கோடாமுன் - உடல் வளைந்துபடா முன்னே; போய்.....புலம்பாது - காடு போய்க் கூடும்நிலை வருதலால் புலம்பாமல்; நெஞ்சமே - நெஞ்சே; சாய்க்காடு.....சார்ந்து - நீ திருச்சாய்க்காட்டினைச் சார்ந்து கைதொழுவாயாக. |
(வி-ரை) அஞ்சனம் - மை; சேர்தல் - தீட்டுதல் |
அருவருத்தல் - வெறுத்தல்; பதம் - பருவம், நிலை; உடலம் கோடுதல் - மூப்பினால் உடல் வளைதல். |
காடுபோய்க் கூட - காடுபோய்க் கூடும் நிலை வருதலால்; காடுபோய்க் கூடுதல் - சாவு வந்து ஈமஞ் சேர்தல்; காடு - சுடுகாடு; கூட - கூடுதலால்; போய் - போகும்நிலை வந்து; புலம்புதல் - மரண வேதனையால் வருந்துதல்; புகார் - காவிரிப்பூம்பட்டினம்; புகார்ச் சாய்க்காடு - புகாரின்கண் உள்ள திருச்சாய்க்காடு என்னும் பதி. சோழநாட்டில் காவிரி வடகரை 9-வது பதி. 15 |
16. திருப்பாச்சிலாச்சிராமம் |
| | இட்ட குடிநீ ரிருநாழி யோருழக்காய்ச் சட்டவொரு முட்டைநெய் தான்கலத் - தட்ட வருவாச்சா ரென்றங் கழாமுன்னம் பாச்சிற் றிருவாச்சி ராமமே சேர். 16 | |
(இ-ள்) இட்ட.....உழக்கா - கூட்டி அடுப்பில் இட்ட குடிநீரானது இருநாழி ஒரு உழக்காகச் சுருங்க; சட்ட....அட்ட - செப்பமாக ஒரு முட்டை அளவு நெய் கலந்து ஊட்டியிடவும்; அருவாச்சார்.....முன்னம் - உயிர் நீங்கிற்றே என்று அங்குப் பிறர் அழாத முன்னம்; பாச்சில்....சேர் - திருப்பாய்ச்சிலாச் சிராமத்தினையே சேர்வாயாக. |
(வி-ரை) இட்ட - வேண்டும் மருந்துப் பண்டங்கள் கூட்டி அடுப்பில் மாட்டியிட்ட; குடிநீர் - கியாழம்; இருநாழி....உழக்கா - நீர் சுருங்கும் அளவு; இருநாழி நீர்விட்டு அஃது ஒரு உழக்காகும்படி சுருக்கி; உழக்கா - உழக்காக; ஆ - ஆக என்பது ஈறுகெட்டது; சட்ட - செப்பமாக. "சட்ட - என்பது செப்பப் பொருட்டாயதோர் அகரவீற் றிடைச்சொல். அது சட்டம் என இழிவழக்கில் மரீஇற்று" என்று "சட்ட இனியுளது சத்தேகாண்" (போதம். 9-2) என்றவிடத்து மாபாடியத்தில் உரைத்தது காண்க. |
முட்டை - சிறிய கரண்டி; அட்ட - வார்க்க, ஊட்டியிட; அருஆச்சார் - உயிர் பிரிந்தார்; இது மரூஉ வழக்கு; பாச்சிற் றிருவாச்சிராமம் - திருப்பாச்சிலாச்சிராமம் என்ற சோழநாட்டுப் பதி. காவிரி வடகரை - 62-வது பதி. 16 |
17. திருச்சிராப்பள்ளி |
| | கழிந்ததுநன் னெற்றுக் கட்டுவிட்டு நாறி யொழிந்த துடனிரா வண்ண - மழிந்த திராமலையா கொண்டுபோ வென்னாமுன் னெஞ்சே சிராமலையான் பாதமே சேர். 17 | |
(இ-ள்) கழிந்தது....கட்டுவிட்டு - நல்ல நெற்றுப்போல வறண்ட உடலம் கட்டுவிட்டுக் கழிந்தது; நாறி....இராவண்ணம் - துர்நாற்ற மெடுத்து இருக்க முடி |