பக்கம் எண் :

444திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  (இ-ள்) நள்ளிருள்...வள்ளலார் - ஈடு இரவிலே தமது தலைவரைத் தூதாக விடுத்த நம்பிகளுக்கே நண்பராக ஆகிய வள்ளலாராம்; ஏயர்கோனார் மலரடி வணங்கி -ஏயர்கோனாருடைய மலர் போன்ற திருவடிகளை வணங்கி (அத்துணை கொண்டு); உள்ளுணர்வான....செப்ப - உள்ளே உணரத்தக்கதாகிய ஞானம் முதலாகிய ஒரு நான்கின் உண்மையினைத் தெளிவிக்கும் இனிய தமிழினாற் கூறும் திருமூலதேவ நாயனாரது பெருமையினைச் சொல்லுவதற்கு; புக்கேன் - இனிப் புகுகின்றேன்.
  (வி-ரை) நன்இருள் - நடுஇரவில்;"பாதி இரவில்" (3493); திணிந்த இருளில் என்ற குறிப்புமாம்.
  இருளில் - தூது விட்டவர் - என்க; இருள் - இருளின்கண்; எழனுருபு தொக்கது; நள் இருள் - நாயனார் என்றே கூட்டி இரவில் ஆடுகின்ற நாயனாராகிய இறைவர் என்றலுமாம். இருள் - சங்காரகாலம்; நள் இருன் - நள் - நட்புச் செய்யும் - புரவி தீர்த்து ஒன்றுவிக்கும் - கருத்துடன் கூடிய அவ்விரவிலே என்ற குறிப்பும்பட நின்றது.
  தூது விட்டவர்க்கே நண்பாம் - தூது விட்டதன் பொருட்டுப் பகைமை பூண்டு தாம் வெறுத்த அந் நம்பிகளுக்கே என ஏகாரம் தேற்றம்.
  நள் இருள்....வள்ளலார் - ஏயர்கோன் கலிக்காமர் சரித முழுமையும் திரட்டிய சாரமாய் எடுத்துக் காட்டியது கவிநயம்.
  செப்பப் - புக்கேன் என்று கூட்டுக. புக்கேன் - புகுகின்றேன்; இறந்தகாலம் நிகழ்காலப் பொருளில் வந்தது காலவழுவமைதி.
  உள்ளுணர்வான ஞானம் - உள்ளததால் அனுபவத்தில் உணரப் படுவதன்றி உரையால் உரைக்கலாகாத ஞானம்; அதனையும் கூறும் என்று திருமூலர் பெருமை குறித்தவாறு.
  முதலிய - முதலாக; சிறப்புடைய முடிந்த முடிபாகிய.
  ஞான முதலிய ஒரு நான்கு - நான்கினுட் பயனாக வுள்ளது ஞானமாதலின் அதனைச் சுட்டிப் படிமுறையாகிய ஏனையவற்றை அதனுள் அடங்க வைத்தார்."சிறப்புடைப் பொருளை முற்படக் கிளத்தல்"; "நலஞ் சிறந்த ஞானயோகக் கிரியா சரியையெலாம், மலர்ந்த மொழித் திருமூல தேவர்" (28) என்று முடித்துக் காட்டியருளுவதும் காண்க; நான்கு - ஞானம் யோகம் கிரியை சரியை என்பன.
  உண்மை - உண்மை நிலைகளை; தெள்ளும் - தெளிய அறிவிக்கும்; பிறவினைப் பொருளில் வந்தது.
  ஞான முதலிய ஒரு நான்கு உண்மை - இவை சிவாகமங்களுள் இறைவனால் அருளப்பட்டன. இவற்றை இனிய தமிழினால் திருமந்திரத்தினால் அருளியவர் திருமூல தேவர்; எனவே இறைவர் அவ்வாகமங்களைத் தமிழினன்றி (வேறு) வடமொழியில் அருளினார் என்பது கருதக் கிடக்கின்றது; "ஆகமம் செப்ப வந்தேனே" (திருமந் -1-73); "இங்கியான் வந்த காரணம், நீலாங்க மேனி நேரிழையாளொடு, மூலாங்கமாக மொழிந்த திருக்கூத்தின், சிலாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே" (மேற்படி76) (இங்கு வேதம் என்பது ஆகமம் ஞானம் என்ற பொருளில் வந்தது).
  தெள்ளு தீந்தமிழ். "என்னை நன்றாக யிறைவன் படைத்தனன், றன்னை நன்றாகத் தமிழ்ச்செய்யு மாறே" (மேற்படி81).
  உண்மை - இறைவரது சத்திய வாக்காகிய சிவாகமம்.
  பெருமை - செப்ப - ஏனைச் சரிதங்கள் போல இவ்வுலகிற்பிறந்து அடிமை செய்து திருவடி யடைந்த நிலை என்பதின்றித், திருமூல தேவ நாயனார் திருக்கயிலையில்