| 4004. | மீன்வி லைப்பெரு குணவினின் மிகுபெருஞ் செல்வந் தான்ம றுத்தலி லுணவின்றி யருங்கிளை சாம்பும் பான்மை பற்றியும் வருந்திலர்; பட்டமீ னொன்று மான்ம றிக்கரத் தவர்கழற் கெனவிட்டு மகிழ்ந்தார். 13 |
(இ-ள்) மீன்...மறுத்தலின் - மீன் விலைப்படுத்தலினால் பெருகும் உணவுப் பண்டங்களால் மிக்க பெருஞ் செல்வம் இவ்வாறு மறுக்கப்பட்டமையால்; உணவின்றி....வருந்திலர் - உணவில்லாமல் தமது அரிய கிளைஞர்கள் பசியால் வருந்துகின்ற தன்மை பற்றியும் வருந்திலர்; பட்ட....மகிழ்ந்தார் - வலையிற்படுத்ததொரு மீனையும் மான்மறியினைக் கரத்தில் ஏந்திய இறைவரது திருவடிக்கு என விட்டு மகிழ்ந்தனர். |
(வி-ரை) மீன்....செல்வம் - மீன்விற்பதனால் மிக்க உணவுப் பொருள்கள் தேடுதற்காகிய பெருஞ் செல்வம்; அருங்கிளை உணவின்றிச் சாம்பும் பான்மை பற்றியும் வருந்திலர் - என்க. |
அருங்கிளை - மனைவி மக்கள் முதலிய சுற்றத்தார்கள். சாம்புதல் - பசியினால் கண்குழிந்து மயங்குதல்; பற்றியும் - உம்மை - உயர்வு சிறப்பு. குங்கிலியக் கலயநாயனார் சரிதம் (838) பார்க்க. கிளை - மரத்தின் கிளைபோலச் சூழ்ந்த சுற்றத்தார். |
மகிழ்ந்தார் - வருந்தாமை மாத்திரையே யன்றி மகிழ்ச்சியினையும் அடைந்தார். |
பட்ட - படுத்த - பிடித்த. |
கழற்கு என - கழற்கு ஆக என்று சொல்லி; “சென்று பொற்கழல் சேர்கென” (4008) மான்மறி - மான்கன்று. 13 |
| 4005. | சால நாள்களிப் படிவரத் தாமுண வயர்த்துக் கோல மேனியுந் தளரவுந் தந்தொழில் குறையாச் சீல மேதலை நின்றவர் தந்திறந் தெரிந்தே ஆல முண்டவர் தொண்டரன் பெனுமமு துண்பார், 14 |
| 4006. | ஆன நாளொன்றி லவ்வொரு மீனுமங் கொழித்துத் தூநி றப்பசுங் கனகநற் சுடர்நவ மணியால் மீனு றுப்புற வமைத்துல கடங்கலும் விலையாம் பான்மை யற்புதப் படியதொன் றிடுவலைப் படுத்தார். 15 |
4005. (இ-ள்) சால..வர - அனேக நாட்களில் இப்படி வர; தாம்...தளரவும் - தாம் உணவு மறந்து வாடி தமது அழகிய திருமேனியும் தளர்ச்சி யடையவும்; தந்தொழில் குறைய.....தெரிந்தே - தமது திருத்தொண்டினின்றும் குறைவுபடாத அவ்வொழுக்கத்திலே சலியாது ஒழுகியவரது திறத்தினைத் தெரிந்தே; ஆலம்....உண்பார் - விடத்தினை உண்ட இறைவர் இத்திருத் தொண்டரது அன்பு என்கின்ற திருவமுதத்தினை உண்பாராகி. 14 |
4006. (இ-ள்) ஆன....ஒழித்து - முன்கூறியவாறு ஆகிய நாள் ஒன்றிலே அந்த ஒரு மீனும் அங்கு அகப்படாதொழியச் செய்து; தூய...அமைத்து - தூய நிறமுடைய பசும் பொன்னாலும் ஒளியுடைய நவமணிகளாலும் மீன் உறுப்புக்கள் பொருந்தும்படி அமைத்து; உலகடங்கலும்.....ஒன்று - உலகங்களெல்லாம் விலை |