கற்பனை ;- (1) அரனருளால் வரும் வலிமைபெற்றோர்களை யாரும் வெல்லுதல் அரிது. |
(2) வளநாடு முதலிய அரசர் திரு எல்லாமிருந்தாலும் மணிமுடியின்றி ஆளுதல் அரசாட்சியின் நிறைவாகாது. |
(3) அரசமுடியானது அதனைக் சூட்டுதற்குரிமையுடையோர்பாலே சூட்டப் பெறத்தக்கது. |
(4) அரசமுடி சூட்டும் உரிமை பெற்ற பெரியார்கள், முன் வழிவழி மரபு வழக்கானன்றி வெறுந் தோள்வல்லமைபற்றி அஞ்சிப் பிறருக்கு அதனைச் சூட்ட உடன்படமாட்டார். அவ்வாறு செய்ய நேரின் அவ்விடம் விட்டகல்வர். |
(5) அன்பர்க்காகும் அரசமுடி அரன்றிருவடித் துணையாம். |
(6) அரன்கோயில்களில் எங்கும் தனித்தனியே உலகு விளங்கப்பெறும் பூசனை முறை யியற்றுவித்தல் அரசர்களின் முதற் கடமையாகும். |
(7) நல்ல அரசாட்சியினால் வானோரும் மகிழ்வடைகுவர். |
| கூற்றுவ நாயனார் புராணம் முற்றும். - - - - - |