மேய் அத்திருத்தொண்டினில் - தொண்டு - நாயனார் செய்த எல்லாத் திருப்பணிகளின் தொகுதியைக் குறித்தது. மேய - பொருந்திய. |
விளங்குவார் - விளங்குவாராகி; முற்றெச்சம். விளங்குவார் - பயில்விப்பார் - ஆக்கி - மிக்கார் என்று மேல்வரும் பாட்டுடன் முடிக்க. |
விரும்பி வந்தணைவார்க்கு - அத்திருப்பணிகளைச் செய்ய விரும்பித் தம்மிடம் வந்து அணையும் அன்பர்களுக்கு. தம்மை விரும்பி வந்தடைந்தவர்கட்கு என்றலுமாம். |
தூய கைத் திருத்தொண்டு - தூய - தூய்மைப்படுத்துந் தன்மையுடைய; கைத் திருத்தொண்டு - சரியைப் பகுதிகள். இவை மேல்வரும் பாட்டில் விரிக்கப்படுவன; சுத்த சைவத்துக்கு உயிராவது சரியை என்றருளினர் திருமூலதேவர். “சுத்த சைவத்துக் குயிரதே” (திருமந் - 5 தந்); சைவத் திருத்தொண்டில் நிற்பவர்களேமேல் கிரியா யோகங்களையும் முறையே ஞானத்தினையும் பெற்று வீடு பெறுவார்களாதலின் அவ்வாறு பெறுதற்குரிய தூய்மையையும் தகுதியையும், முதற்கண் தருவது கைத்தொண்டேயாம் என்பது. |
துறைதொறும் - சரியையின் துறைகள் பலவற்றிலும்; அவை மேல்வரும் பாட்டிற் காணப்படும்; அவ்வவர் பக்குவ பேதம் நோக்கி, வெவ்வேறு தக்க துறைகள் வேண்டப்படுவன. |
பயில்விப்பார் - பயிற்றுவார் (3926). 2 |
3925. (வி-ரை) நல்ல...பணி செய்பவர் - நல்ல - நன்மையாவது இறைவரை அலங்கரிக்க வாய்த்த புனிதமாகிய செடி மரம் கொடிகளை வளர்த்தலும் காத்தலும் சிவன்பணிக்குப் பயன்படுத்தலும் ஆகிய இவை தீமை கலவாத, கருணையே உருவுடைய, பணி என்னும் தன்மை; செய்பவர் - நிலம் பண்படுத்தல், விதை - நாற்று முதலியவை நடுதல், நீர்பாய்ச்சுதல். களை கட்டல் முதலாயினவை செய்தல் எனப்பட்டன. பின்னர், அவ்வப்பணிகளின் தொழில்வகைக் கேற்றபடி மலர் கொய்வோர் - தொடைபுனைபவர் - மஞ்சனப் பணிக்கு உள்ளோர் - அமைப்போர்கள் - எழுதுவோர் - வாசிப்போர் என்பது காண்க. |
நறுந்துணர் மலர் - மணமுடைய துணர்களில் கொய்யத்தக்க மலர்களை என்க. துணர் - கொத்து; துணர்களில் அன்றலர்ந்தவையாய், காயரும்புகளும் முன் அலர்ந்தவையும், அல்லாதவையாய்க், குற்றமற்ற மலர்களே தெரிந்து கொய்யத் தக்கன என்பது; “கையினிற் றெரிந்து நல்ல கமழ்முகை யலரும் வேலை” (559). மலர்கள் அலரும் பருவத்தே மணமுடையவாம் என்பதும் பெறவைத்தார். தொடை - மாலை, கண்ணி, கோதை முதலிய பலவகையாலும் தொடுக்கப்படுவன. பற்பலவாறு புனையப்படுதலின் புனைபவர் என்றார். |
கொணர் திருமஞ்சனப் பணிக்குள்ளோர் - வேறிடத்துள்ள புனித நீர்நிலைகளினின்றும் எடுத்துக் கொணர வேண்டியிருத்தலின் கொணர் என்றார். பணிக்கு உள்ளோர் - இப்பணி செய்வோர் தூய்மையு மரபும் முதலிய தகுதியுள்ளோர்களேயாதல் வேண்டும் என்பது குறிப்பு. |
அல்லும்.....அமைப்போர்கள் - ஓரிடமும் விடாது உடல் முயற்சியினால் ஒழுங்குபட அமைக்கப்படல் வேண்டுவன திருவலகும் திருமெழுக்குமாம் என்பது; பலபேரும் வழிபடும் நிலைகளாதலின் இவை அல்லும் நண்பகலும் விடாது செய்யப்படுதல் வேண்டும் என்பதுமாம். அல் - இரவு. நண்பகல் - உச்சிவேளை. இவை வழிபாட்டு நேரங்களல்லாமையும் குறிக்க; காலை மாலைகளில் வந்து வழிபடுவோர்க் கிடையூறின்றி முன் எச்சரிக்கையாய்ச் செய்யத்தக்கன என இவை செய்தற் |