பக்கம் எண் :

பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்264

     4. பேரரசர் தம்கீழ் உள்ள சிற்றரசர்களின் திறைபெறுவதற்கு அவர் நாடுகளுக்கு
அணிமையில் அங்கங்கும் தமது தலைநகரங்களை அமைத்துக் கொண்டு, அங்கங்கும்
சென்று தங்கி அரசகொலு வீற்றிருப்பது மரபு. இது நாடுகாவல் பற்றிய முறையுமாம்
(3952)
 
     5. பேரரசர் தமது ஆணையுள் அடங்கித் திறை செலுத்தும் சிற்றரசர்க்கு
அவ்வவர் நாட்டுச் செயலுரிமைத் தொழில் செய்யும்படி அருள்புரிவர் (3855).
 
     6. மன்னனது சேனைவீரர் தம் அரசர்க்காக எதிரிகளது படைகளுடன் போரிட்டு
உயிர் துறத்தல் செஞ்சோற்றுக் கடன் கழித்தற்பொருட்டு (3964).
 
     7. போரில் தோல்வியுற்ற மன்னன் ஓடிக் கானகத் தொளித்து உயிர் தப்பிப்
பிழைத்துப் பின்னர் நற்காலம் பார்த்திருத்தலும் வழக்கு. அதனால் அவரது வீரத்துக்
கிழுக்கின்றாம் (3970).
 
     8. போரில் வெட்டுண்டு வீழ்ந்த எதிரியின் சேனை வீரர்களின் தலைகளைக்
குவியலாக்கி, வெற்றி பெற்றோர், போர்ச் சின்னமாகத் தமது அரசனிடம் கொணர்தல்
முன்னாட் போர் முறை வழக்கினுள் ஒன்று (3973).
 

     9. சடைகொண்ட தலையினையுடையவரைப் போரிற்றானும் கொல்வது
பெரும்பழியும் சிவநெறிக்கு விலக்கும் ஆகும் (3976, 3977).
 

     10. சிவாபராதத்துக்குத் தீர்வு உயிர் கொடுத்து இறத்தலேயாம்.
 
     11. தன்கீழ் வாழும் உயிர்கள் செய்யும் குற்றங்களுக்கு அரசன் தீர்வு விதிப்பான்.
ஆனால், அரசன், தானும் தன் பரிசனங்களும் செய்து கொண்ட பழிக்குத் தீர்வு தாமே
வகுத்துக் கொள்ளுதல் வேண்டும் (3979).
 
     12. பெருங்குற்றத் தீர்வினை வகுத்து உயிர் நீப்போர் சிவநாமஞ் சொல்லிப்
புகுதல் மரபு (3980).
 
     தலவிசேடம்: I கருவூர் - எறிபத்த நாயனார் புராணத்திறுதியில்
உரைக்கப்பட்டது. II பக். 768 பார்க்க. 2237 பாட்டின்கீழ் தலவிசேடமும் பார்க்க. IV -
பக்க - 413ம் பார்க்க.
 
     2. உறையூர் - பாட்டு 2241 - தலவிசேடம் - திருமூக்கீச்சரம் பார்க்க IV -பக்கம்
419 பார்க்க.
 

41. புகழ்ச்சோழ நாயனார் புராணம் முற்றும்.

_ _ _ _ _