பக்கம் எண் :

(வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - II)214

மாற்றார்....மேலானார் - பகையரசர்கள் அஞ்சி ஒதுங்கத்தக்க நால்வகைப் படைக்
கருவிகளும் நிறைந்த வீரமுடைய செருக்கினால் மேம்பட்டார்.
 
     (வி-ரை) அருளின் வலியால் - சிவன் றிருவருள் துணை செய்தமையால் அதன்
வலிமையாலே; “அது கைகொடுப்ப” என்பது வகைநூல்; “மதியணிந்தார் திருத்தொண்டு
வாய்த்த வலி யுடைமையினால், எதிரிவருக் கிவ்வுலகி லில்லை” (3666) என்ற கருத்து.
 
     அரசு ஒதுங்க - அரசு - வலிய முடியரசர்களும் என்ற உயர்வு சிறப்பும்மை
தொக்கது; அரசரல்லாத இவரது வலிமையினைக் கண்டு முடியரசர்களும் அஞ்சியும்
தோல்வியுற்றும் ஒதுங்க என்பதாம். மேல் “வேந்தர் முனைகள் பலமுருக்கி” என்பது
காண்க.
 
     அவனி எல்லாம் அடிப்படுப்பார் - பூமி முழுதும் தமது ஆணையின்கீழ்
நிற்கச் செய்வாராகிய கூற்றுவநாயனார். வினையாலணையும் பெயர்; அடிப்படுப்பார் -
மேலானார்
- என்று முடிக்க.
 
     பொருளின்....பொலிவித்து - பொருள் - நால்வகைச் சேனைகளை வைத்துக்
காப்பாற்றவும், உலக ஆணை யரசின் பிற அங்கங்கள் செலுத்தவும் ஆதரவாயுள்ள
பொன், விளைபொருள் முதலாயினவற்றின் ஈட்டம். அளவும் காண்பரிய - எல்லை
கூட அறிய இயலாத அளவில்; பொலிவித்து - சிறக்க ஈட்டி. முடிவு - எல்லை;
அளவு.
 
     பொலிவித்து - விருத்தி செய்து; இகல் சிறக்க - போரில் வெற்றிகொண்டு
விளங்கும்படி உதவுதற்கு; சிறக்க (உதவும்) கருவி - என்க. உதவும் என்பது
இசையெச்சம்.
 
     மருளும் - மருட்சியை விளக்கும்; கண்டோர் மருளுதற்குக் காரணமான.
 
     களிறு....நான்கு - நால்வகைச் சேனை; உயிருள்ளனவற்றையும் கருவி என்றார்,
தம் வயத்தானன்றிச் செலுத்துவோர் வயத்தாற் கருவிபோலச் செலுத்தப்படும் தன்மை
பற்றி. கருவி - சேனை.
 
     மாற்றார் வெருளும் - பகைவர் இச்சேனைகளின் பெருக்கினைக்கண்ட
மாத்திரையே அஞ்சத்தக்க; “தானை யானை குதிரை யென்ற, நோனா ருட்கு மூவகை
நிலையும்” (தொல். பொரு - புற - 17).
 
     வீரச் செருக்கு - வீரத்தினால் உண்டாகிய இறுமாப்பு; பெருமிதம்; இது
தள்ளத்தக்க குற்றங்களுள் ஒன்றாகிய குணமன்று என்பார் வீரம் என்ற அடைமொழி
புணர்த்தி ஓதியதன்றி, மேலானார் என்றும் கூறினார். மேலாதல் - மிகுந்தநிலையன்றி
மேம்படுதல் - மேன்மையடைதல் என்ற குறிப்புமுடையது.                2
 
3932. வென்றி வினையின் மீக்கூர வேந்தர் முனைகள் பலமுருக்கிச்
சென்று தும்பைத் துறைமுடித்துஞ் செருவில் வாகைத்திறங்கெழுமி
மன்றன் மாலை மிலைந்தவர்தம் வளநா டெல்லாங் கவர்ந்து, முடி
ஒன்று மொழிய வரசர்திரு வெல்லா முடைய ராயினார்.
         3
 
     (இ-ள்) வென்றி....முறுக்கிச் சென்று - வெற்றிபெறும் செயலில் மேன்மேலும்
பெருகும்படி வேந்தர்களுடன் பொருகின்ற போர்கள் பலவற்றிலும் முடுகி மேற்சென்று;
தும்பை...மிலைந்து - (புறப்பொரு ளிலக்கணத்துப் பெறப்படும்) தும்பைப் பூச்சூடும்
துறையின் போர்த்தொழில்களை முடித்தும், அப்போர்களில் வெற்றிபெற்றபின்
வாகைமாலையின் வகையில் எழுகின்ற மணமுடைய மாலை