[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும் | 441 |
| பதிகக் குறிப்பு :- ஏயர் கோனாரது அடிமைத் திறத்தினைப் பாராட்டுதலும், அவர் பிணி தவிர்த்து அருளியவகையால் அவருடன் தமக்கு நட்புச் செய்தருளிய அருளிப் பாட்டினைப் போற்றுதலும் இறைவரை உயிர்கள் வந்தடைதற்குரிய காரணங்களை எடுத்துக் காட்டுதலும் குறிப்பு. பாட்டுத் தோறும் ஈற்றடிகள் பார்க்க. | | பதிகப் பாட்டுக் குறிப்பு:- (1) அந்தணாளன் - மார்க்கண்டேயர்; காரணமாக வவ்வினாய்க்கு என்று கூட்டுக. வந்த - ஆயுள் எல்லை குறித்த நாள் வந்ததென்று உயிர் கொள்ள வந்த; காலன் - காலத்தை அறுதியிட்டு அளந்து காலத்தால் வந்தான் என்ற குறிப்புப்பெறக் காலன் என்றார்; காலம் - நியதியாதி தத்துவங்களின் றொழிற் பாட்டினுக்குள் நின்று இறைவராணையின்வழி ஏனை உயிர்களின் காலத்தை அறுதியிட்டுக் கொண்டு செல்லும் ஆற்றலுடையது காலனது உயிராதலின், ஆருயிர் என்றார்; ஆர் - நிறைதல்; வலிமை நிறைதல் குறித்தது; வவ்வுதல் - நீக்குதல் குறித்தது; வவ்வினாய்க்கு - வவ்விய உன்னிடத்து என நான்கனுருபு ஏழனுருபுப் பொருளில் வந்தது; இவன் மற்றென் அடியானென விலக்கும் சிந்தையால் - இவன் என் அடியான்; உனது ஆணையுட்பட இயைபில்லை என்று விலக்கித் தம் உலகஞ் சார்வித்தல்; "அலமந்த போதாக அஞ்சேலென் றருள்செய்வான்" (பிள். ஐயாறு - 1) என்ற திருவாக்கும், அரசுகளது காலபாராயணத் திருக்குறுந் தொகைப் பதிகமும், கந்தபுராணத்தினுள் வீரவாகுதேவர் தமது தம்பியரைக் கொணரும்படி காலனுக்கு எழுதிவிட்ட ஆணையும், அதன்படி அவன் அவர்களுடனே வந்து விண்ணப்பித்த வரலாறும் (அக்கினிமுகாசுரன் வதை 211 - 229), இவைபோல்வன பிறவும் ஈண்டு நினைவு கூர்தற்பாலன. காலன் கைப்படுதலைற் தவிர்ப்பவன் காலகாலனே; இப்பிறவியினிறுதியிற் காலன் வேதனை தவிர்ப்ப தன்றி, இனியும் பிறவியில் வாராது காத்தலால் மேலும் அவ்வேதனை யில்லாது செய்பவன் என்று தமக்குறுதி சொல்வதுபோற் சொல்லி உலகை வழிப்படுத்தி உபதேசித்தபடியாம். இச்சரித்திரத்தினுட் காலனைத் தவிர்த்து ஏயர்கோனாருக்கு மீள வுயிரருளிய குறிப்பும் காண்க;-(2) ஒரு காலம் மழை மறுத்திடப் புன்கூர் இறைவரிடம் மழைவேண்டி ஏயர்கோனார் இறையிரந்து மழை பெய்யின் அதற்காகப் பன்னிருவேலி நிலம் தானமளிப்பேன் என்று வரங்கிடந்தார்; அதனுக்கிரங்கி இறைவர் பெருவெள்ளமாக மழையினை அருள, அவ்வெள்ளம் தவிர்க்க வேண்டி மேலும் பன்னிரு வேலி தானமளித்து வரங்கிடந்து அவ்வாறே அருளம் பெற்றனர். இந்நிலம் இருபத்து நான்கு வேலி எனக் குறிப்புப் பெற்று வழங்கலாயினமை இன்றும் நிகழ்வதாம். இச்சரிதம் பற்றித் திருவருளைப் போற்றி ஏயர்கோனாரது அடிமைத் திறத்தினையும் பாராட்டியது இத்திருப்பாட்டு. "வையகழற்றும்....எங்களை என்ன - இது ஏயர்கோனார் வரங்கிடந்த நிலை; அவர் குடிமக்களின் நலத்திற் பொறுப்புள்ள நிலத்தலைவராதல் மாநிலத் தருகோம் என்றதனாலும் குடிகளின் பொருட்டு வரங்கிடந்து பூதானமும் செய்தமையாலும் அறியப்படும்; அரசர் சேனைத்தலைவராதற் குறிப்பும் காண்க. பெயர்த்தும் - என்றமையால் முன்னளித்த 12 வேலி கொண்டமையுடன் மீண்டும்12 வேலி கொண்டு என்பது பெறப்படுதல்காண்க; வெண்முகில் - கருமுகிலினும் சிறந்து எங்கும் பரந்து செறிந்து அதிக காலம் மிக்க நீர்ப்பெயல் தரும் தண்மையுடையது; ஒளி - மின்னுடன் கூடிய வெண்மை ஒளி; "பொன்னம் பலத்துறை புண்ணிய னென்பர் புயன்மறந்த, கன்னன்மை தீரப் புளிற்றுக் கலிக்காமற் கன்றுபுன்கூர், மன்னு மழைபொழிந் தீரறு வேலிகொண் டாங்கவற்கே, பின்னும் மழைதவிர்த்தீரறு வேலிகொள் பிஞ்ஞகனே" (கோயிற்றிருப் பண்ணியர் விருத்தம் 54) என்று நம்பியாண்டார் நம்பிகள் இதனைப் |
|
|
|
|