| அன்பரை இகழ்ந்தியம்பும் உரைவைத்த நாவை - சிவனைப் பழித்தல் கொடிய சிவாபராதம்; அவன் அன்பரைப் பழித்தல் அதனினும் கொடியது என்பதுண்மை. அதனால் இந்நாயனார் அடியாரைப் பழித்துக் கூறும் நாவினை அரிதலைத் தொண்டாகக் கொண்டனர். அன்பரை இகழ்ந்தது அரனை இகழ்ந்ததுமாம். அங்கணரையும் அன்பரையும் என்றலுமாம். |
| உரை வைத்த - உரையினை வைத்தற்கு (சொல்லுதற்கு) இடமாக வைத்த; நாவே சொல் இயம்புதற்குத் துணைசெய்யும் கருவியாம். வைத்த - வாழ்த்தற்குத் தந்த நாவில் வேறு பொருள் வைத்த நாஅரி - தவறுபட்ட அங்கத்தையே தண்டித்தல் மரபு. கலிக்கம்பர் இடங்கழியார், செருத்துணையார் சரிதங்கள் பார்க்க. |
வலித்து - வலிசெய்து வென்று; இழுத்து என்றலுமாம்; அரி சத்தியார் - அரியும் சத்தி வாய்ந்தவர்; ஒருவனது நாவை அரிவதென்னின் அவனை வலிசெய்து கீழ்ப்படுத்தவல்ல திறமை யுடையோர்க்கே ஆவது என்பார் வலித்து என்றும், சத்தியார் என்றும் கூறினார். சத்தி இங்கு வன்மை - திறல் என்ற பொருளில் வந்தது. “திருந்தாரை வெல்லும் வரிவில்லவன்” என்று இதனைக் காரணங்காட்டி வகுத்தது வகைநூல். |
சத்தியார் - (ஆதலின்) சத்தியார் எனும் - நாமம் தரித்துள்ளார் என ஈண்டும் சத்தியினாகே என்று காரணக் குறிப்புப்படக் கூறியது காண்க. தரித்துளார் - தரித்தற் கருமை குறித்தது. ஆண்மை (4042) என்பதும் காண்க. |
சத்தியால் - நாமமுந் தாங்கினார் - என்பனவும் பாடங்கள். 3 |
| 4042. | தீங்கு சொற்ற திருவிலர் நாவினை வாங்க வாங்குதண் டாயத்தி னால்வலித் தாங்க யிற்கத்தி யாலரிந் தன்புடன் ஓங்கு சீர்த்திருத் தொண்டி னுயர்ந்தனர். 4 |
(இ-ள்) தீங்கு....நாவினை - சிவனடியாரைத் தீங்கு சொல்லி இகழ்ந்த திருவில்லாதாந்து நாவினை; வாங்க...வலித்து - சேதித்தலுக்கு வளைந்த தண்டாயத்தினால் இழுத்து; ஆங்கு........அரிந்து - அவ்விடத்திலேயே கூரிய கத்தியினால் அரிந்து; அன்புடன்.....உயர்ந்தனர் - அன்புடனே ஓங்கும் சிறப்புடைய திருத்தொண்டில் உயர்வு பெற்று விளங்கினர். |
(வி-ரை) தீங்கு - சிவனடியாரை இகழ்ந்த மொழி; பழிமொழி. |
திருவிலர் - சிவன் புகழினையும் அடியார் புகழினையும் உளங்கொளாதவர்கள் திருவிலார் என்பது; திரு - உய்யும் வழியாகிய சைவமெய்ச் செல்வம்; “உருவிலான் பெருமையை யுளங்கொ ளாதவத், திருவிலார்” (பிள் - பைஞ்ஞீலி - காந்தாரபஞ் - 1). திருவிலர் - பாதகர்களுடைய; |
வாங்க - சேதிக்க; பிடுங்க; வாங்கு - வளைவுடைய; தண்டாயம் - பற்றியிழுக்கும் குறடு போன்றதொரு கருவி; வலித்து - இழுத்து; வலித்தல் - இழுத்தல்; வலிசெய்து என்றலுமாம். அயில் - கூர்மையுடைய. |
அன்புடன் ஓங்குசீர் திருத்தொண்டின் - நாவை அரியும் செயல் அன்பாமா றென்னை? எனின்; தீங்கு சொன்ன அத்திருவிலார், இம்மையில் இவ்வாறு உடன் தண்டிக்கப்படுதலால் அம்மையில் எரிவாய் நரகம் புக்கழுந்தாமற் காக்க அவர்பால் வைத்த அன்பு; தண்டிக்கப்பட்டார்பால் இகலின்றி இரக்கத்துடனே |