பக்கம் எண் :

472திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  வைகையாற்றுக்கு மற்றொரு வகையால் ஆக்கித் "தொடுத்த வறுமையும் பயனும்" என்ற பாட்டினுள் பாராட்டிப் போற்றி வைத்திருத்தல் காண்க.
  இனி, இயற்பகை நாயனார் புராணத்தினுள் "வயல் வளந்தர வியல்பினிலளித்துப், பொன்னி நன்னதி மிக்க நீர்பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்குவதோர், நன்னெ டும்பெருந் தீர்த்தம்" (404) என்றது இக்கருத்துடன் மாறுபடுமோ? எனின், படாது; இது முன்னரே ஆண்டு விளக்கப்பட்டது காண்க. மிக்க நீர் என்றது வெள்ள காலத்திற் பெருகி மிகுந்த நீர் என்ற குறிப்புடைமையாலும், ஈண்டு "வயிறு நிறையாத" என்றமையால் நிறைவுபட வழங்காது சுருங்கிய அளவில் மட்டும் தருவது (starvation diet) என்ற குறிப்புடைமையானும் அமையுமென்க.
  இனி, ஈண்டு இத்தன்மையாற் காவிரியைச் சிறப்பித்தது, விதிவிலக்குகளை உலகுக் குணர்த்தி வழிப்படுத்த வரும் சிவாகமமாகிய திருமந்திரம் வந்து வாய்ப்பதற்குப் பொருந்த உரைக்கும் தன்மை காட்டும் குறிப்புமாகும்.
  என மலைத்து - கடல் வயிற்று - என்பனவும் பாடங்கள்.
 

8

3572
காவிரிநீர்ப் பெருந்தீர்த்தங் கலந்தாடிக் கடந்தேறி
ஆவினருங் கன்றுறையு மாவடுதண் டுறையணைந்து
சேவில்வரும் பசுபதியார் செழுங்கோயில் வலம்வந்து
மேவுபெருங் காதலினாற் பணிந்தங்கு விருப்புறுவார்,
 

9

3573
அந்நிலைமைத் தானத்தை யகலாத தொருகருத்து
முன்னியெழுங் குறிப்பினான் மூளுமா தரவெய்தப்
பின்னுமகன் றேகுவார் பேணவருங் கோக்குலங்கள்
பொன்னிநதிக் கரைப்புறவிற் புலம்புவன வெதிர்கண்டார்.
 

10

  3572. (இ-ள்) காவிரி....கடந்தேறி - காவிரி நீராகிய பெருமையுடைய தீர்த்தத்தில் கலந்து நீராடி அதனைக் கடந்து அதன் தென்கரையில் ஏறிச் சென்று; ஆவின்....அணைந்து - பசுவின் கன்றாக உமை அம்மையார் அணைந்து தவஞ் செய்யும் திருவாவடுதுறையினை அணைந்து; சேவில்....வலம்வந்து - இடபத்தில் எழுந்தருளும் பசுபதியாராகிய இறைவனாருடைய செழுங் கோயிலினை வலம்வந்து வழிபட்டு; மேவு....விருப்புறுவார் - பொருந்திய பெருங் காதலினாலே வணங்கி அங்கு விருப்ப முடையவராகி,
 

9

  3573. (இ-ள்) அந்நிலைமை....ஆதரவெய்த - அந்த நிலைமையிலுள்ள அப்பதியினை விட்டு நீங்காததோர் கருத்துத் திருவுள்ளத்தில் நினைய எழுகின்ற குறிப்பினாலே பெருகிய அன்பு பொருந்தக் கண்டும்; பின்னும் அகன்று ஏகுவார் - அதன் பின்னும் அதனைவிட்டு நீங்கிச் செல்வாராகிய யோகியார்; பேணவரும்....எதிர்கண்டார் - மேய்ப்பதற்காக அங்கு ஓட்டப்பட்டு வரும் பசுக் கூட்டங்கள் காவிரி நதியின் கரையிற் புறவினிடத்தே புலம்புவனவற்றை எதிரில் கண்டனர்.
 

10

  இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
  3572. (வி-ரை) காவிரி நீர்ப் பெருந் தீர்த்தம் - பெருந் தீர்த்தமாகிய காவிரி நீர் என்க; தீர்த்தம் - தூய்மை செய்யும் தன்மையுடையது; நீர் என்ற அளவில் மட்டும் அதையும் ஏனைய ஆற்று நீர்கள் போல் அல்லாது, தீர்த்தமாம் (தூய்மை செய்வது) தன்மையும் உடையது காவிரியின் நீர் என்பதாம்; நீர்த் தீர்த்தம் கலந்தாடி என்றது நீர் என்ற தன்மையால் உடலும், தீர்த்தம் என்ற தன்மையால்