பக்கம் எண் :

பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்322


சிவமயம்
திருச்சிற்றம்பலம்
 

47. ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்
_ _ _ _ _
 

தொகை
 

“ஐயடிகள் காடவர்கோ னடியார்க்கு மடியேன்”

- திருத்தொண்டத் தொகை - (7)
 

வகை
 

“சத்தித் தடக்கைக் குமரனற் றாதைதன் றானமெல்லாம்
முத்திப் பதமொரொர் வெண்பா மொழிந்து “முடியரசா
மத்திற்கு மும்மைநன் றாலரற் காயைய மேற்ற”
லென்னும்
பத்திக் கடலை யடிகளா கின்றநம் பல்லவனே.”

- திருத்தொண்டர் திருவந்தாதி - (56)
 

விரி
 

4046. வையநிகழ் பல்லவர்தங் குலமரபின் வழித்தோன்றி
வெய்யகலி யும்பகையு மிகையொழியும் வகையடக்கிச்
செய்யசடை யவர்சைவத் திருநெறியா லரசளிப்பார்
ஐயடிக ணீதியா லடிப்படுத்துஞ் செங்கோலார்;                         1
 
4047. திருமலியும் புகழ்விளங்கச் சேணிலத்தி லெவ்வுயிரும்
பெருமையுட னினிதமரப் பிறபுலங்க ளடிப்படுத்துத்
தருமநெறி தழைத்தோங்கத் தாரணிமேற் சைவமுடன்
அருமறையின் றுறைவிளங்க வரசளிக்கு மந்நாளில்,                     2
 
4048. மன்னவரும் பணிசெய்ய வடநூறென் றமிழ்முதலாம்
பன்னுகலை பணிசெய்யப் பாரளிப்பா “ரரசாட்சி
இன்ன” லென விகழ்ந்ததனை யெழிற்குமரன் மேலிழிச்சி
நன்மைநெறித் திருத்தொண்டு நயந்தளிப்பா ராயினார்.                  3
 
     புராணம் : இனி, நிறுத்த முறையானே, ஆசிரியர், எட்டாவது, பொய்யடிமை
யில்லாதபுலவர் சருக்கத்தில் எட்டாவது, ஐயடிகள், காடவர்கோன் நாயனாரது புராணங்
கூறுகின்றார்; ஐயடிகள் காடவர்கோன் நாயனாரது சரித வரலாறும் பண்புங் கூறும்பகுதி.