| உ சிவமயம் திருச்சிற்றம்பலம் |
| சுந்தரமூர்த்தி நாயனார் துதி _ _ _ _ _ |
| தொகை |
| | | “ஆரூர னாரூரி லம்மானுக்காளே” | |
| - திருத்தொண்டத் தொகை - (7) |
| வகை |
| | “பல்லவை செங்கதி ரோனைப் பறித்தவன் பாதம்புகழ் சொல்லவன், றென்புக லூரரன் பாற்றுய்ய செம்பொன்கொள்ள வல்லவ, னாட்டியத் தான்குடி மாணிக்க வண்ணனுக்கு நல்லவன், றன்பதி நாவலூ ராகின்ற நன்னகரே” | |
| - திருத்தொண்டர் திருவந்தாதி - (57) |
| விரி |
| 4054. | உளத்திலொரு துளக்கமிலோ முலகுய்ய விருண்டதிருக் களத்துமுது குன்றர்தரு கனகமாற் றினிலிட்டு வளத்தின்மலிந் தேழுலகம் வணங்குபெருந் திருவாரூர்க் குளத்திலெடுத் தார்வினையின் குழிவாய்நின் றெமையெடுத்தார். 9 |
துதி : திருத்தொண்டத் தொகைப் பதிகப் பாட்டுக்களில் நான்காமடியின் பிற்பகுதியில் வரும் பொருள், ஆளுடைய நம்பிகள் தம்மைக் கூறும் பகுதியாதலின், அதனை நம்பியாண்டார் நம்பிகளும் ஆசிரியரும் அவரது துதியாக வைத்து வகுத்தும் விரித்தும் உரைக்குமாறு, நம்பிகளது சரிதத்தில் ஒவ்வோர் பகுதியை வைத்துப் போற்றியது. |
தொகை: முன்கூறிய அடியார்க்கு ஆளாவதோடு திருவாரூர் அம்மானுக்கும் ஆரூரன் ஆகிய நான் அடிமையாவேன்; முன்கூறிய அடியேன் யாரென்னில் ஆரூரில் அம்மானுக்காளாகவுள்ள ஆரூரன் என்றலுமாம். |
வகை: பல்லவை....சொல்லவன் - சூரியனைப் பற்களை பறித்த சிவபெருமானது பாதங்களைப் புகழ்கின்ற சொற்களையுடையவரும்; தென்புகலூர் - வல்லவன் - அழகிய, திருப்புகலூர் இறைவர்பால் (செங்கல்லையே) தூய செம்பொன்னாகப் பெற வல்லவரும்; நாட்டியத்தான்குடி......நல்லவன் - திருநாட்டியத்தான் குடியில் விளங்க எழுந்தருளிய இறைவராகிய மாணிக்கவண்ண நாதருக்கு அன்புடையவரும் ஆகிய நம்பியாரூரருடைய; பதி.......நன்னகரே - ஊர் திருநாவலூர் என்கின்ற நல்ல நகரேயாம். |
பல்லவை - அவை பகுதிப் பொருள் விகுதி; செங்கதிரோன் - சூரியன்; சூரியனைப் பற்களைப் பறித்தது தக்கயாக சங்காரத்தின் நிகழ்ச்சி; “சூரியனார் தொண்டை வாயினிற் பற்களை வாரி நெரி்த்தவா றுந்தீபற” (திருவா) துய்ய - தூய; |