| 4047. (இ-ள்) திருமலியும் புகழ் விளங்க - செல்வங்கள் மிகும் புகழ் விளங்கவும்; சேண்...... அமர - விரிந்த இவ்வுலகத்தில் எல்லா வுயிர்களும் பெருமையோடு இனிதாக வாழவும்; தருமநெறி தழைத்தோங்க - நீதிமுறை தழைத்து விளங்கவும்; தாரணி.....துறைவிளங்க - உலகில்சைவநெறியுடனே அரிய வேதநெறியும் விளங்கவும்; பிறபுலங்கள் அடிப்படுத்து - பகைப் புலங்களை ஒடுக்கித் தம்கீழ்த் தங்கும்படி அடங்கச் செய்து; அரசளிக்கும் அந்நாளில் - அரசு செய்கின்ற அந்நாளிலே; 2 |
| 4048. (இ-ள்) மன்னவரும் பணிசெய்ய -அரசர்களும் தமது ஏவல் வழியே பணிசெய்து ஒழுக; வடநூல்.....பணிசெய்ய - வடமொழியும் தென்றமிழும் முதலாக எடுத்துச் சொல்லப்படும் கலைகள் தமது வயப்பட்டு நிற்கவும்; பாரளிப்பார் - உலகங்காவல் புரிவாராகிய அவர்; அரசாட்சி........இழிச்சி - உலகம் புரக்கும் அரசாட்சி துன்பம் செய்வது என்று இகழ்ந்து நீத்து அதனை அழகிய தமது மகன் மேலதாக வைத்துப் பட்டம் சூட்டி; நன்மைநெறி...ஆயினார் - நல்ல சிவநெறியிலே நின்று திருத்தொண்டினை விரும்பிச் செய்வாராயினார். 3 |
| 4046. (வி-ரை) வைய நிகழ் பல்லவர் - ஆசிரியர் தம் காலத்தில் ஆட்சிபுரியும் அரச மரபு என்பார் நிகழ் என்றார்; பல்லவர் - சோழர் வழி மரபுகளுள் வந்த அரச குலம்; இவர்களுக்குரியது இடபக்கொடி என்பர். ஆளுடைய நம்பிகள் காலத்தில் இம்மரபினர் ஆட்சி புரிந்தமை “உரிமையாற் பல்லவர்க்குத் திறைகொடா மன்னவரை மறுக்கஞ் செய்யும், பெருமையார்” (நம்பி - கோயில்) என்ற திருவாக்கினால் விளங்கும். அமணர்வசப்பட்டு மதிமயங்கி ஆளுடைய அரசுகளை மிறை செய்து, பின், அவரது பெருமை கண்டு சிவன் அடிமைப்பட்ட மகேந்திரவருமரும் இம்மரபினரே; யாவர்; நீண்ட தொடர்பும் அரசர் பெருமையும் குறிக்க வைய நிகழ் என்றார். |
கலி - வறுமை; பகை - உட்பகை புறப்பகைகள்; மிகை - இவற்றால் வரும் துன்பங்கள்; குற்றம்; நெறி - நீதி; வெய்ய - கொடிய; “கொடிது கொடிது வறுமை கொடிது” (ஒளவை)“ நல்குர வென்னுந் தொல்விடம் ” (திருவா). |
சைவத் திருநெறியால் அரசளிப்பார் - உலகினைச் சைவநெறியின் கண்ணே நின்று நிலைபெற ஆள்பவராய். |
செங்கோலார் - அளிப்பார் - (4046) - அளிக்கும்நாளில் (4047) - இகழ்ந்து - இழிச்சி - அளிப்பாராயினார் (4048) என்று இம்மூன்று பாட்டுக்களையும் தொடர்ந்து முடிபு படுத்திக் கொள்க. |
4047. (வி-ரை) திருமலியும் புகழ் - திரு - எண்வகை உலகநிலைச் செல்வங்கள்; புகழ் - ஈகையால் வருவது. |
| சேண்நிலம் - சேண் - தூரத்தே அகன்ற; பரவிய, தூரதேயம் என்றலுமாம். |
ஐயடிகள் - இஃது இந்நாயனாரது பெயர். பல்லவர்கள் பெரும்பாலும் வடமொழிப் பெயர்களையே இட்டுக்கொள்ளுதல்மரபு என்பர்; அப்படியாயின், இவரது இயற்பெயர் இன்னதென்று தெரியவில்லை, “பத்திக்கடல் ஐயடிகள்” என்று வகைநூலில் துதிக்கப்படுவதனால் இவர் இளவயதிலிருந்து இறைபத்தி மிகுந்து ஒழுகிய நிலையினால் ஐயடிகள் (ஐ-தெய்வம்) என்று வழங்கப்பட்டார் போலும்; காடவர் - (பல்லவர்) என்பது இவரது அரச மரபு. இவர் அரசு புரிந்த தலைநகரம் காஞ்சிபுரம். “காஞ்சிக் காடவர்” (4052) என்று ஆசிரியர் அறிவித்தருள்கின்றார். |