யாதபடி முடிந்தது; அழிந்தது....என்னாமுன் - அவ்வாறு அழிந்த அதனை இங்கு வைத்திருக்காமல் ஐயா எடுத்துக்கொண்டு போ என்று சொல்லாத முன்னே; நெஞ்சே....சேர் - நெஞ்சே! திருச்சிராமலை யிறைவரது பாதமே சேர்வாயாக. |
(வி-ரை) நல்நெற்று - நல்ல நெற்றுப்போல வறண்ட உடல்; கட்டுவிட்டு - உருக்குலைந்து; நெற்றுக்கட்டு - நெற்றாயினபின் காய் முதலியவை தாவரத்தினின்றும் வீழ்தல்போல வீழ்ந்து என்றலுமாம். நாறி - அழுகுதலாய்த் துன்னாற்றமிட்டு; இராவண்ணம் - இனி வைத்திருக்க முடியாதபடி; சிராமலை - திருச்சிராப்பள்ளி மலை - என்னும் சோழ நாட்டுப்பதி. காவிரித் தென்கரை 6-வது பதி. 17 |
18. திருமழபாடி |
| | இழவாடிச் சுற்றத்தா ரெல்லாருங் கூடி விழவாடி யாவிவிடா முன்னம் - மழபாடி யாண்டானை யாரமுதை யன்றயன்மால் காணாமை நீண்டானை நெஞ்சே நினை. 18 | |
(இ-ள்) இழவாடி....முன்னம் - உயிரினை இழக்கும்நிலை கருதிச் சுற்றத்தார்கள் எல்லாரும் கூடி விழ, வாட்டமுற்று உயிர் உடலினை விடும் முன்னே; மழபாடி....நீண்டானை - திருமழபாடியில் எழுந்தருளிய ஆண்டவரை, நிறைந்த அமுதம் போன்றவரை, முன்காலத் தொருநாள் அயனும் மாலும் காணாதபடி மேலும் கீழும் நீண்டவரை; நெஞ்சே நினை - நெஞ்சமே நீ நினைவாயாக. |
(வி-ரை) இழவாடி - உயிர் போகும் நிலைபற்றிக் கருதி; ஆடுதல் - கருதிக் கூடி யிரங்குதல்; கூடிவிழ - கூடி வீழ்ந்திரங்க; ஆவி பிரியும்போது சுற்றத்தார் நிலத்தில் வீழ்ந்தும் பிணத்தின்மேல் வீழ்ந்தும் அழும்நிலை குறித்தது. "பாவை மேல் விழுந் தழுதது" (2961) (திருஞான -புரா-1062). வாடி - வாட்டமுற்று; மழபாடி - சோழநாட்டில் காவிரி வடகரையில் 54-வது பதி. 18 |
19. திரு ஆப்பாடி |
| | உள்ளிடத்தான் வல்லையே நெஞ்சமே யூழ்வினைகள் கள்ளிடத்தான் வந்து கலவாமுன் - கொள்ளிடத்தின் தென்றிருவாப் பாடியான் றெய்வமறை நான்கினையுந் தன்றிருவாய்ப் பாடியான் றாள். 19 | |
(இ-ள்) ஊழ்வினைகள்...முன் - முன்செய்த ஊழ்வினைகள் உயிரைக் கொள்ளை கொள்ளுவதற்காக வந்து கலந்து கொண்டு போவதன் முன்னே; கொள்ளிடத்தின் தென்திரு ஆப்பாடியான் - கொள்ளிடத் திருநதியின் தென்கரையில் உள்ள திருஆப்பாடி என்னும் பதியில் எழுந்தருளிய இறைவரும்; தெய்வமறை....பாடியான்தாள் - தெய்வத் தன்மை தருகின்ற வேதங்கள் நான்கினையும் தமது திருவாயினாலே பாடியவரும் ஆகிய இறைவரது திருவடியை; நெஞ்சமே - நெஞ்சே; உள்ளிடத்தான் வல்லையே - நினைக்க வல்லாயோ; நினைக என்றபடி. |
(வி-ரை) நெஞ்சே! ஊழ்வினைகள் கள்ளிட வந்து கலவா முன் - தாள் - உள்ளிட - வல்லையே; (வல்லையாயின் உள்குக) என்று கூட்டுக. |