பக்கம் எண் :

[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்789

 முக்குடை - அருகக்கடவுளது குடை; குடையும் தாமும் எழுந்து - குடையுடன் எழுந்து; கை நாற்றுதல் - மேலே உயர்த்தாது கையினைத் தொங்க விடுதல் அழிவுக் குறிப்பு; நாற்றுதல் - உதறுதல் என்றலுமாம்;
 போக - இடப்பெயர்ச்சி குறித்தது; அதுவரை அங்கு அமர்ந்து ஆட்சிசெய்திருந்த தெய்வம் அவ்விடம் விட்டுப் பெயர உள்ள குறிப்பு:
 ஊருவோர் ஓடிக் காண - தெய்வம் விரைந்தும் பெயர்ந்தும் போகும் நிலைக்குறிப்பு; ஊருளோர் காண என்றது பெயர்ந்து போகும் தெய்வத்தைப் பின்பற்றிச் செல்லாது ஊரவர் கண்டு கழித்துத் தாம் அங்கே தங்கி முன்னைச் சமயம் பற்றுவர் என்ற குறிப்பு:
 சீர்மலி - ஏர்கொள் - என்றமையால் முன்இருந்த அச்சீரும் ஏரும் தவிரும்படி எனற்து குறிப்பு.
 

637

 2536. (வி-ரை) குண்டிகை தகர்த்து - கையில் மந்திரித்த நீருடைய குண்டிகை கொண்டிருத்தல் சமண குருமார் வழக்கு. அதைத் தகர்த்தல் - அச்சமயப் பற்றுக்கோடு கைவிட்டமை குறிப்பு:
 பாயும் பீறி - பாய் - மரவுரியும், உடையாகக் கொள்ளும் தடுக்கும்; பீறுதல் - கிழித்தெறிதல்; தகர்த்துப் பீறி ஓடுதல் - தம் சமயச்சார்புகளைத் தாமே விட்டு இடம் விட்டு நீங்குதல் குறித்தது; "பாய்க ளிழப்பார் பறிதலையர்" (தண்டியடிகள்-22).
 குரத்தி - பெண்குரு; பெண்துறவி; குருவின் மனைவி என்பாருமுண்டு.
 பண்டிதர் - கலைவல்ல குருமார்; இவர் குருமார்களுள் ஆண்மக்கள்;பாழி - சமண குருமார் தங்கும் குகை; பாழிநின்றும் கழுதை மேற்படர்தல் - தமதிருக்கையை விட்டுத் தோல்வியும் பரிபவமும் உற்று நீங்குதல்; கழுதை - மூதேவியின் ஊர்தி; இழிபுக் குறிப்புமாம்; "கழுதைமேல் வைத்து ஊர்வலஞ் செய்விப்போம்" என்று வஞ்சினங் கூறும் நாட்டு வழக்கும் காண்க.
 இயக்கியார் - தவமகளிர்; இயக்கத் தேவதையுமாம்.இயக்கர் - கானநூல் முதலிய விஞ்சை வல்லோர்; இப்பொருளில் கழுதை மேற்படரும் பண்டிதர்களின் பின்னே அவர்கள் பசப்பிப் பரப்பிய மயக்கக் கலைகளும் ஓடின என்பதாம்; இயக்கி - தரும தேவதை என்பர் முன் உரைகாரர்; அதன் பொருத்தம் ஆராய்க.
 உளையிட்டுப் புலம்பி - உளையிடல் - தீயொலி செய்தல்;
 ஓட - ஓட - நீங்குதலின் விரைவுக் குறிப்பு:
 கவலையுற்றாராகிச் சொன்னார் - என்க. உற்றார் - உற்று - முற்றெச்சம்; வினைமுற்றாகவே கொண்டுரைப்பினுமிழுக்கில்லை; சொன்னார்; கவலையும் உற்றனர்:
 கையறுகவலை - கையறும்படி நேர்வதனாற் போதும் கவலை;கையறுதல் - செயலறல்.
 தம்மின் - படர்வார் - உழைவிட்டு - என்பனவும் பாடங்கள்.
 

638

2537
"கானிடை நட்ட மாடுங் கண்ணுத றொண்ட ரெல்லாம்
மீனவன் மதுரை தன்னின் விரவிடக் கண்டோ" மென்பார்;
"கோனவன் றானும் வெய்ய கொழுந்தழன் மூழ்கக் கண்டோம்;
ஆனபின் பெழவுங் கண்டோ; மதிசய மிதுவா" மென்பார்;
 

639

2538
மழவிடை யிளங்கன் றொன்று வந்துநங் கழகந் தன்னை
உழறிடச், சிதறி யோடி யொருவருந் தடுக்க வஞ்சி