பக்கம் எண் :

[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்439

  திருப்புன்கூர் - திருப்பெருமங்கலத்தின் மிக அணிமையில் வடகிழக்கில் 2 நாழிகையளவில் உள்ள பதி; இங்குக் கலிக்காமனார் அதிகமாயின திருப்பணி யனேகமுஞ் செய்தும், 12+12=24=வேலி நிலங்கள் விட்டும் தமது அபிமானத் தலமாகக் கொண்டு வழிபட்டு வந்தனர்; ஆதலின், இங்குத், திருவருள் வெளிப்பாடு கண்டவுடன் அந்நன்றியின் பொருட்டு அங்கச் சென்று இறைவரை வணங்கினர்.
  மருவினர் போற்றி நின்று - மருவினர் போற்றி - மருவினராகிப் போற்றி, மருவிப்போற்றி; மருவினர் - முற்றெச்சம்; மருவுதல் - அடிசேரப் பொருந்தும் வணக்கம் செய்தல்.
  இருவரும் போற்றி நின்று - வன்றொண்டர் - பாடி - இருவரும் போற்றுதல் செய்தனர்; அவருள் வன்றொண்டர் ஒருவரே பதிகம் பாடினர்; இருவர்பாலும் சரித நிகழ்ச்சிகளும் பிணைந்து நிகழ அந்நிலையினில் இரண்டு திறத்தினையும்வேறு பிரித்துக் காட்டும் கவிநயம் கண்டுகொள்க; இவ்வாறே மேல்வரும் பாட்டிலும் காண்க.
  "அந்தணாளன்" என்று அந்தணாளன் என்பது பதிகத் தொடக்கம்; இதனுள் ஏயர்கோனாரது அடிமைத் திறத்தினைச் சிறப்பித்தும், (பதிகம் 2-3-பாட்டுக்கள்) சூலைதந் தாட்கொண்ட வரலாற்றின் அருளிப் பாட்டைப் போற்றியும் அருளிச் செய்துள்ளமை காண்க. பதிகப் பாட்டுக் குறிப்புப் பார்க்க.
  பாடிச் சிலபகல் கழிந்த பின்பு என்று மேல்வரும் பாட்டுடன் முடிக்க. போற்றி நின்று, வன்றொண்டர் பாடி, அதன்பின் சிலபகல் கழிந்தபின் என்க.
 

406

  3561. (வி-ரை) பகல் - நாள் என்ற பொருளில் வந்தது.
  திருமுனைப்பாடி நாடர் - ஆரூர் நம்பிகள்; நாடர் - உடன் வந்த - ஏயர் தலைவனாருங் கூடவே - ஆரூரில் - பூங்கோயில் நிலவினார் தம்மைக் கும்பிட்டு என்று கூட்டி முடிக்க. நிறைந்த அன்பால் - உறைந்தனர் - என்க.
  மகிழ்ந்துடன் வந்த - கலிக்காமனார் நம்பிகளோடும் கூடி மகிழ்ந்து திருவாரூருக்கு உடன் சென்று அவருடனே புற்றிடங்கொண்ட இறைவரைத்தொழுதிருந்தனர் என்பது. ஏயர்கோனாரது அபிமானத் தலமாகிய திருப்புன்கூருக்கு நம்பிகளும், நம்பிகளது திருத்தலமாகிய திருவாரூருக்கு ஏயர்கோனாரும் உடன் போந்தமை சிவன்பால் அன்பின் உரிமைத் திறத்தின் பண்பாலாகியது. ஆளுடைய பிள்ளையாரது திருத்தாயர் பிறந்த தவத் திருநனிபள்ளி மறையோர் முதலியோர் "சடையாரை யெங்கள் பதியினிற் கும்பிட்டருள அங்கே யெழுந்தருள வேண்டும்" என (2010) விண்ணப்பித்துக் கொடு போந்த வரலாறும், அது போல்வன பிறவும் இங்கு நினைவு கூர்தற்பாலன. நிலமும் நாடும் மனையும் உடற்சுற்றமும் போன்ற பாச சம்பந்தமான பற்றுக்களானன்றிச் சிவசம்பந்த மொன்றே கருதி அளவளாவுதல் எந்தம் பெருமக்கள் பண்பாகும்.
  குளிர் பூங்கோயில் - குளிர்ச்சியுடைய நீர்ப்பூவாகிய தாமரைபோன்றகோயில்; பூங்கோயில் என்ற பெயர்க் காரணக்குறிப்பு; "அனையதனுக் ககமலரா மறவனார் பூங்கோயில்"(135); இக்குளிர் பிறவிவெப்பத்தை மாற்றும் தன்மையுடையது என்பதும் குறிப்பு. ஈண்டுக் கலிக்காமனார் கொண்டிருந்த மூண்ட சினத்தினையும் மாற்றித் தண்ணிய நட்பு உளதாகச் செய்த குறிப்புமாம்.
  நாடர் - தலைவனாருங் கூடவே நிலவினாரைக் கும்பிட்டுறைந்தனர் என்க.
  நிறைந்த அன்பால் உறைந்தனர் - என்பதாம். மனத்தினுள் முன்னர்ப் பகைமை யிருந்த இடத்தில் அதனைப் போக்கி அன்பு நிறைதலினால் என்க.
  நண்பால் - என்பதும் பாடல்
 

407