| அருள் பெற்ற சிடியோகியராகி இந்நிலவுலகில் வழிக்கொண்டு போந்த காலத்து, மூலன் என்னும் இடையன் உடலில் பரகாயப் பிரவேசம் என்ற சித்தி வழியாகப் புகுந்து, திருவாவடுதுறையிற் போதியின் கீழ் அனேக காலம் சிவயோகத்திருந்து திருமந்திரமருளினார் என்ற அளவே இப்புராணத்தினுட் பேசப்படுவதாம். அஃது அவரது சரிதம் எனப்படாது பெருமை கூறும் அளவால் அமைதலின் பெருமை செப்ப என்றார். |
| 409 |
| தலவிசேடம்:-(1) திருப்பெருமங்கலம் - இஃது இப்பெயராலே இன்றும் வழங்குகின்றது. ஏயர்கோன் கலிக்காமனாரது பதி. அவரது திருமனை இருந்த இடம் முதலிய அடையாளங்கள் ஒன்றும் கிடைத்தில! இங்குக் கோயிலில் அவரது திருஉருவம் இல்லை. வைத்தீசுவரன் கோயிலி (புள்ளிருக்கு வேளூர்) னின்றும் மேற்கே மட்சாலை வழி 2 நாழிகை யளவில் அடையத் தக்கது; திருப்புன் கூருக்கு வடக்கே ஒரு நாழிகை யளவில் உள்ளது. |
| (2) திருப்புன்கூர் - முன் உரைக்கப்பட்டது. |
| சரிதச் சுருக்கம் ;- ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - சோழ நாட்டிலே அணிநகரம் திருப்பெருமங்கலம். அதில் சோழர்களது சேனாபதிக் குடியாகிய ஏயர்கோக்குடி வேளாண்மையிற் சிறந்து விளங்கியது. அதனுள் வந்தருளியவர் கலிக்காமனார். அவர் சிவனடியார் பத்தியிற் சிறந்து வாழ்ந்தனர். தமது பதிக்கு அணிமையில் உள்ள திருப்புன்கூரில் அதிகமான அநேகம் திருப்பணிகளும் செய்து திருநீற்றுச்செல்வமே செல்வம் எனக்கொண்டு அந்நெறியில் ஒழுகி விளங்கினார். அந்நாளில் நம்பியாரூரர் இறைவரைப் பரவையாரது ஊடலைத் தீர்ப்பதற்காகத் தூது செல்ல ஏவியது கேட்டு மிகவும் சினந்து இழித்துரைத்தனர். அதுகேட்டு நம்பிகள் பிழையுடன்பட்டு அவரது நட்பினைப் பெறவேண்டி இறைவர்பால் விண்ணப்பித்தனர். அவரருளியவாறே அந்நட்பினையும் பெற்றருளினர்; அவ்வரலாற்றின் விரிவே இப்புராணமாகும்; அதுவருமாறு:- |
| குண்டையூர் நெற்கொண்டது |
| திருத்தொண்டத்தொகையினை அருளிச் செய்தபின்னர் நம்பிகள் திருவாரூரில் புற்றிடங் கொண்டாரை முப்பொழுதும் அன்புடன் பணிந்து அங்கு எழுந்தருளியிருந்தனர். அந்நாளில் குண்டையூர்க் கிழார் என்னும் வேளாளர் பெருந்தகையார் நாடோறும் நம்பிகளது திருமாளிகைக்குத் தவிராது பலநாளும் அமுதுபடி கொடுத்துவந்தார்; அப்போது மழை வளஞ் சுருங்கியமையால், படி எடுக்கப்போதாமையால், அவர் மனம் வருந்திப் பெருங் கவலையினால் துயரெய்தி அமுது செய்யாது துயில் கொண்டனர். அன்றிரவு இறைவர் அவர் கனவிலே வந்து "ஆரூரனுக்காக உனக்கு நெல் தந்தோம்" என்றருளிக் குபேரனக்கு ஆணையிட, அவ்வூர் முழுதும் வானமளாவும் நெல்மலையாய்க் குவிந்தது. காலையில் அது கண்டு அதிசயித்துக் களித்த குண்டையூர்க்கிழார் அதனை எடுக்கப் போதிய ஆளில்லாமையால் நம்பிகளிடம் சென்றறிவித்தனர் - அதுகேட்ட நம்பிகள் அவருக்கு முகமன் சொல்லித் தாமும் குண்டையூர் வந்து சார்ந்தனர். நெல்லின் மலையினை நோக்கி இதனை எடுக்க ஆளும் இறைவரே தரிலன்றி ஒருவராலும் எடுக்க வியலாதென்று அருகில் உள்ள திருக்கோளிலி என்னும் பதியினிற் சென்று, நெல்லிட ஆள் வேண்டி இறைவரை "நீள நினைந்தடியேன்" என்ற பதிகம் பாடியருளினர். இறைவரது அருளால் அன்றிரவு பூதங்கள் அதனை ஆரூரிற் கொண்டு |