பக்கம் எண் :

பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்252

     (வி-ரை) வான் - என்பதனை மேலுங் கூட்டுக.
 
     கொடி - காக்கை. கருங்கொடி - இயற்கையடை.
 
     மேல் நிலாவு - கழுகு பருந்து முதலிய பெரும் பறவைகள்; காக்கைகள் பறக்கும்
உயரத்தின்மேல் ஆகாயத்தில் மிக்க உயரத்தில் பறக்கும் இயல்பு குறித்தது.
 
     ஏனை - குலம் - பருந்தின் பல பகுப்புக்கள். குலம் - இனம் - ஒன்றன் கூட்டம்.
 
     மான ஊண் - பருத்த மாமிசத் துண்டங்கள்; ஊன் - இங்கு இவற்றின்
உணவாகிய மாமிசத்துண்டங்களைக் குறித்தது. மானம் - பருமை - பெருமை.
 
     ஆனவூன் - என்றலுமாம். ஆன - முன் கூறியவாறு துண்டமாயினமையிற் பெற்ற
தம் உணவு.
 
     கொடி - பருந்து - கழுகின் குலம் - எழுந்தவே என்க. எழுந்தவே
என்றதனால் அவை முன்னர் மொய்த்துக் கூடி, ஊன் துண்டங்களைப் பிய்த்து உண்டு,
மேலும் கொண்டு சென்றன என்பவை உணர்த்தப்பட்டன. தன்மை நவிற்சியணி 25
 

வேறு
    

3967. வரிவிற் கதைசக் கரமுற் கரம்வாள்
சுரிகைப் படைசத் திகழுக் கடைவேல்
எரிமுத் தலைகப் பணமெற் பயில்கோல்
முரிவுற் றனதுற் றனமொய்க் களமே.                            26
 
     (இ-ள்) மொய்க்களமே - அந்தப் போர்க்களத்திலே; வரிவில் - கதை - சக்கரம்
- முற்கரம் - வாள் - சுரிகைப்படை - சத்தி - கழுக்கடை - வேல் - எரிமுத்தலை -
கப்பணம் - எற்பயில் கோல் முரிவுற்றன - வரிவில் முதலாகக் கோலீறாகச்
சொல்லியவை ஒன்றோடொன்று தாக்கி முரிந்தனவாய்; துற்றன - நெருங்கியன.
 
     (வி-ரை) மொய்க்களம் - போர்க்களம். மொய் - போர்.
 
     வரிவில்....கோல் - அந்நாளில் போரில் வீரர் கையாளும் படைக்கலங்களை
அடைமொழியின்றி அடுக்கிக்காட்டிக் கூறிய கவிநயம் கண்டுகொள்க.
 
     வரிவில் - வரிந்து கட்டிய வில்; முற்கரம் - முன்கையிற் பற்றும் சம்மட்டி
போன்ற ஒருவகை ஆயுதம்; முசுண்டி என்பர். சுரிகைப்படை - உடைவாள்; சத்தி -
சிறு சூலம்; கழுக்கடை - ஈட்டி; எரிமுத்தலை - தீப்போன்று பாயும் சூலம்.
அக்கினியைச் சொரியும் சூலம் என்பாருமுண்டு; கப்பணம் - யானை நெருஞ்சில்
வடிவாக இரும்பினாற் செய்த ஒருவகைப் படை; எல் பயில் கோல் - ஒளிமிக்க
அம்பு. வில் - கதை முதலியன உம்மைத்தொகைகள்.
 
     முரிவுற்றன - முற்றெச்சம், முரிந்தனவாகி.
 
     எற்பரிகோல் - என்பதும் பாடம்.                               26
3968. வடிவே லதிகன் படைமா ளவரைக்
கடிசூ ழரணக் கணவாய் நிரவிக்
கொடிமா மதினீ டுகுறும் பொறையூர்
முடிநே ரியனார் படைமுற் றியதே.                              27
 
     (இ-ள்) வடிவேல்....மாள - வடித்த வேலேந்திய அதிகனது படைகள் மடிதலும்;
முடிநேரியனார் படை - முடிசூடிய மன்னராகிய புகழ்ச் சோழரது சேனைகள்;
வரை...நிரவி - மலைக்காவல் குழ்ந்த அரணத்தோடு கணவாய்களையும் இடித்