உ சிவமயம் திருச்சிற்றம்பலம் |
46. சத்தி நாயனார் புராணம் _ _ _ _ _ |
தொகை |
| “(கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்) கழற்சத்தி வரிஞ்சையர்கோ னடியார்க்கு மடியேன்” | |
- திருத்தொண்டத் தொகை - (7) |
வகை |
| “கிரிவில் லவர்தம் மடியரைத் தம்முன்பு கீழ்மைசொன்ன திருவில் லவரையந் நாவரி வோன்றிருந் தாரைவெல்லும் வரிவில் லவன், வயற் செங்கழு நீரின் மருவுதென்றல் தெருவில் விரைகம ழுந்தென் வரிஞ்சைத் திகழ்சத்தியே” | |
- திருத்தொண்டத் திருவந்தாதி (55) |
விரி |
4039. | களமர் கட்ட கமலம் பொழிந்ததேன் குளநி றைப்பது கோலொன்றி லெண்டிசை யளவு மாணைச் சயத்தம்ப நாட்டிய வளவர் காவிரி நாட்டு வரிஞ்சையூர். 1 |
புராணம்: இனி, ஆசிரியர் நிறுத்த முறையானே, எட்டாவது பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கத்துள், ஏழாவது சத்தி நாயனாரது புராணங் கூறத் தொடங்குகின்றார். சத்தி நாயனாரது சரித வரலாறும் பண்பும் கூறும்பகுதி. |
தொகை: வெற்றியுடைய சத்திநாயனார் என்னும் பெயரையுடையவரும் வரிஞ்சையூர்த் தலைவருமாகிய நாயனாரது அடியவர்க்கும் நான் அடிமையாவேன். |
தொகை நூலுள் பொய்யடிமை யில்லாத என்று தொடங்கும் திருப்பாட்டில் மூன்றாவது அடியில் மூன்று அடியார்களை ஒருங்கு சேர்த்துப் போற்றியுள்ளமை சிறப்பு; அவர்களுள் மூன்றாவது போற்றப்பட்டவர் சத்தியார். வரிஞ்சையூர் நாயனாரது ஊர்; கழல் - வெற்றிக்குறி, இதனைத் “திருந்தாரை வெல்லும் வரிவில்லவன்” என்று வகைநூல் வகுத்தது; ஊரும் பேரும் பண்பும் தொகைநூல் தொகுத்தது. |
வகை; கிரி வில்லவரை...அரிவோன் - மலையை வில்லாக உடைய சிவபெருமானது அடியவர்களைத் தம் முன்னர் இகழ்ந்து பேசிய திருவிலிகளாகியவர்களை அவ்வாறு பேசும் நாவினை அரிந்திடுவோரும்; திருந்தாரை.....வில்லவன் - பகை வெல்லும் வரிந்து கட்டிய வில்லையுடையவரும்; வயல்.....சத்தியே - வயல்களில் |