பக்கம் எண் :

788திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

 ஊரிலுள்ள சனங்கள் ஓடிச்சென்று காணவும் கண்டோம், என்று மேலும் சொல் வாராகி;
 

637

 2536. (இ-ள்) குண்டிகை...ஓட-கமண்டலத்தை உடைத்துப் பாயினையுங் கிழித்து ஒரு பெண் குரு ஓடிடவும்; பண்டிதர்...தம்பின்-பண்டிதர்களாகிய சமண முனிவர்கள் தமது குகைகளினின்றும் கழுதைகளினமேலேறிச் செல்வாராகிவும், அவர்களின் பின்னே; ஒண்டொடி...கண்டனம்-ஒள்ளியதொடிகளையணிந்த தவப் பெண்களும் ஊளையிட்டு அழுது ஓடவும் கண்டோம்: என்று...உற்றார்-என கவலைகொண்டார்களாகிச் சொன்னார்கள்.
 இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
 638
 2534. (வி-ரை) வாழ்வாரும் - நின்றாரும் கூடிச்சென்று என்க. உம்மைகள் விரிக்க;
 கூறி - சொல்லி விடுத்து முன்னே சென்று; கூறிவிடுத்து - என்பது; அவனிடம் அறிவித்த திறங்கள் மேற்கூறப்படுவன.
 அழுக்குத்துன்னியமெய்யில் தூசுஇல்லார் - அழுக்குத்துன்னுதல் - பலநாட்குளியாது வெயிலின் நிற்றல் முதலிய வழக்குக்களையுடைமையால் ஆவது: "வேர் வந்துற மாசூர்தர"(தேவா) "கழுவாவுடலம்" (11-ம் திருமுறை - ஆளு - அந்) வெளிப்பட அழுக்குத்துன்னக் கண்டும் தூசுஇல்லையாக எண்ணும் மயக்கமுடையார் என்று இரட்டுற மொழிதலால் பிறிதொரு பொருளும் பட நின்ற நயம் காண்க. தூசு இல்லார் - ஆடையின்றி அமணேதிரிவார். இவை சமண குருமார் வழுக்கு;
 "இன்னன கனவு கண்டோம்" என - மேல் இவ்விவ்வாறு என்று கூறுமாறு;
 இயம்பலுற்றராகி-உரைப்பாராய்க் (2535) கவலையுற்றாராய்ச் சொன்னார் (2536) என்று இம்மூன்று பாட்டுக்களையும் முடிவுபடுத்திக் கொள்க:
 மேல்வரும் பாட்டில் தமது குரவர் குரத்திகளுக்கும் வரக்கண்ட கேடாகிய நிலைகளைக் கூறினார்; அதன் மேல்வரும் அரண்டு பாட்டுக்களினும் அக்கேடுகள்-அவ்விளைவுகள்-வரும் மூலமும் அதனால் மன்னவனுக்கு வரும் பயனும், தமக்கு நேரும் அழிவும் கண்டு கூறுகின்றார்கள்; கலைஞானங்களில் தேர்ந்தாராதலின் இக்கனாக்கள் தீமை பயந்தே விடுமென்றும் கண்டார்கள் (2539); இவற்றை முன்னறிவிப்புச் செய்தது சிவனது கருணைத்திறம்; அவ்வா றறியச் செய்யினும், இவை தாம் சைவத்திற்குச் செய்த தீமைகளின் பயனாக வருவன என்று உணர்ந்து அவற்றினின்றும் நீங்கி உய்யும் வழியை இவர்கள் தேடித் தப்பியிருக்கலாம்; அது செய்யாது கெட்டனர் இவர்; செய்ய வோட்டாது தடுத்தது கன்ம நிலையும் ஆணவமல மறைப்புமாம்: கந்தபுராணத்தினுள் சிங்கமுகன் - பானுகோபன் - இரணியன் இவர்கள் அறிவித்தும், அறுமுகக்கடவுள் தாமே நேர் நின்று காட்டி அறிவித்தருளியும் கேளாது, கிளையுடன் வீழ்ந்த சூரபதுமன் வரலாற்றையும், அவை போலவரும் சரி தங்களின் உள்ளுறைகளையும் இங்கு வைத்துக் கூர்ந்து நோக்கிக் கொள்க, அறிவிக்க அறிதல் உயிர் இயல்பு; அறிவித்தாலும் அறியாமற் செய்தல் ஆணவ மலவலிமையும் கன்ம நிலையுமாம் என்பன ஞானசாத்திர உண்மைகள்.
 

636

 2535. (வி-ரை) சீர்மலி அசோகு...தேவர் - அருகக்கடவுள் அசோகமரத்தின் கீழ் இருப்பதாக வைத்து வணங்குதல் சமண சமய வழக்கு;
 அசோகு தேவர்மேல் வேரொடு சாய்ந்து வீழ்தல் - நிழல் தந்து அமர இடமும் தந்த மரம் அவர்மேல் சாய்ந்து வீழ்தல் அவரைப் பற்றுக் கோடின்றிச்சாடி அகலச் செய்வதன் குறிப்பு;