| பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம் | 358 |
ஆதலால், முதலாம் நந்திவர்மனும், பாண்டி நாட்டில் அரசு புரிந்த மூர்த்தி நாயனாரும், சோழநாட்டில் அரசு செய்த புகழ்ச் சோழர் - திருவாரூர்ச் சோழரும், படைவலியும் அருள் வலியும் மிக்க களத்தூர் வேந்தர் கூற்றுவநாயனாருடன் நட்புரிமை பூண்டு, ஒற்றுமையாக அரசு புரிந்தார்கள். அக்கூட்டு ஆட்சியில் கூற்றுவ நாயனாரே தலைமை வகித்து ஆட்சிபுரிந்து வந்தார். அதனாலன்றோ நம்பியாண்டார் நம்பிகள் "ஓதம் தழுவிய ஞாலம் எல்லாம் ஒரு கோலின் வைத்தான், கோதை நெடுவேற் களப்பாள னாகிய கூற்றுவனே" என்றனர். | கூற்றுவநாயனார் அருள்வலிகொண்டு களப்பிரரைத் தொண்டை மண்டலத்தை விட்டு, விரட்டிவிட்ட உடனே, வடக்கே வேங்கடமும், ஏனைய மூன்று பக்கங்களிலும் கடலால் சூழப்பட்ட தமிழ்நாடு முழுதும் ஒரு குடைக்கீழ்க் கொண்டு வந்து முடியுடை அரசர்களுடைய திருவெல்லாம் எய்தியவராக ஆனார். இதனை, | | | "மன்றன் மாலை மிலைந்தவர்தம் வளநா டெல்லாம் கவர்ந்துமுடி ஒன்று மொழிய அரசர்திரு வெல்லாம் உடையார் ஆயினார்" | என்று சேக்கிழார் கூறுவதனைக் கொண்டு அறியலாம். ஆதலால், கூற்றுவநாயனார் முடியுடை அரசர்கள் போலத் தாம் முடி சூட்டிக் கொள்ளக் கருதித், தில்லை சென்று, தில்லைவாழ் அந்தணர்களை முடிசூட்டும்படி கேட்டார். அவர்கள், "செம்பியர்தம் தொல்லை நீடு குலமுதலோர்க்கு அன்றிச் சூட்டோம் முடி" என்று கூறித், தம்முள் ஒரு குடும்பத்தை மாத்திரம் தில்லையில் இருந்து முடியைக் காப்பாற்றும்படி செய்து, ஏனைய எல்லோரும் மலைநாடாகிய சேர நாட்டுக்குச் சென்று, அந்நாட்டு அரசன் ஆதரவில் இருந்தார்கள் (Vide:-4-5 கூற்று - புராணம்). இதனை அறிந்து, நாயனார் தில்லைக் கூத்தப் பெருமானிடம் முறையிட்டுத் தமக்கு முடிக்குப் பதிலாகப் பெருமான் மலர்ப்பாதமே முடியாக அளிக்கவேண்டுமெனப் பிரார்த்தித்து வேண்டினார். அன்று இரவு கனவில் கடவுள் பாதமலர் அளிக்க, அருளால் அவை தாங்கி உலகமெல்லாம் தனிப்புரந்து வந்தார். இதனைக்(கூற்றுவ நாயனார் புராணம் 6) பாட்டால் அறியலாம். | அப்படி ஆட்சிசெய்யும் காலத்தில், தமிழ்நாட்டுக் கோவில்கள் தோறும் சென்று, பெரும் பூசனை இயற்றித், திருப்பணிகள் பல செய்து, பல ஆண்டுகள் அமைதிபெற நாட்டை அரசுபுரிந்து, இறுதியில் உமையவள் கணவன் திருவடி அடைந்தார். இதனை:- | | | "அம்பொ னீடு மல்பலத்துள் ஆரா வமுதத் திருநடஞ்செய் தம்பி ரானார் புவியின்மகிழ் கோயில் எல்லாம் தனித்தனியே இம்பர் ஞாலம் களிகூர எய்தும் பெரும்பூ சனையியற்றி உம்பர் மகிழ அரசளித்தே உமையாள் கணவன் அடிசேர்ந்தார்." | என்ற சேக்கிழார் திருவாக்கால் அறியலாம். இப்படி அவர் முத்தி எய்தியது கி.பி.575 என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். கி.பி.575ல் நாயனார் முத்தி அடைந்தபின், தொண்டைநாட்டில் அங்கங்கே தலைமறைவாக இருந்த களப்பிரர் எல்லாம் மறுபடியும் படைதிரட்டிப் பல்லவரோடு போர் தொடுத்தார்கள். கி.பி. _____________________ | துரத்தி மூர்த்தி நாயனார் அரசாண்ட செய்திகளும் - பிறவும் நாட்டு நடப்புச் சரிதங்களாலும், கல்வெட்டுக்களாலும், பெரிய புராணம் திருவிளையாடற் புராணம் முதலியவற்றாலும் இனிது விளங்கும். இங்குத் திருமந்திரமணி அவர்கள் முறையே தொண்டைநாடு சோழநாடு பாண்டிநாடு என்ற இவற்றின் அந்நாட் சரிதங்களை விரித்து எழுதியிருக்கின்றார். - பதிப்பாசிரியர். | | |
|
|