பக்கம் எண் :

பெரியபுராணம்257

வேறு
 

3975. கண்டபொழு தேநடுங்கி மனங்கலங்கிக் கைதொழுது
கொண்டபெரும் பயத்தினுடன் குறித்தெதிர்சென் றதுகொணர்ந்த
திண்டிறலோன் கைத்தலையிற் சடைதெரியப் பார்த்தருளிப்
புண்டரிகத் திருக்கண்ணீர் பொழிந்திழியப் புரவலனார்,            34
 
3976. “முரசுடைத்திண் படைகொடுபோய் முதலமைச்சர் முனைமுருக்கி
யுரைசிறக்கும் புகழ்வென்றி யொன்றொழிய, வொன்றாமற்
றிரைசரித்த கடலுலகிற் றிருநீற்றி னெறிபுரந்தியான்
அரசளித்த படிசால வழகி!”தென வழிந்தயர்வார்,               35
 
3977. “தார்தாங்கிக் கடன்முடித்த சடைதாங்குந் திருமுடியார்
நீர்தாங்குஞ் சடைப்பெருமா னெறிதாங்கண் டவரானார்;
சீர்தாங்கு மிவர்வேணிச் சிரந்தாங்கி வரக்கண்டும்
பார்தாங்க விருந்தேனோ பழிதாங்கு வே!”
னென்றார்.          36
 
     3975. (இ-ள்) கண்ட...தொழுது - கண்டபொழுதே உடல் நடுங்கி மனம் கலங்கிக்
கைகூப்பித்தொழுது; கொண்ட......எதிர்சென்று - தம்மை மேற்கொண்டெழுந்த
பெரும்பயத்தினுடனே அதுவே குறிப்பாக எதிரே சென்று; அது......பார்த்தருளி -
அதனைத் தம்பால் எடுத்துக் கொண்டுவந்த திண்மையுடைய வலிய வீரன்
கைக்கொண்ட அத்தலையில் சடையானது நன்கு விளங்கித் தெரியப்பார்த்தருளி;
புரவலனார் - அரசராகிய புகழ்ச்சோழர்; புண்டரிக....இழிய - தாமரை போன்ற தமது
திருக்கண்களினின்றும் கண்ணீர் பொழிந்து வழிய நின்று,                  34
 
     3976. (இ-ள்) முரசு....ஒன்றொழிய - போர்முரசங்களையுடைய வலியபடைகளைக்
கொண்டுபோய் எனது முதன்மை பெற்ற அமைச்சர்கள் போரில் பகைவனை அழித்துப்
பிறரால் எடுத்துப் பேசப்படும் புகழ் பூண்ட வெற்றி ஒன்றே பெற்றது தவிர; ஒன்றாமல்
- நன்மை பொருந்தாமல்; திரைசரித்த....என - அலைதவழும் கடல் சூழ்ந்த உலகத்தில்
திருநீற்று நெறியினை நான் பாதுகாத்து அரசுசெய்த படியானது மிகவும் அழகிதாயிற்று!
என்று கூறி; அழிந்து அயர்வார் - மனமழிந்து தளர்வாராகி;                35
 
     3977. (இ-ள்) தார்தாங்கி.....முடியார் - போரில் உரியமாலையினை அணிந்து
தமது அரசனுக்குரிய கடமையைச் செய்து முடித்த சடைமுடியினையுடைய இவர்,
நீர்....ஆனார் - கங்கையைத் தரித்த சடையினையுடைய சிவபெருமானது
திருநெறியினிலே நின்றவரானார்; சீர்....பழிதாங்குவேன் என்றார் - சிறப்பினையுடைய
இவரது சடைத்தலையைத்தாங்கி வரப்பார்த்தும் இப்பூமியைத் தாங்க இருந்தேனோ?
பழியினையே தாங்குவேனானேன் என்றார்.                              36
 
     இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டுரைக்க நின்றன.
 
     குறிப்பு: தலைக்குவியலில் ஒரு தலையில் புன்சடை கண்டவுடனே நாயனார்பால்
நிகழ்ந்தமெய்ப்பாடுகளும் மன நிலையும் இம் மூன்று பாட்டுக்களானும் கூறப்பட்டன.
செருக்கும் வெற்றிப்புகழும் தமதுபேரரசினை நிலைபெறுத்திய மேனிலையும் விளங்கிய
மன நிலையில் மகிழ்ந்து நின்ற இந்நேரத்தில் சடைத்தலை கண்டமாத்திரத்தே அவை