| என்றும், எண்ணுவார் என்றும் இரண்டு வினை யெச்சங்களாற் கூறினார்; இவற்றுள் பேணுதல் தமது நெறியின் பொருட்டும், எண்ணுதல் உலகர்க்குபகாரமாகப் பிறர் பொருட்டுமாம். முன்னையதே சிறந்தது என்பார் அதனை முன்வைத்தோதினார். அஃது அடிமைநெறி; “தொண்டுபுரி அம்முனைவ ரடியடைவே அரும் பெரும்பே றெனஅடைவார்” (3984) என்ற தமது ஒழுக்கம்; பின்னையதும் வேண்டும் என்பது உலகைச் சிவநெறி நிறுத்தத் தாம் ஒழுகிக் காட்டுமுறை பற்றி; “மன்ன னெப்படி மன்னுயி ரப்படி” என்பது அரசியல் நெறி; ஆதலின் பிறர் பொருட்டாம் என்பதனை வைப்பு முறையாலுணர வைத்தார். இவ்விரண்டினையும் குறித்தலே இரட்டிப் பொன்கொடுத்த குறிப்புமாம் என்க. |
| எதிர்சென்று...பேணுவார் - இவை அடியவரை உபசரிக்கு முறை; முன்உரைத்தவை யெல்லாம் பார்க்க. (443 முதலாகிய பல இடங்கள்); அப்பெற்றியினார் - அகரம் முன்னறி சுட்டு; “மானநிலை....நீறணிந்து” என்ற அந்தப் பெற்றி என்க. 6 |
| 3989. (வி-ரை) சீலம் இலரே....எண்ணுவார் - இஃது உலகவர் பொருட்டு இரக்கம் கொண்டு அரசர் எண்ணியது. அரசர் கடமைகளுள் தம் கீழ் வாழு முயிர்கள் கீழ் நெறிப்பட்டுக் கேடுபடாதபடி காத்தற்பொருட்டுத் தாமே கருணையினால் வழிநடந்து வழிகாட்டுதல் சிறந்த பெரிய கடைமையாம்; “வையகமும் துயர் தீர்கவே” (தேவா) என்பது எந்தம் பரமசாரியரது திருவாக்கு; “எவரேனும் தாமாக விலாடத் திட்ட திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி, யுவராதே யவரவதை கண்டபோது வுகந்தடிமைத் திறநினைந்தங் குவந்து நோக்கி” (தேவா அரசு); “நலமில ராக நலமதுண் டாக நாடவர் நாடறி கின்ற, குலமில ராகக் குலமதுண் கடர தவம்புரி குலச்சிறை” (தேவாரம் - பிள்ளையார்); “உலகர் கொள்ளு நலத்தின ராயினும், அலகி றீமைய ராயினு மம்புலி, இலகு செஞ்சடை யாரடி யாரெனிற், றலமு றப்பணிந் தேத்துந் தகைமையார்” (1699) என்பன முதலியவை காண்க. ஞாலம் - இடவாகு பெயர். “அகத்தும் புறத்தும் பகையறுத்து” (3769). |
பால் அணைந்தார் - பால் - அப்பால் - அங்கு; அணைந்தார் - அணைந்த ஏனை அடியவர்கள்; இரட்டிப்பொன் - ஏனையோர்க்கு நியதமாகக் கொடுத்த 100 பொன்னை இரட்டித்து 200 பொன்னாக; ஒருநூறு தமது சிவநெறி ஒழுக்கமும், மற்று மொருநூறு உலகியல் நெறியில் உலகரை வழிப்படுத்தற் பொருட்டுமாம் என்க. |
மேல் அவரை - மேல் - அதன்மேல் - பின்னர்; மேலவர் - மேம்பாடுடையவராக அவ்வடியவரை என்ற குறிப்புமாம். மேம்பாடாவது முன்கூறியபடி இக பரமாகிய இருபயனும் தரக் காரணமாயிருந்தமை. |
| 3990. | இவ்வகையே திருத்தொண்டி னருமைநெறி யெந்நாளுஞ் செவ்வியவன் பினிலாற்றித் திருந்தியசிந் தையராகிப் பைவளர்வா ளரவணிந்தார் பாதமலர் நிழல்சேர்ந்து மெய்வகையவழியன்பின் மீளாத நிலைபெற்றார். 8 |
(இ-ள்) இவ்வகையே....ஆற்றி - முன்கூறிய செயலின் கருத்து வகையாலே திருத்தொண்டினது அரிய நெறியினை எந்நாளிலும் செம்மையாகிய அன்பினாலே செயலாற்றியிருந்து; திருந்திய சிந்தையராகி - திருத்தம் பெற்ற சிந்தனையுடையவராகி; பைவளர்....நிலை பெற்றார் - நச்சுப்பை வளரும் வாளரவை |