பக்கம் எண் :

பெரியபுராணம்265


சிவமயம்
திருச்சிற்றம்பலம்

42. நரசிங்கமுனையரைய நாயனார் புராணம்
_ _ _ _ _

தொகை

    
 
“மெய்யடியா னரசிங்க முனையரையர்க் கடியேன்”

-திருத்தொண்டத்தொகை - (7)
 

    மெய்யடியர் - மெய்யடியன் - என்பனவும் பாடபேதங்கள்.
 

வகை

    
புகழும் படியெம் பரமே? தவர்க்குநற் பொன்னிடுவோன்
இகழும் படியோர் தவன்மட வார்புனை கோலமெங்கும்
நிகழும் படிகண் டவற்கன் றிரட்டிபொன் னிட்டவனி
திகழு முடிநர சிங்க முனையர சன்றிறமே”

-திருத்தொண்டர் திருவந்தாதி - (51)
 

விரி

3983. கோடாத நெறிவிளங்குங் குடிமரபி னரசளித்து
மாடாக மணிகண்டர் திருநீறே மனங்கொள்வார்
தேடாத பெருவளத்திற் சிறந்ததிரு முனைப்பாடி
நாடாளுங் காவலனார் நரசிங்க முனையரையர்.
                   1
 
     புராணம்: நரசிங்க முனையரைய நாயனாரது சரித வரலாறும் பண்பும் கூறும்
பகுதி. இனி, நிறுத்த முறையானே, ஆசிரியர், எட்டாவது பொய்யடிமை யில்லாத புலவர்
சருக்கத்துள் மூன்றாவது நரசிங்க முனையரையர் புராணங் கூறத் தொடங்குகின்றார்.
 
     தொகை: மெய்யடியாராகிய நரசிங்கமுனையரையர் என்னும் திருத்தொண்டர்க்கு
நான் அடியேன். மெய்யடியான் - மெய் - இயற்கையடைமொழி. “வாய்மைச்,
சால்பின்மிக் குயர்திரு தொண்டினுண் மைத்திறந் தன்னையேதெளிய நாடி” (2421)
என்றபடி திருத்தொண்டின் அடிமைத் திறமானது திருவேடத்தின் உண்மையில் வைத்த
உறைப்புடைமையேயாம்; பிறிதன்று; என்ற நிலையே மெய்யடிமையாவது என்பது இவர்
சரிதக் குறிப்பென்றதாம். பெயரும் பண்பும் தொகைநூல் உணர்த்தியபடி.
 
     வகை: தவர்க்கு நற்பொன் இடுவோன் - அடியார்களுக்கு (ஆதிரை நாடோறும்)
நற்பொன் தருபவர் (அந்நிலையில் ஒரு ஆதிரை நாளில்); இகழும்படி.....கண்டு -
இகழ்ச்சி பெறும்படி ஒரு அடியார் பெண்களாற் புனையப் பெற்ற காமக்