| 
			
			| | 442 | திருத்தொண்டர் புராணம்  [வம்பறா வரிவண்டுச் சருக்கம்] | 
 
 |   |   |
 |  | போற்றிய திருவாக்கும் காண்க;-(3) ஏத நன்னிலம் - ஏதம் - பெருமை; நன்மை; "ஏதம்   செய்தவ ரெய்திய இன்பம்" (திருநின்றி 6-தக்கேசி நம்பி); ஈரறு வேலி - பெயர்த்தும்   கொளத்தந்த பன்னிரு வேலி; வேலி தந்த ஏயர் என அடைமொழியாக்குக; இரும்பிணி   - இச்சரிதம் பற்றிய சூலை நோயின் குறிப்பு; கோதனங்களின் அருள் செய் - சண்டீசர்   சரிதம் பூத ஆளி - பூதம் - உயிர்கள்; பூத ஆளி - உயிர்களை ஆட்கொள்ளும்தலைவன்;   பசுபதிஎன்ற பொருள்;- (4) குற்றம் செய்யினும் - உம்மை எதிர்மறை குறித்தது; உலக நிலை   பற்றிக் குற்றமாகக் காணப்படினும், இவை எவையும் குற்ற மன்று என்பது; கற்ற சூதன் -மூர்க்கநாயனார்;   "கற்ற சூதால்" (மூர்க்கர்-புரா-7=3624) என்று இத்தொடரினை ஆசிரியர் எடுத்தாண்டு விளக்குதல்   காண்க; சமணரைக் கழுவேற்றல் - சமணம் புகுந்து இகழ்தல் - குலநிலை பிறழ்தல் - சூதாடல் - கல்லெறிதல்   - வாய் எச்சில் நூலால் மேல் வலயமிழைத்தல் - இறைச்சி யூட்டல் - வாய்நீருமிழ்தல், தலைச்   செருகிய இலைப்பூச் சூட்டல், செருப்படியால் மிதித்தல் முதலியவை - திருமுன்பு தலைமயிரினை எரித்தல்   என்பன முதலிய இவை உலக நிலையினும் ஏனையோர்க்கு விதித்த நிலையினும் வைத்துக் குற்றமாக அறியார்   கூறுவன என்பது குறிப்புப் போலும். எந்தம் பெருமக்கள் சரிதங்களுள் இப்பாட்டிற்குப் பொருள்   காணும் நிலையிலாயினும் குற்றம் காண ஆராய்ச்சி புரிதல் சிவாபராதமாம். முன் குறித்தவை   உலகர் கூறும் வகை என்பதற் குதாரணமாகக் குறித்தவை. இதுவும் ஓரளவு அபாரதமே! பெரியோரும் என்   எண்ணத்துள் நிறைந்த இறைவரும் பொறுத்தருளுதல் கடன்!;- (5) நஞ்சு கண்டவர் - விட்டுணுவாதி   தேவர்கள்; இரிய - நிலைகுலைந்து பலபுறமும் ஓட; பித்த - பிறர் உண்ணில் சாதல்   விளைக்கவல்லது நஞ்சு; அது கண்டு அவர் தப்பி ஓட அதனை உண்டு சாவைக் கோருபவர் போல நின்றது   பித்தர் நிலை என்றபடி; அடைந்தார்க்கு அருள் புரிதலிற்பித்துடையவர் என்ற குறிப்புமாம்,   சீலம் - பேரருள்; அன்று அவர்களைக் காத்ததுமன்றி அதனை உலகறியக் கண்டத்தில் வைத்து   இனி யிது கண்டேனும் உயிர்கள் வந்தடைந்து உய்க என்று கொண்ட அருட்சீலம்;- (6) இயக்கர்....அர்ச்சித்தார்   பெறும் ஆரருள் - இவை பற்றிப் புராண சரிதங்கள் பலவும் காண்க; அயர்ப்பு - மறத்தல்;  ஒன்று - ஒன்றும்; சிறிதும்; முற்றும்மை தொக்கது;- (7) போர்த்த நீள் செவி   போர்த்த......பொத்திய; நீள்செவி - நீண்ட காதுகளையுடைய; "காது பொத்தரைக் கின்னரர்....குழுவுடன்   கேட்ப ஆனிழற் கீழறம் பகர" (நம்பி. தேவா - நின்றி-6); இறைவரது உபதேசம் நிரம்பக் கேட்பதற்கும்   புறம் போகாது முற்றும் கேட்பதற்கும் உதவும் பொருட்டு நீண்ட செவியினைவேண்டிப் பெற்றதனுடன்,   அவற்றைக் கைகளினால் ஒருபுறம் - பொத்திக் கேட்டனர் இரண்டு கின்னரர்கள் என்பது வரலாறு.  அந்தணாளர் - ஈண்டு அக்கின்னரர்களைக் குறித்தது. அறம் புரிந்து - அறமுத   னான்கினையும் தெரியும்படி செய்து; சொல்லாமற் சொல்லி தீர்த்தன் -தூய்மை செய்பவன்;   "நாமார்த்தாடுந் தீர்த்தன்" (திருவா); - (8) மூவெயில் செற்ற ஞான்று -திரிபுர சங்காரத்தின்போது;  உய்ந்த மூவர் - அவற்றுள் இறைவரருளால் வேவாது தப்பிய அன்பர் மூவர்; கோயில்   காவலாளர் - துவாரபாலகர்; ஒருவன் - முழா முழக்க - மூவரில் இருவர் காவலராக,   ஒருவன் முழக்க; "எண்ணுடை மூவரிராக்கதர்க ளெரிபிழைத்து"என்ற திருவாசகமும் காண்க. (தோணோக்);   மாவை நோக்கி - மாவின் வடுவகிர் போன்ற கண்ணுடையவர்; உமாதேவியார். "மாவின் வடுவகி ரன்னகண்ணீர்"   (திருவா);-(9) அறிவினான்....புரிந்து - அறுவகைச் சமயம் - உட்சமயங்க ளாறு; "ஆறு சமயத்   தவரவரைத் தேற்றுந் தகையன" (அரசு - விருத் - இன்னம்பர்); "அறுவகைச் சமயத் தோர்க்கு மவ்வவர்   பொருளாய்" | 
 | 
 | 
 |  |