| அன்ப ருடனே திருவேடந் தாங்கி யணைந்தா ரொருவர்தாம் பின்பு வந்து தோன்றவவர் பாதம் விளக்கும் பெருந்தகையார், 6 |
4018. | கையா லவர்தம் மடிபிடிக்கக் காதன் மனையார் “முன்பேவல் செய்யா தகன்ற தமர்போலு” மென்று தேரும் பொழுதுமலர் மொய்யார் வாசக் கரகநீர் வார்க்க முட்ட, முதற்றொண்டர், மையார் கூந்தன் மனையாரைப் பார்த்து மனத்துட் கருதுவார், 7 |
4019. | வெறித்த கொன்றை முடியார்தம் மடியா ரிவர்முன் மேவுநிலை குறித்து வெள்கி நீர்வாரா தொழிந்தா” ளென்று மனங்கொண்டு மறித்து நோக்கார் வடிவாளை வாங்கிக் கரகம் வாங்கிக்கை தறித்துக் கரக நீரெடுத்துத் தாமே யவர்தாள் விளக்கினார். 8 |
4014. (இ-ள்) ஆன....தாம் - அத்தகையாராயின அன்பர் தாம்; என்றும் அரனார் அன்பர்க்கு - எந்நாளிலும் சிவபெருமானுடைய அன்பர்களுக்கு; அமுது செய...செய்வித்தே - அமுது செய்வதற்குஉரிய மேன்மையாகிய தன்மை விளங்கும் திருவமுதுடனே விரும்பும் கறிவகைகளும் நெய்யும் தயிரும் இனிய கட்டியாகக் காய்ச்சிய பாலும் தேனிலுமினிய கனிகளும் கரும்புக்கட்டியும் முதலாகிய இவைகளைப் படைத்துத் திருந்தியவாறு அவர்களை அமுது செய்வித்தே; ஏனை...அளிப்பார் - மற்றும் வேண்டுவனவாகிய பிற நிதியங்களெல்லாவற்றையும் இன்பம் பொருந்த அளிப்பாராய், 3 |
4015. (இ-ள்) அன்ன...நாளில் - முன்கூறிய அவ்வாறாகிய வகையினாலே திருத்தொண்டு செய்து வரும் நாள்களில்; அங்கொருநாள் - அவ்விடத்து ஒரு நாளிலே; மன்னும்...தொடங்குவிப்பார் - நிலைபெற்ற தமது திருமனையில் அமுது செய்ய வந்த திருத்தொண்டர்களை யெல்லாம் தொன்மை முறையிலே அமுது செய்யத் தொடங்குவிப்பாராகி; அவர் தம்மை....முயல்கின்றார் - அவர்களை முன்னர் அழைத்து அவர்களுடைய திருவடிகளை யெல்லாம் விளக்க (இந்நாயனார்) முயல்கின்றாராக. 4 |
4016. (இ-ள்) திருந்தும்...விளக்கி - திருந்தும் மனைவியார் அத்திருமனை முழுதும் விளக்கம் பெற விளக்கித் திருவமுதும் பொருந்தும் சுவைகளில் கறியமுதும் தூய தண்ணீரும் ஆகிய இவற்றுடனே உண்ணும் இயல்பில் உள்ளனவாகிய மற்றைப் பொருள்களையும் செம்மை பெற அமைத்து; கரக நீரளிக்க - கரகத்திலே நீர்வார்க்க; விரும்பு......பொழுதின்கண் - விரும்பும் கணவனார் அந்தப் பெருந்தவர்களுடைய திருவடிகளை யெல்லாம் விளக்கி வரும்போது. 5 |
4017. (இ-ள்) முன்பு...போய் - முன்னாள்களில் தமக்குப் பணிவிடை செய்யும் சுற்றமாக இருந்து ஏவற்பணியினை முனிந்து போய்; என்பும்....ஆகி - எலும்பினையும் பாம்பினையும் அணிந்த பெருமானுடைய அடியாராகி; அங்கெய்தும் அன்பருடனே - அங்கு வந்த அடியார்களுடனே கூடி; அணைந்தார்.....தோன்ற - அணைந்தாராகிய ஒருவர் பின்பு வந்து தோன்ற; அவர்.....பெருந்தகையார் - அவர் பாதங்களை விளக்கும் பெருந்தகையாராகிய கலிக்கம்பர் 6 |
4018. (இ-ள்) கையால்.....பிடிக்க - கையினால் அவரது அடிகளைப் பிடிக்க; காதல்...பொழுது - முன்பு நமது ஏவலைச் செய்யாது விட்டுச் சென்ற சுற்றம் இவர் |