பக்கம் எண் :

பெரியபுராணம்205


சிவமயம்
திருச்சிற்றம்பலம்
 

38. கணநாத நாயனார் புராணம்
- - - - -
 

தொகை
 

“கடற் காழிக் கணநாத னடியார்க்கு மடியேன்”
 

-திருத்தொண்டத் தொகை - (6)
 

வகை
 

     
தொண்டரை யாக்கி யவரவர்க் கேற்ற தொழில்கள் செய்வித்
தண்டர்தங் கோனக் கணத்துக்கு நாயகம் பெற்றவன்காண்
கொண்டல்கொண் டேறிய மின்னுக்குக் கோல மடல்கடொறுங்
கண்டல்வெண் சோறளிக் குங்“கடற் காழிக் கணநாதனே”

- திருத்தொண்டர் திருவந்தாதி - (46)
 

விரி
 

3923. ழி மாநிலத் தகிலமீன் றளித்தவ டிருமுலை யமுதுண்ட
வாழி ஞானசம் பந்தர்வந் தருளிய வனப்பின தளப்பில்லா
ஊழி மாகடல் வெள்ளத்து மிதந்துல கினுக்கொரு முதலாய
காழி மாநகர்த் திருமறை யவர்குலக் காவலர் கணநாதர்.                    1
 
     புராணம்:- கணநாத நாயனாரது சரித வரலாறும் பண்பும் கூறும் பகுதி. இனி,
நிறுத்த முறையானே ஏழாவது வார்கொண்ட வனமுலையாள் சருக்கத்தினுள் ஐந்தாவது
கணநாத நாயனார் புராணங் கூறத் தொடங்குகின்றார்.
 
     தொகை:- கடற்கரையினையுடைய சீகாழி நகரில் அவதரித்த கணநாதரது
அடியார்க்கும் நான் அடியேனாவேன்.
 
     கணநாதன் - சிவகணங்களுக்குத் தலைவர்; காரணப் பெயர்; இறைவரது பெயர்;
இவருக்குச் சூட்டிக் காரணப்பெயராய் வழங்கியது. “கணநாதன்” (தாண்டகம் - காளத்தி);
கடல் - கடல் சூழ்ந்த; கடலின்றாடு உள்ள.
 
     வகை:- கொண்டல்...சோறளிக்கும் - மேகங்களை இடமாகக் கொண்டு மேலேறி
விளங்கிய மின்னலாகிய மகளுக்குத் தாழைகள் வெள்ளிய சோற்றினை அளிக்கும்
கடற்கரையில் உள்ள சீகாழி நகரில் அவதரித்த வாழ்ந்த கணநாதரென்னும் அவரே;
தொண்டரை ஆக்கி - தொண்டர்களை உண்டாக்கி; அவரவர்க்கு...செய்வித்து -
அவ்வவர்களுக்கும் அவரவர் தகுதிக்கு ஏற்றபடி பணிகளிற் பழக்கிப் பணி செய்யும்படி
செய்து; அண்டர் தம்...பெற்றவன்காண் - தேவர் தலைவராகிய சிவபெருமானது
சிவகணத்துக்கு நாயகத் தன்மையினைப் பெற்றவர் காண்க.