| உள்ளோரும்...சேர்ந்தார் - வெளியே உள்ளவர்களும் பாண்டியனது மதுரைமா நகரத்திற் சேர்ந்தனர். |
| (வி-ரை) உற்பாதம் - துன்னிமித்தம்; மேலே கூறியவை; மெய்ப்படு தீக்கனா - கனவில் நிகழ்ந்தவை நகவில் மறந்து படுவனவும், பயன் குறியாதொழிவனவு முள்ளனவாதலின் அவற்றை நீக்குதற்கு மெய்ப்படுகனா என்றும், கனாக்கள் நன்மையும் கலந்து பயப்பனவுளவாதலின் அவற்றை நீக்குதற்குத் தீக்கனா என்றும் கூறினார். பிறிதினியைபு நீக்கிய விசேடணங்கள்; |
| கண்டு - கனவு நிலையில் கண்டு; செப்புவான் - சொல்லும் பொருட்டு; வானீற்று வினையெச்சம்; |
| புறத்துளோரும் - சேர்ந்தார் - புறத்து - மதுரைநகரின் புறத்து; யானைமலை முதலியவற்றினின்றும்; புறத்துளோரும் - என்ற உம்மை அகத்து - நகரத்து - உள்ளோர் அணைதலேயின்றி என இறந்தது தழுவிய எச்சவும்மை; புறத்துள்ளோர் கூடியபோது நகரத்துள்ளோர் கூடியமை கூறாமயேமையுமாதலின் அதனை வேறு எடுத்துக் கூறாராகி எச்வும்மையாற் பெறவைத்தார் ஆசிரியர். மேல்வரும் பாட்டுப் பார்க்க; |
| தீக்கனா - இவை மேல் 2535 முதல் 2538 வரை நான்கு பாட்டுக்களிற் கூறுதல் காண்க. |
| 635 |
| அமணர்க்கு நிகழ்ந்த தீக்கனாக்கள் |
2534 | அந்நகர் தன்னில் வாழ்வார் புறம்புநின் றணைவார் கூடி மன்னவன் றனக்குங் கூறி மருண்டவுள் ளத்த ராகித் துன்னிய வழுக்கு மெய்யிற் றூசிலார் பலரு மீண்டி "யின்னன் கனவு கண்டே" மெவெடுத் தியம்ப லுற்றார். | |
| 636 |
2535 | "சீர்மலி யசோகு தன்கீ ழிருந்தநந் தேவர் மேலே வேரொடு சாய்ந்து வீழக் கண்டன; மதன்பின் னாக ஏர்கொண்முக் குடையுந் தாமு மெழுந்துகை நாற்றிப் போக ஊருளோ ரோடிக் காணக் கண்டன; " மென்று ரைப்பார். | |
| 637 |
2536 | "குண்டிகை தகர்த்துப் பாயும் பீறியோர் குரத்தி யோடப் பண்டிதர் பாழி நின்றுங் கழுதைமேற் படர்வார் தம்பின் ஒண்டொடி யியக்கி யாரு முறையிட்டுப் புலம்பி யோடக் கண்டன; " மென்று சொன்னார் கையறு கவலை யுற்றார்; | |
| 638 |
| 2534. (இ-ள்) அந்நகர்...கூறி - அந்நகரில் உள்ளோரும் வெளியினின்றும் அணைவார்களும் கூடி அரசனுக்கும் அறிவிப்பு அனுப்பிச் சென்று; மருண்ட... ஈண்டி-மருட்சி கொண்ட மனதுடையவராகி அழுக்குப்படிந்த உடம்பில் துணியில்லாத அமணர் பலரும் நெருங்கிச் சேர்ந்து; "இன்னன...இயம்பலுற்றார் - இன்னின்ன கனாக்களைக் கண்டோம் என்று எடுத்துச் சொல்வார்களாகி, |
| 634 |
| 2535. (இ-ள்) "சீர்மலி...கண்டனம்" - சிறப்புடை அசோகமரம் அதன் அடியில் அமர்ந்தருளிய நமது அருகக்கடவுளின் மேலே வேரோடு சாய்ந்தும் வீழக் கண்டோம்; அதன் பின்னாக...என்று உரைப்பார் - அதன் பின்னே, அழகிய முக்குடையும் தாமுமாக அத்தேவர் எழுந்து கைகளைத் தொங்கவிட்டுச் செல்லவும், அதனை |