பக்கம் எண் :

(வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - II)10

3756. திருமஞ் சனமுங் கொணர்ந்துதிரு வலகு மிட்டுத் திருமெழுக்கு
வருமன் புடனின் புறச்சாத்தி மற்று முள்ள திருப்பணிகள்
பெருமை பிறங்கச் செய்தமைத்துப் பேணும் விருப்பிற் றிருப்பாட்டும்
ஒருமை நெறியி னுணர்வுவர வோதிப் பணிந்தே யொழுகுநாள்,       9
 
3757. நீரின் மலிந்த கடலகழி நெடுமால் வரையின் கொடிமதில்சூழ்
சீரின் மலிந்த திருநகர மதனிற் செங்கோற் பொறையனெனுங்
காரின் மலிந்த கொடைநிழன்மேற் கவிக்குங் கொற்றக் குடைநிழற்கீழ்த்
தாரின் மலிந்த புயத்தரசன் றரணி நீத்துத் தவஞ்சார்ந்தான்.          10
 

     3754. (இ-ள்) மண்...வளர்ந்து - உலகத்தில் சைவநெறி ஓங்கி வளரும் படி
வளர்ந்து; முன்னைவழி...கருத்தினராய் - முற்செய் தவத்தின் வழியே தொடர்ந்து வந்த
அன்பினாலே, மேலே கண் விளங்கும் நெற்றியினையுடைய சிவபெருமானது
திருவடிகளையே பேணுகின்ற கருத்தினை உடையாராகி; உண்மேவிய அன்பினராகி -
உள்ளத்திற் பொருந்திய அன்புடையராய்; உரிமை...புரியார் - தமது உரிமையாகிய
அரசாட்சிக்குரிய தொழிலைச் செய்யாது; தெண்ணீர்...புரிவார் - தெளிந்த நீரினைச்
சடையிற்றரித்த சிவபெருமான் விளங்க எழுந்தருளிய திருவஞ்சைக் களத்தில்
திருத்தொண்டினையே செய்வாராய்,                                   7
 

     3755. (இ-ள்) உலகின்....உணர்வார் - உலகவாழ்வும், அரசவாழ்வும்
நிலையில்லாதன என்று உணர்வாராகி; புலரி...மூழ்கி - விடியற்காலையில் எழுந்து
தண்ணீரில் முழுகிக் குளித்துத் தூய்மை தரும் திருவெண்ணீற்றினும் குளித்து;
நிலவு....செய்து - நிலைபெற்ற திருநந்தன வனத்திலே நீடுகின்ற திருப்பணிகள்
பலவற்றையும் செய்து; மலரும்...அமைத்து - பூக்களையும் முகைகளையும் கொணர்ந்து
திருமாலைகளைச் சாத்துவதற்கு மகிழ்ச்சியுடனே அமைத்து                8

     3756. (இ-ள்) திருமஞ்சனமும்...சாத்தி - திருமஞ்சனமுங் கொண்டு வந்து
திருவலகும் இட்டுத் திருமெழுக்கும் வருகின்ற அன்போடும் இன்பம் பொருந்தச் சாத்தி;
மற்றும்....அமைத்து - மேலும் உள்ள திருப்பணிகளையும் பெருமை விளங்கச் செய்து
அமைத்து; பேணும்...ஒழுகுநாள் - பேணுகின்ற விருப்பத்தினாலே ஒன்றித்துச் செல்லும்
ஒழுக்கத்தின் உணர்வுவரத் திருப்பாட்டுக்களையும் ஓதிப்பணிந்தே இவ்வாறு ஒழுகுகின்ற
காலத்தில்,                                                       9
 
     3757. (இ-ள்) நீரின்...திருநகரமதனில் - நீரினால் நிறைந்த கடல்போன்ற
அகழியும் நீண்ட பெரிய மலைபோன்ற கொடிமதிலும் சூழ்ந்த சிறப்புமிக்க அத்திரு
நகரத்திலே; காரின்...கீழ் - மேகத்தின் மிகுந்த கொடையின் நிழல் மேலேயும் அதன்
கீழே கவிக்கும் வெண்கொற்றக் குடையின் நிழலுமாக அதன்கீழேயிருந்து;
செங்கோற்பொறையனெனும் - செங்கோற்பொறைய னென்னும் பெயரையுடைய;
தாரின்...சார்ந்தான் - மாலையணிந்த தோள்களையுடைய சேர அரசன்
இவ்வுலகந்தாங்கும் செயலை நீத்துத் தவநெறிசாரத் தவ ஒழுக்கத்தினைச் சார்ந்தனன்.
                                                                10
     இந்நான்கு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
 
     3754. (வி-ரை) மண்மேற் சைவநெறி வாழ என்றது உயிர்கள் சைவநெறியில்
நின்று வாழ்வடைய என்றதாம்.
 
     முன்னை வழி அன்பு - முற்செய்தவத்தால் உடன் வந்த அன்பு; “முன்பு
செய்தவத்தி னீட்ட முடிவிலா வின்ப மான அன்பினை யெடுத்துக் காட்ட” (751) என்