| 5. சிவன்கோயிற் றிருச்செல்வங்களைக் காத்தலில் உயிர்துறப்போர் சிவனுலகிருப்பர்; உயிர்கொடுத்தும் சிவதருமம் காத்தற்குரியதென்பது சிவாகமவிதி |
| 6. திருவாதிரைநாள் சிவனுக்குகந்த சிறப்புடைய திருநாள். அந்நாளில் சிவனுக்குச் சிறப்பாகிய பூசையும் சிவனடியவர்க்கு வழிபாடும் செய்வதும் திருவமுதளித்தலும் சிறந்த சிவபுண்ணியங்கள். |
| 7. அடியவர்கள் மேற்கொள்ளும் திருநீறு - கண்டிகை - முதலாகிய திருவேடமே பற்றி அவர்களை வணங்குதல் வேண்டும்; அவர்களது உடல்நிலை வேறுபாடுகள் பற்றிய உலகியல் ஒழுக்க முதலியனபற்றி எண்ணி அவரை இகழ்தலாகாது; அவ்வாறு இகழ்தல் சிவன் திருவேடத்தினை இகழ்ந்ததாகி நரகத்துன்பப் பயன் தரும். |
8. மானமழி காமக் குறி மலர்ந்த ஊனநிகழ் மேனியராய் நீறணிந்து வந்த அடியவரை ஏனையோர் அவரது உலகியல் உடல்நிலையின் ஒழுக்கப் பண்பு பற்றி இகழ்ந்து எண்ணி ஒதுங்கினர்; நரசிங்கமுனையர் அவரைத் திருநீற்றுகோலமே கண்டு கைகூப்பி வணங்கிப் பேணினர்; திருநீறு சார்ந்தாரை உலகர் இகழ்ந்து நரகம் புகாமல் வைத்த கருணையினாலே உலகர்க்கு வழிநடந்து காட்ட எண்ணி அவருக்கு இரட்டிப்பொன் கொடுத்துத் தொழுது விடைகொடுத்தனர்; இஃது அரசர் தம் பொருட்டாகவும் உலகர் பொருட்டாகவும் மேற்கொண்டு ஒழுகிக் காட்டிய நிலை. |
9. உடல் நிலை ஒழுக்கம் வேறு; உயிர்பற்றிய நிலை ஒழுக்கம் வேறு; இவற்றுள் உயிர்பற்றிய ஒழுக்கம் உயர்ந்தது. உடல் பற்றிய ஒழுக்கம் உலகியல் அறநூல்களுள் விதிக்கப்படுவன; உயிர்பற்றிய உயர்ந்த ஒழுக்கம் வேத சிவாகமங்களுள் விதிக்கப்படுவன; உடல்பற்றிய தாழ்த்த அறங்களையே மேல் வைத்து உயிர்பற்றிய மேல்நிலைகளை இகழ்வோர் நரகடைவர்; இவற்றைத் தாழவைத்து உயிர்பற்றிய ஒழுக்கங்களை மேனிலையில் வைத்து வழி அன்பின் உறைப்புடன் ஒழுகுவோர் சிவனது பேர் இன்பமாகிய மீளா நிலையடைகுவர்; உலகர் இவ்வுண்மைகளைச் சிந்திப்பார்களாயின் மேம்பட்டுய்வர். |
தலவிசேடம்:- இந்நாயனாரது பதி திருநாவலூர் என்பது கருதப்படும். (151) |
| நரசிங்கமுனையரைய நாயனார் புராணம் முற்றும். _ _ _ _ _ |