| 
			
			| | 560 | திருத்தொண்டர் புராணம்  [வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்] | 
 
 |   |   |
 |  |  |  |  | னும் ஏதுவால் செய்வினை கூறவே, "3வினையே செய்வது செயப்படு பொருளே, பொருளே, நிலனே காலங்   கருவி யென்றார், இன்னதற்கிதுபயனாக வென்றும், அன்ன மரபினிரண்டொடுந் தொகைஇ, ஆயெட் டென்ப   தொழின்முதனிலையே" என்ற காரகங்கள் அனைத்தும் பெறப்படுமாயினும் தலைமையுஞ் சிறப்பும் பற்றி   வினை முதலும் பயனும் கிளர்ந்தெடுத் தோதப்பட்டன. இதனுள் தொழின்முத னிலையென்றது காரகத்தை.   தொழில் செய்தற்கு முன்னே உளவாய் நிற்றலின் அப்பெயர் பெற்றன. உயிரையின்றி யமைந்து தொழிற்பட   மாட்டாத சடமாகிய ஏனைக் காரகங்களாதல் அவற்றை யின்றி அறியமாட்டாத உயிராதல் தாமே கூடமாட்டாமையின்   பாரிசேட வளவையால் சுதந்திரஅறிவனாகிய முதல்வனே அவற்றை உயிர்க்குப் பொருத்தியருளுவன்.   ஆதலின் சேர்ப்பவனையும் உடன் ஓதினார். |  |  | வினையுண்மை பெறப்படவே அதற்குப்பற்றுக்கோடாகிய மாயை யுண்மையும், அவ்விரண்டும்,     இருள் வயிற்பட்ட கண்ணுக்கு விளக்குதவுவார்போல உயிர்கட்கு முதல்வனால் உதவப்பட்டன வாதலின்     அவற்றை உயிர் அவாய் நிற்றற் கேதுவாய் நின்ற மூலமல முண்மையும் பெறப்படு மென்னுங் கருத்தால்     "4வினையி னீங்கி விளக்கிய வறிவின் முதல்வன்" எனச் செய்வினையும் சேர்ப்பவனுமாகிய     இரண்டுமே கூறினார் ஆசிரியர் தொல்காப்பியனார். " 5உலகுடல் கரணங் கால முறுபல நியதி செய்தி,     பலவிவை கொண்டு கன்மம் பண்ணுவ துண்ப தானால், நிலவிடா விவைதாஞ் சென்று நினைந்துயிர் நிறுத்திக்கொள்ளா,     தலகிலா வறிவ னாணை யணைத்திடு மருளினாலே" என அவ்வாசிரிய வசனத்தின் பொருளை விரித்துரைத்தனர்     ஆசிரியர் சகலாகம பண்டிதர். இதன்கண் நியதி என்றதனால் இன்னதற்கு இதுபயன் என்னு மிரண்டும்     தழுவப்பட்டன. |  |  | கொடுப்பானும் எனப் பாடங் கொள்வாரு முளர். இங்குக் கிடந்தவாறே திருவருட் பயனுள்     வழிமொழிந்து கொண்டு உபதேசித்தருளுதலின் அது பாட மன்றென்க. சைவநெறி யல்லவருக்கென்ற     பாடஞ் சிறப்பின்று. |  |  | இத்திருப்பாட்டுக்குச் செப்பறை, ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகள் உரை வருமாறு: |  |  | உண்மை கூறுபாட்டான் உள்பொருள் ஆவன செய்வினை முதலிய நான்குமாம், அல்லது வேறில்லை     எனவும், இப்பெற்றித்தாய இதுவும் சைவ நெறி யொன்றற்கே யுளதாமன்றி அதனின் வேறாய     நெறியனைத்திற்கும் இலதாமன்றி உளதாமாறில்லை யெனவும், இருந்தவாற்றான் சைவ நெறியொன்றே     உண்மை நெறி அதனின் வேறாய நெறியனைத்தும் பொய்நெறியெனவும், உய்தற் கேது வாய் முற்செய்து     கொண்ட தவக்கூறுபாட்டானே தம்முட்டாமே யிடம்பட்டுக் கொண்டு, இங்ஙனம் கொண்டதாய அம்முறை     தன்னறிவு கொண்டறியாது அவனருளானறிந்து துணிந்து அதனால் தன் பணி நீத்து அவன் பணியினின்றார். |  |  | மெய்வகையான் விதித்த பொருள் நான்காகுமென அல்லவற்றிற் கில்லையென பொருள் சிவமென்று     உய்வகையாற் கொண்டு உணர்ந்து அறிந்தார் எனக் கொண்டு கூட்டப்பட்டது. என, என்று,     என்பன எண்ணிடைச் சொற்கள். கூறு பாட்டை உணர்த்துவனவாய வகை இரண்டனுள் பின்னையது ஆகுபெயர்;    சிவமே என்புழிப் பிரிநிலை ஏகாரம் விகாரத்தாற் றொக்கது. பொருள்     முன்னையது திரவியம். பின்னையது உண்மை. பொய்யெனக் கூறுபாடிரண்டாகலின் மெய்வகையான்     எனப்பட்டது. உய்யா வகையுமுண்மையின் உய்வகையானென்பது மது. விதித்த என்னும்     பிறவினை தன்வினைப் பொருள் தந்து நின்றது. அறிதல் ஈண்டுத்துணிதல். அதனால் |  |  | 
 |  |  |  |  |  | 3 தொல். சொல் 4தொல். பொருள். மரபியல். 5சித்தி. சூ.2. | 
 | 
 | 
 |  |