண்ட பொறை முதலாகிய அவற்றையும கைவிட்டு; சிந்தையில்...தலை நின்றார்கள் - மனத்தில் நினம் முதலாகிய தீக்குணங்களிற் சிறந்து நின்றார்கள்.
 (வி-ரை) கந்தியர் - சமணத்தவ மகளிர்; ஆரியாங்கனைகள் என்பது மரபு. கணவனுள்ளபோதே துறவு பூண்போர்; கலாம் - கலகம்:
 தம்மில் தாமே கனன்றெழ கலாங்கள் கொள்ள என்றும்,தம்மில் மாறு கொண்டு ஊறு செய்ய - என்றும், முறையே தவமகளிரும் முனிவரும் தத்தமக்குள் தாமே கலகமிட்டுத் துன்புறுத்திக் கொள்ளுதல் கூறப்பட்டது: பெண் ஆண் எனற் இருபாலாரும் கலாய்த்தல் கூறியதும் காண்க. தம்முடன் மாறுபட்டார் பிறர் வந்து கலாம் விளைத்தலே இயல்பாம்; அங்ஙனம் மாறுபடாது ஒரு நெறிப்பட்ட குழுவினர் தமக்குள் கலாம் கொள்ளுதல் இயல்பு விரோதம்: இங்ஙனம் வேறு காரணமின்றி நிகழ்தலின் இவை அழிவு முன் காட்டுதல் காரணமாக நிகழும்(உற்பாதம்) துன்னிமித்தமாயின.கந்தியர்களை - முற்கூறினார் பயிற்சியயானன்றி இயற்கையானும் மகளிர் பொறையுடையாராதல் வேண்டும் என்ற சிறப்புப் பற்றி:
 வந்தவாறு - நேர்ந்த நேர்ந்தபடி; ஒழுங்கு முறையுமின்றி; அந்தவாறு என்று கொண்டு முன்கூறிய அம்மகளிர் கலாங்கொண்டது போலவே என்றுரைப்பாரு முண்டு.
 அமணர் - அமண முனிவர்களாகிய குருமாரும் பிறரும்: இங்குக் கூறியது ஆண்மக்களை;
 ஊறுசெய்ய - தமக்குள் ஊறுபாடு - துன்பம் - செய்ய; பொறை விடுதலோடு இம்சை சேய்யாவிரதமும் விட்டார் என்பது:
 முந்தைய உரையிற் கொண்ட பொறை முதலவையும் - முந்தைய உரையில் - தமது பழ நூல்களின் விதியினால்; உரைப்படி; கொண்ட - மேற்கொண்டிருந்த;முதலவை - முதன்மையானவை; பொறையினையும் அதுபோன்ற நற்குணங்களையும் முதலாவதாக மேற்கொள்ள வேண்டுமென்பது சமணர்களின் பழைய நூல்களில் கூறப்படுவன; அவையும் - உம்மை உயர்வு சிறப்பு;
 செற்ற முன்னாம், தீக்குணம் தலைநின்றார்கள் - நற்குணங்களை விட்டதனோ டமையாது, நன்மையும் தீமையு மிரண்டு மின்றிப் பொதுவிலும் அமையாது, அவற்றுக்கு மாறாகிய தீக்குணங்களையும் மேற்கொண்டு அவற்றில் தலைசிறந்து நின்றார்கள். தலை நிற்றல் - முற்படுதல்; சிறத்தல்;
 பொறை முதல் வைப்பும் விட்டு - என்பதும் பாடம்.
 

634

2533
இப்படி யமணர் வைகு மெப்பெயர்ப் பதியு மெய்தும்
ஒப்பிலுற் பாத மெல்லா மொருவரி னொருவர் கூறி
மெய்ப்படு தீக்க னாவும் வேறுவே றாகக் கண்டு
செப்புவான் புறத்து ளோருந் தென்னவன் மதுரை சேர்ந்தார்.
 

635

 (இ-ள்) இப்படி...கூறி - இவ்வாறு அமணர்கள் தங்கும் எவ்வகைப்பட்ட பெயர்களையுடைய பதிகளிலும் பொருந்திய ஒப்பில்லாத துன்னிமித்தங்களை யெல்லாம் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டு; மெய்ப்படு... செப்புவான் - பலிக்கக்கூடிய தீயகனாக்களும் வேறு வேறாகக் கண்டு அவற்றையும் சொல்லும் பொருட்டு; புறத்து