பக்கம் எண் :

440திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  திருப்புன்கூர்
  திருச்சிற்றம்பலம்

பண் - தக்கேசி

 
ந்த ணாளனுன் னடைக்கலம் புகுத வவனைக் காப்பது காரண மாக,
வந்த காலன்ற னாருயி ரதனை வவ்வி னாய்க்குன்றன் வண்மைகண் டடியேன்
எந்தை நீயெனை நமன்றமர் நலியி னிவன்மற் றென்னடி யானென
விலக்குஞ்
சிந்தை யால்வந்துன் றிருவடி யடைந்தேன் செழும்பொ ழிற்றிருப்

புன்கூருளானே.
 

(1)

 
"வையக முற்று மாமழை மறந்து
   வயலி னீரிலை மாநிலந் தருகோம்
உய்யக் கொள்கமற் றெங்களை" யென்ன
   வொளிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும்
பெய்யு மாமழைப் பெருவெள்ளந் தவிர்த்துப்
   பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளுஞ்
செய்கை கண்டுநின் றிருவடி யடைந்தேன்
   செழும்பொ ழிற்றிருப் புன்கூ ருளானே.
 

(2)

 
ஏத நன்னில மீரறு வேலி யேயர் கோனுற்ற விரும்பிணி தவிர்த்துக்
கோத னங்களின பால்கறந் தாட்டக் கோல வெண்மணற் சிவன்றன்மேற் சென்ற
தாதை தாளற வெறிந்தசண் டிக்குன் சடைமிசைமல ரருள்செயக் கண்டு
பூத வாளிநின் பொன்னடி யடைந்தேன் பூம்பொ ழிற்றிருப் புன்கூ ருளானே.
 

(3)

 
கற்ற மிழ்வல்ல ஞான சம்பந்த
   னாவினுக் காச னாளைப்போ வானும்
கற்ற சூதனற் சாக்கியன் சிலந்தி
   கண்ணப் பன்கணம் புல்லனென் றிவர்கள்
குற்றஞ் செய்யினுங் குணமெனக் கருதுங்
   கொள்கை கண்டுநின் குரைகழ லடைந்தேன்
பொற்றி ரண்மணிக் கமலங்கண் மலரும்
   பொய்கை சூழ்திருப் புன்கூ ருளானே.
 

(4)

 
இயக்கர் கின்னரர் யமனொடு வருண
   ரியங்கு தீவளி ஞாயிறு திங்கள்
மயக்க மில்புலி வானர நாகம்
   வசுக்கள் வானவர் தானவ ரெல்லாம்
அயர்ப்பொன் றின்றிநின் றிருவடி யதனை
   யார்ச்சித் தார்பெறு மாரருள் கண்டு
திகைப்பொன் றின்றிநின் றிருவடி யடைந்தேன்
செழும்பொ ழிற்றிருப் புண்கூ ருளானே.
 

(6)

 
கம்ப மால்களிற் றின்னுரி யானைக் காமற் காய்ந்ததோர் கண்ணுடை யானைச்
செம்பொ னேயொக்குந் திருவுரு வானைச் செழும்பொழிற்றிருப் புன்கூ ருளானை
உம்ப ராளியை யுமையவள் கோனை யூரன் வன்றொண்ட னுள்ளத் தாலுகந்
தன்பி னாற்சொன்ன வருத்தமி ழைந்தோ டைந்தும் வல்லவ ரருவினை யிலரே.
 

(10)

 

திருச்சிற்றம்பலம்