உ சிவமயம் திருச்சிற்றம்பலம் |
37. கழறிற் றறிவார் நாயனார் புராணம் _ _ _ _ _ |
தொகை |
“கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவார்க்கு மடியேன் |
- திருத்தொண்டத் தொகை (6) |
வகை
|
மன்னர் பிரானெதிர் வண்ணா னுடலுவ ரூறியநீற் றன்ன பிரான்றமர் போல வருதலுந் தாள்வணங்க “வென்ன பிரானடி வண்ணா"னென, “வடிச் சேர"னென்னுந் தென்னர் பிரான்கழ றிற்றறி வோனெனுஞ் சேரலனே. (44) |
சேரற்குத் தென்னா வலர்பெரு மாற்குச் சிவனளித்த பாரக் கடகரி முன்புதன் பந்தி யிவுளிவைத்த வீரர்க்கு வென்றிக் கருப்புவில் வீரனை வெற்றிகொண்ட சூரற் கெனதுள்ள நன்றுசெய் தாயின்று தொண்டுபட்டே. (45) |
- திருத்தொண்டர் திருவந்தாதி |
விரி |
3748. மாவீற் றிருந்த பெருஞ்சிறப்பின் மன்னுந் தொன்மை மலைநாட்டுப் பாவீற் றிருந்த பல்புகழார் பயிலு மியல்பிற் பழம்பதிதான் சேவீற் றிருந்தார் திருவஞ்சைக் களமு நிலவிச் சேரர்குலக் கோவீற் றிருந்து முறைபுரியுங் குலக்கோ மூதூர் கொடுங்கோளூர். 1 |
புராணம்:- இனி, நிறுத்த முறையானே, ஆசிரியர், ஏழாவது வார்கொண்ட வனமுலையாள் சருக்கத்தில் நான்காவது கழறிற்றறிவார்நாயனார் புராணங் கூறத் தொடங்குகின்றார்; கழறிற் றறிவார் நாயனாரது சரித வரலாறும் பண்பும் கூறும் பகுதி. |
தொகை :- கொடைத் தன்மையினில் மேகத்தினை வெற்றி கொண்ட கழறிற் றறிவார் நாயனாருக்கும் நான் அடியேனாவேன். |
கார் - மேகம்; கொள்ளுதல் - வெற்றி கொள்ளுதல்; காரின் தன்மையை மேற்கொள்ளுதல் என்றலுமாம். காரின் தன்மையாவது கைம்மாறு கருதாது கொடுத்தல். “கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட், டென்னாற்றுங் கொல்லோவுலகு (குறள்); வெல்லுதலாவது சிவத்தன்மையிற் பொருந்த வைக்கும் சிறப் |