பக்கம் எண் :

பெரியபுராணம்209

3927. இப்பெ ருஞ்சிறப் பெய்திய தொண்டர்தா மேறுசீர் வளர்காழி
மெய்ப்பெ ருந்திரு ஞானபோ னகர்கழன் மேவிய விருப்பாலே

முப்பெ ரும்பொழு தருச்சனை வழிபாடு மூளுமன் பொடுநாளும்
ஒப்பில் காதல்கூ ருளங்களி சிறந்திட வொழுகினார் வழுவாமல்.      5
 
     (இ-ள்) இப்பெரும்....தொண்டர் தாம் - இவ்வாறாகிய பெருஞ் சிறப்பினைப்
பெற்ற திருத்தொண்டர்; ஏறுசீர்....விருப்பாலே - அடியவர்களது உள்ளங்களிலெல்லாம்
எப்பொழுதும் ஏறும் சிறப்பு வளர்கின்ற சீகாழியில் வந்தருளிய மெய்ப்பெருந் திருஞான
முண்டருளியவராகிய பிள்ளையாரது திருவடியைப் பொருந்திய விருப்பினாலே;
முப்பெரும்....சிறந்திட - ஒவ்வொரு நாளிலும் மூன்று பெரும் பொழுதுகளிலும்
அருச்சனை வழிபாட்டினைப் பெருகும் அன்புடன் ஒப்பற்ற காதல் மிகுவதாகிய
மனத்தில் மகிழ்ச்சி மேலோங்கும்படி செய்து; வழுவாமல் ஒழுகினார் - வழுவாது ஒழுகி
வந்தனர்.
 
     (வி-ரை) ஏறுசீர் வளர் - ஏறுதல் - மெய்த்தொண்டரது உள்ளந்தோறும்
எப்போதும் ஏறப்பெற்ற சிறப்பினால் மிகுகின்ற; “ஏறுமயி லேறி” (திருப்புகழ்)
 
     திருஞான போனகர் - ஆளுடைய பிள்ளையார்; போனகம் - அமுது;
போனகர்; அமுதுண்டவர்.
 
     நாளும் முப்பெரும்பொழுது - என்க; காலை நண்பால் மாலை என்பன;
“அந்தியு நண்பகலும்” “முட்டாத முச்சந்தி மூவாயிரவர்க்கு” “சந்தி மூன்றிலும் தாபர
நிறுத்திச் சகளிசெய் திறைஞ்சு” (நம்பி - தேவா); பெருமையாவது சிறப்பு; தமிழ்ப்
பொருளிலக்கணத்துள் வரும் பெரும்பொழுது சிறுபொழுது என்ற பகுப்பு வேறு; இங்குக்
கூறிய முப்பெரும்பொழுது வேறு; காலை நண்பகல் மாலை என்ற சிறு பொழுதுகளில்
வைத்து அறியலாம். “முப்பொழுது குறைமுடித்து” (எழுகூற்) மூளும் - மிகுதியாகிய.
 
     களிசிறத்தல் - ஒரு சொல்; மிக மகிழ்தல்.                       5
 
3928.    ஆன தொண்டினி லமர்ந்தபே ரன்பரு மகலிடத் தினிலென்றும்
ஞான முண்டவர் புண்டரீ கக்கழ லருச்சனை நலம்பெற்றுத்
தூந றுங்கொன்றை முடியவர் சுடர்நெடுங் கயிலைமால் வரையெய்தி
மான நற்பெருங் கணங்கட்கு நாதராம் வழித்தொண்டி னலம்பெற்றார்.
     (இ-ள்) ஆன...அன்பரும் - ஆயின முன்கூறிய திருத்தொண்டில் விரும்பியிருந்த
பேரன்பராகிய கணநாதரும்; அகலிடத்து...பெற்று - பரந்த நிலவுலகத்தில் எந்நாளும்
திருஞானசம்பந்தரது தாமரை போன்ற திருவடியினை வழிபடுதலாகிய நன்மையினை
அடைந்து அதன் பயனாக; தூ....எய்தி - தூயமணமுடைய கொன்றை மலர்களை
அணிந்த முடியவரது ஒளியுடைய நீண்ட திருக்கயிலைப் பெருமலையினை அடைந்து;
மான....நிலைபெற்றோர் பெருமையுடைய நல்ல பெருஞ் சிவகணங்களுக்கு நாதராகும்
வழி வழி வரும் திருத்தொண்டிலே நிலைபெற்று நின்றருளினர்.
 
     (வி-ரை) ஆன தொண்டினில் - ஆன - முன் கூறியவாறாயின; ஆன -
ஆக்கமுடைய.
 
     அமர்ந்த - விரும்பிச் செய்திருந்த.
 
     அருச்சனை நலம் பெற்று - அருச்சனையால் வரும் பயனை யடைந்ததனால்
அதன் பயனாக; பெற்று (அதனால்) எய்தி - நிலைபெற்றார் என்று காரணம்
காரியப்பொருள்பட உரைத்துக்கொள்க. தொண்டரை ஆக்கினர்; அதன் பயனால் அடிய