பக்கம் எண் :

[வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்] 34. சாக்கிய நாயனார் புராணமும் உரையும்559

யம், பவுத்தம், ஆருகதம் என்பனவாதி சமயக்கொள்கைகளின் வைத்து உற்றுநோக்கி இக்குறைபாடுகளையும், சைவத்தின் முழுமையும் உண்மையாகிய மேன்மையினையும் கண்டுகொள்க.சித்தியார் பரபக்கமும், மாபாடியமும் பார்க்க.
இவ்வியல்பு....என - இவ்வியல்பு - முன்கூறியபடி விதித்த பொருள் நான்கினையும் கண்டு பொருள் நிச்சயம் செய்து ஞானமும் வீடும் அடைய வழிகாட்டும் இயல்பு; அல்லவற்றுக் கில்லை - எதிர்மறையாற் கூறியது உறுதி குறித்தற்கு.
உய்வகையாற் பொருள் சிவன் - இஃது இதுகாறும் கூறிய பரபக்க நிராகரணத்தாலும் சில சமய உறுதிப்பாட்டுணர்வினாலும் போந்த முடிபாகிய பயன்; உய்வகை - மெய்ஞ்ஞான முணர்ந்து பிறந்திறக்கும் நிலை நீளாது ஒழிந்து (3637) உய்யும்வகை; வீடுபெறும் தவம். வகையால் வருவதனை வகை என்றார்.
பொருள் சிவன் - பொருள் - உண்மைப் பொருளாவார் சிவபெருமானேயாம் என்ற முடிபு; சிவன் - ஈண்டுச் சிவநெறியினைக் குறித்தது
இப்பாட்டிற்கு இவ்வாறன்றி வேறு வேறாக உரைத்தனர் முன் உரைகாரர்கள்.
இதனாலே பதிபசு பாசமாகிய முப்பொருளுண்மையும், அவற்றின் இலக்கணமும், சாதனமும், பயனுமாகிய சைவசித்தாந்த உண்மைகள் முற்றும் பெறவைத்த ஆசிரியரது தெய்வக் கவிநலமும் கண்டுகொள்க.
அல்லவருக்கில்லை - கொடுப்பானும் - என்பனவும் பாடங்கள்.

5

"செய்வினையுஞ் செய்வானும்" 3640 என்ற இத்திருப்பாட்டுக்கு ஒரு பெரியாரின் உரை வருமாறு:-
(இ-ள்) மெய்வகையால் விதித்த பொருள் - உண்மைக் கூறுபாட்டால் துணியப்பட்ட பொருள்களாவன; செய்வானும் செய்வினையும் அதன் பயனும் சேர்ப்பவனும் நான்கு ஆகும் என் - வினைமுதலாகிய உயிரும் அதனாற் செய்யப்படும் தொழிலும் அத்தொழிலின் பயனும் அவற்றை அவ்வுயிர்க்குக் கூட்டுபவனுமாகிய நான்குமாம் எனவும்; இவ்வியல்பு சைவநெறி அல்லவற்றுக்கில்லையென - இப்பெற்றித்தாய பொருட்டுணிபு சைவ சித்தாந்த நெறியல்லாத ஏனை நெறிகள் எவற்றினுக்கும் இல்லையெனவும்; சிவன் பொருள் என்று - இங்ஙனமாதலின் சிவநெறியொன்றே உண்மை நெறியென்றும்; உய்வகையால் கொண்டு - உய்தற் கேதுவாது முன்பு செய்து கொண்ட தவத்தின் றிறத்தால் உளங்கொண்டு சிந்தித்து; அருளாலே உணர்ந்து அறிந்தார் - முதல்வனருளாலே தெளிந்து அநுபவமாக அறியப் பெற்றார். (எ-று)
(வி-ரை) உய்வகை என்புழி வகை என்பது கூறுபாடு. அஃதாகுபெயராய்த் தவத்தினை உணர்த்தி நின்றது. "1இவ்வான்மாக்களுக்கு முற்செய் தவத்தான் ஞானநிகழும்" என்பவாகலின் உளங்கொண்டு சிந்தித்தல், தெளிதல் முதலாய ஞான நிகழ்ச்சிக்குத் தவங்காரணமா மென்பதறிக. பொருள் முன்னையது பதார்த்தம்; பின்னையது உண்மை, சிவன் என்பது ஆகுபெயராய்ச் சிவநெறியை உணர்த்திற்று. பிரிநிலை ஏகாரம் விகாரத்தாற் றொக்கது. அருளாலே என்புழியும் ஏகாரம், தம்மறிவுகொண்டு உணர்தலைப் பிரித்தமையின் பிரிநிலை. உணர்தல் - தெளிதல். அறிதல் - அனுபவமாக அமுந்தியறிதல். "2செய்வோரின்றிச் செய்வினையின்மையின்" என்

1 இப்பெரியார் தமது பெயரை வெளியிட வேண்டா வென்றமையால் இவ்வாறு குறிக்கப்பட்டது.
2 சிவஞான போதம் சூ. 8, அ. 2.1. 2சூ.1. அ. 2.