| க்ஷேத்திரத் திருவெண்பா |
| தில்லைத் திருச்சிற்றம்பலம் |
| திருச்சிற்றம்பலம் |
| | ஓடுகின்ற நீர்மை யொழிதலுமே யுற்றாருங் கோடுகின்றார் மூப்புங் குறுகிற்று - நாடுகின்ற நல்லச்சிற் றம்பலமே நண்ணாமு னன்னெஞ்சே தில்லைச்சிற் றம்பலமே சேர். 23 | |
* * * * * 1 |
திருமயானம் |
| | உய்யு மருந்திதனை யுண்மினென வுற்றாருங் கையிற் பிடித்தெதிரே காட்டியக்காற் - பைய வெழுந்திருமி யான்வேண்டே னென்னாமு னெஞ்சே செழுந்திரும யானமே சேர். 24 | |
| திருச்சிற்றம்பலம் |
| 4051. | அவ்வகையா லருள்பெற்றங் கமர்ந்துசில நாள்வைகி இவ்வுலகிற் றம்பெருமான் கோயில்களெல் லாமெய்திச் செவ்வியவன் பொடுபணிந்து திருப்பணியேற் றனசெய்தே யெவ்வுலகும் புகழ்ந்தேத்து மின்றமிழ்வெண் பாமொழிந்தார். 6 |
(இ-ள்) அவ்வகையால்.....வைகி - அந்த வகையினாலே திருவருளினைப் பெற்று அப்பதியில் அமர்ந்து சில நாட்கள் தங்கியருளி; இவ்வுலகில்.......எய்தி - இவ்வுலகத்திலே தம்பெருமானார் வீற்றிருக்கும் கோயில்கள் எல்லாவற்றிலும் சென்று சேர்ந்து; செவ்விய....செய்தே - செம்மையாகிய அன்பினாலே வணங்கி ஏற்றனவாகிய திருப்பணிகளையும் செய்தே; எவ்வுலகும்.....மொழிந்தார் - எல்லாவுலகங்களும் புகழ்ந்து ஏத்துகின்ற இனிய தமிழ் வெண்பாக்களைப் பாடித் துதித்தனர். |
(வி-ரை) அவ்வகையால் - முன்பாட்டிற் கூறிய அந்த வகையினாலே; “மென்மலர்” புனைதலாலே. இவ்வுலகில் - “உலகின்கண்” (4049). |
அங்கு - திருத்தில்லையில். அமர்ந்து - விரும்பியிருந்து; அமர்தல் - விரும்புதல். |
ஏற்றன - திருப்பணி - செய்தே - என்க. “கடன் ஏற்ற பணி செய்தே” - (4049). அரசர் நிலைக்கும் அன்பின் பெருக்குக்கும் ஏற்றவாறு. |
எவ்வுலகும் புகழ்ந்தேத்தும் - தமிழ் வெண்பா - எவ்வுலகத்தோர்களும் இத்துதிகளைச் சொல்லி இவற்றால் இறைவனை ஏத்தும் என்றும், இவ்வெண்பாக்களையே புகழ்ந்து என்றும் உரைக்க நின்றது; வெண்பாக்களால் ஏத்தும் - வெண்பாக்களை ஏத்தும் என இருவழியும் உரைக்க. தமிழ் - இன் - வெண்பா என்க. |
மென்மலர் - தொடர்ச்சியாகிய மாலையா யின்றிப் பதிதோறும் ஒவ்வோர் தனி வெண்பாக்களாம் என்பார் மலர் என்றார். 6 |
| 4052. | இந்நெறியா லரனடியா ரின்பமுற விசைந்தபணி பன்னெடுநா ளாற்றியபின் பரமர்திரு வடிநிழற்கீழ் மன்னுசிவ லோகத்து வழியன்பர் மருங்கணைந்தார் கன்னிமதில் சூழ்காஞ்சிக் காடவரை யடிகளார். 7 |
(இ-ள்) இந்நெறியால்....ஆற்றியபின் - இந்த நெறியினாலே சிவனடியார்கள் இன்பமடையத் தமக்கு இசைந்த பணிகளைப் பல நீண்ட காலமாகச் செய்திருந்த |