பக்கம் எண் :

பெரியபுராணம்9

“யானை யணிகள்...செல்வன, மான மலைநாட்டினின்மலிந்த மலைகளுடன்போ துவ
போன்ற” (3795)
 
     சேரர் குலமும் உலகும் செய் தவத்தால் - சேரர்குலம் விளங்கவும் உலகம்
சிவநெறியில் ஓங்கி நலம் பெறவும் தாம்தாம் தவஞ் செய்ததன் பயனாக; பெருகுதவம்
- அளவு படாது மேன்மேற் பெருகும் தவம்.
 

     அரனருளால் - தவத்தின் பயன் கொடுக்கும் சிவனருளாலே என்பதாம்.
 

     பெருமாக் கோதையார் - கோதையார் - சேர அரசர்களது மரபுப் பெயர்;
ஆர் - சிறப்புப் பன்மை; பெருமாக்கோதை - சேர அரசர்கள் பெயர் வழங்குமுறை.
                                                          5
3753.
 
 திருமா நகரந் திருவவதா ரஞ்செய் விழவின் சிறப்பினால்
வருமா களிகூர் நெய்யாட லெடுப்ப வான மலர்மாரி
தருமா விசும்பின் மிக நெருங்கத் தழங்கு மொலிமங் கலந்தழைப்பப்
பெருமா நிலத்தி லெவ்வுயிரும் பெருகு மகிழ்ச்சி பிறங்கினவால்.       6
 
     (இ-ள்) திருமாநகரம்...எடுப்ப - செல்வ நிறைந்த அப்பெரு நகரத்தவர்
பெருமாக்கோதையார் திருவவதாரஞ் செய்த திரு விழாவின் சிறப்பினாலே வரும்
பெருமகிழ்ச்சி மிக்கு நெய்யாடல் விழாக் கொண்டாட; வானம்...நெருங்க - கற்பகப்
பூமாரி மழை பொழியும் ஆகாயத்தில் மிக நெருங்க; தழங்கும்....தழைப்ப - ஒலிக்கும்
மங்கல வொலிகள் ஓங்கி முழங்க; பெரு...பிறங்கினவால் - பெரிய இவ்வுலகத்தில்
எல்லாவுயிர்களும் மேன்மேலும் பெருகுகின்ற மகிழ்ச்சி பெற்று விளங்கின.
 
     (வி-ரை) விழவின் சிறப்பினால் - நகரம் - நெய்யாடல் - எடுப்ப என்க.
நெய்யாடல் - நெய்யணி விழா; “திருமலிநெய் யாடல்விழாச் செங்காட்டங்குடி
யெடுப்ப” (3677); “மீதணியு நெய்யணி விழாவொடு திளைப்பார்” (1933).
 
     தழங்கும் மங்கல ஒலி - தழைப்ப - தழங்குதல் - ஒலித்தல்; முழங்குதல்;
இவை இயங்களின் ஓசையேயாயினும் மங்கலங்காட்டி எழுதலால் ஒலி என்றார்; மங்கல
வொலி என்னாது ஒலிமங்கலம் என்றதன் குறிப்புமிது. தழைத்தல் - மேன்மேல் எழுதல்.
 
     எவ்வுயிரும்....மகிழ்ச்சி பிறங்கின - யாவும் யாருங் கழறினவும் மறிந்து
நீதிமுறை புரியும் அரசர் பெருமான் அவதரித்தமையால் எல்லாவுயிர்களும்
மகிழ்ச்சியடைந்தன என்பது குறிப்பு. கழறிற்றறிவார் என்ற பெயர்க்காரணம் காண்க.
பிறங்குதல் - விளங்குதல்; மகிழ்ச்சியில் விளங்கின.                       6
 
3754.      மண்மேற் சைவ நெறிவாழ வளர்ந்து முன்னை வழியன்பாற்
கண்மேல் விளங்கு நெற்றியினார் கழலே பேணுங் கருத்தினராய்
உண்மே வியவன் பினராகி யுரிமை யரசர் தொழில் புரியார்
தெண்ணீர் முடியார் திருவஞ்சைக் களத்திற் றிருத்தொண் டேபுரிவார்,  7
 
3755.  “உலகி னியல்பு மரசியல்பு முறுதி யல்ல” வெனவுணர்வார்
புலரி யெழுந்து புனன்மூழ்கிப் புனித வெண்ணீற் றினுமூழ்கி
நிலவு திருநந் தனவனத்து நீடும் பணிகள் பலசெய்து
மலரு முகையுங் கொணர்ந்துதிரு மாலை சாத்த மகிழ்ந்தமைத்து,       8