துச் சமதரையாக்கி; கொடி....பொறையூர் - கொடிகளையுடைய பெரிய மதிலையுடைய குறிஞ்சி நிலத்துள்ள அவ்வூரை; முற்றியது - வளைந்துகொண்டது. |
(வி-ரை) மாள - மாண்டொழிந்ததனால், வடிவேலதிகன் படைமாள - என்றது இகழ்ச்சிக் குறிப்பு; |
வரைக்கடிசூழ் அரணம் - மலையின் இயற்கைக் காவலுடன் செயற்கையாகிய மதில் முதலிய காவலும் பொருந்திய கோட்டை. கடி - காவல். மலையாகிய காவல் சூழ்ந்துள்ள. |
கணவாய் - மலைகளின் இடையிலுள்ள வழி. |
நிரவுதல் - தகர்த்து நிலமட்டமாக்குதல். |
குறும் பொறையூர் - குறிஞ்சி நிலத்துள்ள ஊர். |
முடிநேரியனார் - முடி - முடிமன்னராகிய; ஏனைச் சிற்றரசர் அரசு புரியினும் முடிசூடும் உரிமை யில்லாதவர் என்பது. நேரியன் - சோழன். |
முற்றியது - முற்றுகையிட்டது; சூழ்ந்து வளைத்துக்கொண்டது. முற்றுகையிடுதல் என்பர். இதனைப் புறத்திணைகளுள் உழிஞைத்திணை என்பர்; பகைவருடைய மதிலை வளைத்துக் கொள்ளுதல். இது மருதத்தின் புறமென்பது தொல்காப்பியம்; இது நொச்சித் திணைக்கு மறுதலை; மேல்வரும் பாட்டில் நொச்சி பரிந்துடைய என்பது காண்க. 27 |
| 3969. | முற்றும் பொருசே னைமுனைத் தலையிற் கற்றிண் புரிசைப் பதிகட் டழியப் பற்றுந் துறைநொச்சி பரிந் துடையச் சுற்றும் படைவீ ரர்துணித் தனரே. 28 |
(இ-ள்) முற்றும்.....தலையில் - முற்றுகையிட்ட சோழரது சேனையின் போரின் முன்னே; கல்....கட்டழிய - மலையாகிய திண்மையுடைய மதில் சூழ்ந்த ஊரானது காவ லழிவுபெறவே; பற்றும்....உடைய - பற்றாகக் கொண்ட நொச்சித் துறையாகிய மதில் காவலானது பரிபவப்பட்டு உடைந்து அழியும்படி; சுற்றும்....துணித்தனர் - அதனைச் சுற்றிய படைவீரர்கள் துண்டித்தனர். |
(வி-ரை) முற்றும் - முற்றுகையிடும். |
பொரு சேனை - பொருகின்ற சோழரது சேனை. |
முனைத்தலையில் - தாக்கிய போரின் முதிர்ச்சியினால். |
கல் திண் புரிசை - “வரைக் கடிசூ ழரணம்” என்றதாம்; கல் - மலை. கட்டு - காவல் அமைப்பு. அழிய - அழிந்தமையால். |
பற்றும்துறை நொச்சி பரிந்து உடைய - பற்றும் - பற்றாகக் கொண்டு காத்த; துறைநொச்சி - “பற்றறுப்பீர்” (3958); மதில்காத்தலாகிய புறத்திணையின் நொச்சித் திணை என்னும் ஒழுக்கம். உடைய - உடைந்துவிடும்படி. உடையத் - துணித்தனர் என்க. |
சுற்றும் - சுற்றிய - சூழ்ந்த; துணித்தனர் - துண்டப்படுத்தினர்; துறை நொச்சி - நொச்சிக்கண் உணவாகிய பல துறைகளையும் குறித்தது. அவை பலவும் உடைய என்க. 28 |
| 3970. | மாறுற் றவிறற் படைவா ளதிகன் நூறுற் றபெரும் படைநூ ழில்பட |