பக்கம் எண் :

பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்286

யாக மதிக்கப்படும் தன்மையில் அற்புதத்தன்மை வாய்த்ததொரு மீன்;
இடுவலைப்படுத்தார் - வீசிய வலையினிற் படுப்பித்தனர்.                   15
 
     இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
     4005. (வி-ரை) உணவு அயர்த்து - அயர்த்தல் - மறத்தல்; அயர்ந்து -
இழந்து என்க.
 
     தளரவும் - உம்மை சிறப்பு; கூசாது ஆலமுண்டவர்.....அமுதுண்பார் -
ஆலமுண்டவராதலின் இத்தொண்டரது அன்புமயமாகிய திருத்தொண்டின் வரும்
அன்பமுதத்தினையும் உண்பாராய்; உண்டார் - உன்பார் படுத்தனர் என்று மேல் வரும்
பாட்டுடன் முடிக்க, “மெய்த்தன்மை யன்புநுகர்ந் தருளுதற்கு” (3684) என்ற
சிறுத்தொண்ட நாயனார் புராணமும் காண்க. இங்கு நிவேதித்த மீனுண்டமையும்,
அங்குப் பிள்ளைக்கறி வேண்டியமையும், அன்பு நுகர்தற்கே யன்றிப் பிறிதில்லை
என்பது.
 
     மேனியும் தளரவும் - தொழில் குறையாச் சீலம் - உடல் வலிமையுள்ள
அளவே தொழில் இயற்றுதல் உலகரியல்பு. ஆயின் இங்கு இந்நாயனார் மேனியும்
தளரவும் தமது தொழில் குறையாம லியற்றும் ஒழுக்கத்தின் நின்றது அன்பின் உறைப்பு;
அரிவாட்டாய நாயனார் இறைவரைச் செந்நெல் ஊட்டிய ஒழுக்கத்தினைத்தாம் பசியால்
வருந்திய காலத்தும் புரிந்து வந்த அன்பின் செயலும், புகழ்த்துனை நாயனார்
உணவின்றி வருந்திக் குடர்ந்தாங்க மாட்டா நிலையிலும் இறைவரைப் பரிந்தாட்டிய
அன்பின் செயலும் முதலாயினபலவும் ஈண்டு, நினைவு கூர்தற்பாலன.

 

     சீலமே - ஏகாரம் தேற்றம்; தலைநிற்றல் - சிறக்கச் செய்தல் - இப்படிவா -
வருதலால்; மேனி - மேனியும் - உம்மை செல்வம் முதலிய ஏனைய எல்லாவற்றுடன்
என்று இறந்தது தழுவிய எச்ச உம்மை; தளரவும் - உம்மை உயர்வு சிறப்பு.
 
     ஆலமுண்டவர் - அமுது உண்பார் - சாதலை விளைக்கும் கைத்த
ஆலத்தையும் சாவாமையினை விளைக்கும் இனிய அமுதத்தையும் ஒன்று போலவே
உண்பவர் என்று வேண்டுதல் வேண்டாமையிலாத இறைமைக் குணங் குறித்தவாறு;
கைப்புடைய ஆலத்தை உண்பவர் அன்புடன் ஊட்டும் அமுதத்தினை விருப்பாராவார்
என்றதொரு நயமும் காண்க. இங்கு உண்ணக் கிடைப்பது மீனாகிய அநுசிதப்
பண்டமாயினும், கண்ணப்பர் அளித்த இறைச்சியும், சிறுத்தொண்டர் பாற்கேட்க அவர்
அளித்தபிள்ளைக் கறியும் போல இனியனவாய்க் கொள்ளப் பெற்றது அவ்வவரது
அன்பேயன்றி அப்பண்டங்களின் தன்மையன்று என்பதாம். அது குறிக்க அன்பெனு
மமுது உண்பார்
என்றார். ஆலமுண்டமையான் அமுதுண்ண ஏக்குற்றார் என்றது
கவிநயம்.
 
     4006. (வி-ரை) நாள் ஒன்றில் - சிறப்பும் பற்றி அந்நாள் ஒன்று எனப்பட்டது.
இணையிலாத ஒன்று.
 
     அவ்வொரு மீனும் - முன் பல நாட்கள் அடுத்துப் படுத்த அந்த ஒரு மீனும்,
என்று அகரம் முன்னறி சுட்டு; மீனும் - உம்மை முற்றும்மை; ஒழித்து - பெறாதபடி
ஒழியச் செய்து.
 
     உண்டார் - (4005) ஒழித்து - அமைத்துப் படுத்தார் - என்று முடிக்க.
 
     அவ்வொரு மீனும் - உலகியலிற் காணும் ஏனை மீன்கள் போன்ற தன்மைய
தன்று அவ்வொருமீன்; அன்று படுப்பது உலகிற் பெறப்படாத மேம்பாடுடையது என்பது
குறிப்பு.
 
     தூ....அமைத்து - பொன்னாலும் மணியாலும் மீன் உறுப்புக்கள் எல்லாம்
உறும்படி உளவாக்கி; இதற்கென்று சிருட்டித்து.