|
  |  | (சித்தி); அருள் புரிந்து - அவ்வவர் தகுதிக் கேற்பப் படி முறையில் அறிவு விளக்கம்   செய்த என்க; ஆர் - நிறைந்த; நிறைதலாவது அவ்வவரும் தாந்தாங் கண்டதே பொருள் என்று   அமைவு பெற; இது கன்மக் கூறுபாட்டினால் முழுவுண்மை விளங்க வைக்காத திரோதான சத்தியின் செயல்.  குறிகொள்பாடல் - இறைவரைக் குறிக்கொண்ட சாமவேதம்; நாள் - ஆயுள்; செறிவு   - அருளின் மிகுதிப்பாடு;- (10) உம்பராளி - தேவர்களை ஆள்பவர்; தேவ தேவர்;   ஆளி - ஆள்பவர் - பெயர். | 
  |  | குறிப்பு: இத்திருப்பதிகம் மிகச் சிறப்புடையது; பாராயணம் செய்தல் பெரும்பயன்   தரும். | 
  |  | தலவிசேடம்:- திருப்புன்கூர் - I பக்.312 (பாட்டு-261); III பக்கம்.280; இவை   பார்க்க. | 
  | 3562 |                       | அங்கினி தமர்ந்து நம்பி யருளினால் மீண்டும்         போந்து பொங்கிய திருவின் மிக்க தம்பதி புகுந்து பொற்பிற்
 றங்குநா ளேயர் கோனர் தமக்கேற்ற தொண்டு செய்தே
 செங்கண்மால் விடையார் பாதஞ் சேர்ந்தனர் சிறப்பி னோடும்.
 |  | 
  |  | 408 | 
  |  | (இ-ள்) அங்கு.....போந்து - அத்திருவாரூரில்இனிதாக விரும்பி எழுந்தருளி யிருந்து நம்பிகள்   பால் அருள்விடை பெற்று மீண்டும் தமது திருநகரத்திதினிற் சென்று சேர்ந்து; பொற்பில் தங்குநாள்   அழகியதாக எழுந்தருளி யிருந்த காலத்தில்; ஏயர்கோனார்.....செய்தே - ஏயர்கோனார் தமக்கேற்றனவாகிய   திருப்பணிகளைச் செய்தே; செங்கண்....சிறப்பினோடும் -சிவந்த கண்ணையும் பெருமையினையுடைய   விடையினையுடைய இறைவரது திருவடிகளைச் சிறப்பினோடும் சேர்ந்தனர். | 
  |  | (வி-ரை) அங்கு - முன்பாட்டிற் கூறிய அத்திருவாரூரில்; முன்னறிசுட்டு. | 
  |  | அருளினால் - அருள் விடை கொடுப்பப்பெற்று. | 
  |  | பொங்கிய திருவின்மிக்க - முன்னரே பீடுதங்கிய தெய்வத் திருப் பெருமன் கலமாயிருந்த   அந்நகர் இப்பொழுது இறைவர் செய்த அருளிப்பாட்டினாலும் நம்பிகளின் நட்புச் சேர்ந்த சிறப்பினாலும்   அப்பெரிய திரு மேலும் பொங்கிற்று என்பதாம். | 
  |  | பொற்பில் தங்குதல் - தமது சிவச்சார்பாகிய இயல்பினால்வாழ்தல். | 
  |  | தமக்கு ஏற்ற தொண்டு - இறைவன்பாலும் அடியார்பாலும் பணி செய்தல்; "அடிபணி வாரடிச்   சார்ந்து, பொங்கு காதலி னவர்பணி போற்றுதல் புரிந்தார்" (3160); "சடைமுடி யார்திருப்   புன்கூர்க் கதிகமாயின திருப்பணி யனேகமுஞ் செய்து, நிதிய மாவன நீறுகந் தார்கழ லென்று, துதியினாற்பரவித்   தொழுது" (3161) என்றவை காண்க. | 
  |  | செய்தே - ஏகாரம் தேற்றம்; தொண்டே செய்து என்று ஏதாரம் பிரித்துக் கூட்டுக. | 
  |  | செங்கண் மால்விடை - சிவந்த கண்ணையுடைய திருமாலாகிய விடை என்றலுமாம். | 
  |  | சிறப்பினோடும் சேர்ந்தனர் என்க; சிறப்பாவது சிவசிந்தனை மறவாத அன்பு. | 
  | 3563 |                       | நள்ளிரு ணாய னாரைத் தூதுவிட் டவர்க்கே நண்பாம் வள்ளலா ரேயர் கோனார் மலரடி வணங்கிப் புக்கேன்
 உள்ளுணர் வான ஞான முதலிய வொருநான் குண்மை
 தெள்ளுதீந் தமிழாற் கூறுந் திருமூலர் பெருமை செப்ப.
 |  | 
  |  | 409 |