பக்கம் எண் :

790திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

 
விழவொரு புகலு மின்றி மேதினி தன்னை விட்டு
நிழலிலா மரங்க ளேறி நின்றிடக் கண்டோ மென்பார்;
 

640

2539
"ஆவதேன் பாவி காளிக் கனாத்திற மடிகண் மார்க்கு
மேவிய தீங்கு தன்னை விளைப்பது திடமே" யென்று
நேர்வுறு மனத்த ராகி நுகர்பெரும் பதமுங் கொள்ளார்
"யாவது செய" லென் றெண்ணி யிடருழுன் றழுங்கி னார்கள்.
 

641

 2537. (இ-ள்) கானிடை...என்பர் - சுடுகாட்டில் நடனம் ஆடுகின்ற கண்ணுதலையுடைய சிவனது தொண்டர்கள் எல்லாம் பாண்டியனது மதுரை மாநகரில் வந்து சேர்தலைக் கண்டோம் என்பார்கள்; கோன் அவன்,,,கண்டோம்; அரசன்றானும் வெவ்விய கொடிய தீயினுள் மூழ்கக் கண்டோம்; ஆனபின்பு எழவும் கண்டோம் - அவ்வாறு மூழ்கிய பின்னர் அதினின்றும் மேலே எழுந்திடவும் கண்டோம்; அதிசயம் இது ஆம் என்பார் - இது அதிசயமாம் என்பார்கள:
 

639

 2538. (இ-ள்) மழவிடை...சிதறி ஓடி - இளமையுடைய இடபக்கன்று ஒன்று வந்து நமது சங்கத்தைச் சுழல மிதித்துக் கலக்க அதனால் சிதறுண்டு ஓடி; ஒருவரும் தடுக்க அஞ்சி - எவரும் அதனைத் தடுக்கப் பயந்து; விழ ஒரு...கண்டோம் - அபயம் வீழ்ந்து ஒளிக்க வேறு ஒரு புகலிடமும் இல்லாமல் பூமியைவிட்டு நிழலில்லாத மரங்களின் மேல் ஏறி நின்றிடவும் கண்டோம்; என்பார் - என்று சொல்ல;
 

640

 2539. (இ-ள்) ஆவதேன்? பாவிகாள்!... என்று - "பாவிகளே! இதன் முடிவுதான் எதுவோ" இந்தக் கனாக்களின் விளைவு நம் அடிகண்மார்களுக்குப் பொருந்திய தீங்கினை விளைவிப்பது உறுதியேயாம்!" என்று துணிந்துகூறி; நோவுறும்...கொள்ளார் - துன்பமுற்ற மனத்தை யுடையவர்களாகி உண்ணத்தக்க உணவுகளையும் உண்ணாதவர்களாகி; யாவது...அழுங்கினார்கள்-யாது செய்வது என்று எண்ணமிட்டுத் துன்பமுற்று இவற்றைக் கேட்டவர்கள் வருந்தினார்கள்;
 

641

 இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிவு கொண்டன.
 2537 வி-ரை) கான் - சிவன் நடமாடும் சுடுகாடு
 "கானிடை...விரவிடக் கண்டோம்" - கண்ணுதல் தொண்டர்கள் மதுரையில் விரவிடாது சூழ்ச்சி செய்து அவர்கள் இருந்த இடத்தில் நாம் இருந்தோம்; இப்போது அந்நிலை மாறி நம்மை ஓடத் துரந்து அவர்கள் பழையபடி மதுரையில்வந்து பொருந்து தலைக் கண்டோம் - என்பது குறிப்பு. விரவிட - இதுவரை விரவாதிருந்தோர் விரவியிட; விரவுதல் - வந்து பொருந்துதல்; மீனவனது மதுரை - என ஆறனுருபு விரிக்க; கானிடை - ஆடும் என்றது சமணர் கூற்றாதலின் இழிவுக்குறிப்பும் பட நின்றது.
 கோன்...எழவும் கண்டோம் - கோன் அவன் - அம்மீனவனாகிய மன்னவன்; அவன் - மினவன் மதுரை என்று சுட்டிய அவன்; கொழுந்தழல் முழுகுதல் - பின் எழுதல் - கொடிய வெப்பு நோயினுட்படுதலும், பின் மீளுதலும் குறிப்பு: தீமூழ்கி எழுதல் அமண்மாசு நீக்கிப் புனிதமாதற் குறிப்பும் பட நின்றது.
 அதிசயம் - கொழுந்தழல் மூழ்கினோன் அழிந்துபடாது மீள எழுதல் அதிசயம் எனப்பட்டது; "அதிசயங் கண்டாமே"(திருவா).
 கொடுந்தழல் - மூழ்க - என்பனவும் பாடங்கள்.
 

639